ஏன் இரவு தூங்கவேண்டும்? தூக்கத்தில் உள்ள அறிவியல் காரணம் என்ன? இரவில் நிம்மதியாக தூங்குவது எப்படி? தூக்கத்தின் பயன்கள், மனிதன் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?
தூக்கம் மனிதர்களுக்கு கிடைத்த வரம். ஒரு மனிதன் தூங்குவதால் மட்டுமே மூளை புத்துணர்ச்சி அடைகிறது. மூளை சுத்திகரிப்பு அடைகிறது.
ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலமான 78 வருடங்களில் 28 வருடங்கள் தூங்கியே கழிக்கின்றான். தூக்கம் அந்த அளவு மனிதனுக்கு இன்றியமையாத தாகிறது.
தூக்கத்தில் உள்ள அறிவியல் காரணம் என்ன?
ஏன் இரவு தூங்க வேண்டும்? தூக்கம் மனித உடலுக்கும், மூளைக்கும் பல வழிகளில் உதவி செய்கிறது. தூக்கத்தின் முதல் நோக்கம் “மறுசீரமைப்பு” ஆகும்.
மனிதனின் மூளை ஒவ்வொரு நாளும் வளர்சிதை மாற்றக் கழிவுகளைக் குவிக்கிறது. இந்தக் கழிவுப்பொருடகளின் அதிகமான குவிப்பு ‘அல்சைமர்‘ என்ற நரம்பியல் நோய் ஏற்படக் காரணமாகிறது.
மூளை சுத்திகரிப்பு எப்படி நிகழ்கிறது?
ஒவ்வொரு இரவும் மூளை சுத்ததப்படுத்தப்படும். இந்த மூளை சுத்திகரிப்பு நிகழ தூக்கம் ஒரு முக்கிய பங்குவகிக்கிறது. காலையில் எழுந்ததும் பிரஷாக உள்ளது என்று கூறுவது இதனால் தான்.
தூக்கத்தின் போது மூளையில் உள்ள செல்கள் 60 சதவீதம் சுருங்கி மூளையின் கழிவு நீக்க அமைப்பு என்றழைக்கப்படும் கிளிம்போடிக் அமைப்பு வழியாக கழிவை வெளியேற்றுகின்றது.
குடிக்கும் பானத்தில் மாதவிடாய் ரத்தம் கலக்கும் பெண்கள் - தலைமுறை ரகசியம் !இது மனிதனுக்கு தெளிவான மனப்போக்கு ஏற்படக் காரணமாகிறது. தூக்கத்தின் இரண்டாவது நோக்கம் நினைவக ஒருங்கிணைப்பு ஆகும். இது உங்கள் நீண்ட கால நினைவுகளைப் பராமரித்து புலப்படுத்துகிறது.
சரியான தூக்கம் இல்லாமை உறுதியான நினைவுகளையும், உணர்ச்சிகளை உருவாக்கும் திறனைத்தடுக்கிறது. தூக்கம் வளர்சிதை மாற்றத்திற்கும் முக்கியப்பங்கு வகிக்கிறது.
மனிதன் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?
எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் எனில், ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 8 முதல் 9 மணி நேரங்கள் தூங்குவது அவசியமாகிறது. குறைந்த தூக்கமானது உடலின் பல செயல்களை குறைக்கிறது.
அதேபோன்று அதிகமாகத் தூங்குவதும் பாதிப்பை உண்டாக்குகிறது. உடல் சோர்வு, மறதி போன்ற பல உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கிறது.
ஒரு மனிதன் தினசரி சரிவரத் தூங்காமல் வார இறுதியில் நன்றாகத் தூங்கலாம் என்று நினைப்பது தவறு.
ஒரு மனிதனுக்கு ஒவ்வொரு இரவும் போதுமான தூக்கம் அவசியமாகிறது. நீங்கள் என்றாவது சரிவரத் தூங்கவில்லை என்றால் நிச்சயமாகக் கூடுதல் தூக்கம் பெற முயற்சி செய்ய வேண்டும்.
தூக்கம் எவ்வாறு உண்டாகிறது?
ஒவ்வொரு நாளும், தூங்கும் நேரத்தின் தரம் தூக்க சுழற்சி என்றழைக்கப்படுகிறது. தூக்க சுழற்சி இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது.
ஒன்று மிதமான தூக்கம். மிதமான தூக்கத்தில் சுவாசம் சீராக இருக்கும், இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும் மற்றும் மூளையின் வெளித்தூண்டுதலுக்கு குறைவாக பதிலளிக்கிறது.
இரண்டு ஆழ்ந்த தூக்கம். இந்த வகையான தூக்கத்தில் எழுந்திரிப்பது மிகவும் கடினம். ஆழ்ந்த தூக்கத்தின் போது பிட்யூட்டரி சுரப்பி வளர்ச்சி ஹார்மோன்களை வெளியிடுகிறது.
இது திசு வளர்ச்சி மற்றும் தசைப் பழுவைத் தூண்டுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியையும் தூண்டுகிறது.
சிறப்பாக தூங்குவது எப்படி?
கணினி திரைகள், தொலைக்காட்சி மற்றும் தொலைப்பேசிகளில் இருந்து வரும் வெளிச்சம் மெலடோனின் உற்பத்தியைத் தடுக்கிறது.
அதாவது, உங்கள் உடலில் தூக்கத்திற்காக நுழைய வேண்டிய ஹார்மோன்களைத் தயார் செய்யவில்லை என்பதாகும்.
தூக்கத்திற்கான மெலடோனின் உற்பத்தியை அதிகரிக்க தூங்குவதற்கு முன் மின்சாதனங்கள் உபயோகப் படுத்துவதை குறைக்க வேண்டும்.
இரவு அதிக நேரம் வேலை செய்வதால் மன அழுத்தம் உண்டாகும். இதனால் உடல் தூக்கத்தை ஏற்க தாமதமாகிறது. புத்தகம் படிப்பதில் மூளையின் செயல்திறன் அதிகரிக்கிறது.
50 சதவீத இன்சோம்னியா நோயானது, உணர்வு அல்லது மனஅழுத்தம் தொடர்புடையவை என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
தூங்கும் அறையின் வெப்பநிலை எவ்வளவு இருக்க வேண்டும்?
தூங்கும் அறையின் வெப்பநிலை எவ்வளவு இருக்க வேண்டும்? தியானம், உடற்பயிற்சி மற்றும் ஆழமான சுவாசப் பயிற்சி மூலம் சிறப்பான தூக்கத்தைப் பெறலாம். நல்ல இசை கேட்டு தூங்கலாம்.
ஒரு மனிதன் குளிர்ந்த அறையில் தூங்கக் கூடாது.
மாறாக 65 முதல் 70 டிகிரி ஃபேரன்ஹீட் வெப்பநிலையில் தூங்குவது நல்லது. புகையிலைப் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது. படுக்கை அறையை படுக்கைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.