பண்டைய கால எகிப்தியர்கள் நாம் ஆச்சரியப்படும் விதத்தில் மிகவும் வித்தியாசமாக வாழ்த்திருக்கிறார்கள்.
நடுங்கும் வகையில் எகிப்தியர்கள் செய்த வெறித்தனமான விஷயங்கள்
அவர்கள் வாழ்க்கை முறையில் உள்ள மிகவும் சுவாரஸ்யமான 7 விஷயங்களை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஆண்களின் வீரம் அறிய
ஆண்களின் வீரம் அறிய
பண்டைய கால எகிப்தியர்கள் ஆண்களை மிக வீரம் உடையவர்களாக கருதி இருக்கிறார்கள். அப்போது எல்லா ஆண்களும் வீரர்களா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.

அதற்கு ஒருமுறையை பின்பற்றி இருந்திருக்கிறார்கள். அது என்ன வென்றால் ஆண்களில் அந்தரங்க உறுப்பின் முன் தோலை எடுப்பது. 
 
ஆனால் இதை எகிப்தியர்கள் வித்தியாசமான முறையில் பின்பற்றி இருக்கிறார்கள்.

அதை எப்படி செய்வார்கள் என்றால் 150 ஆண்கள் சூழ்ந்து நிற்க்க ஒருவரின் இரண்டு கைகளையும் இறுக பிடிக்க கத்தி எதுவும் பயன்படுத்தாமல் ஒரு கல் வைத்து அந்த பகுதியை நசுக்கி இருந்திருக்கிறார்கள்.

ஒருவர் இந்த வலியை எவ்வளவு நேரம் பொறுத்து கொள்கிறாரோ அதை வைத்து தான் அவர்களின் வீரத்தை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். 
இந்த காலத்தில் இப்படி ஒரு வீர விளையாட்டு இருந்திருந்தால் ஆண்களே நினைத்து பாருங்கள்!

கர்ப்பமாவதை அறிய
கர்ப்பமாவதை அறிய
அந்த காலத்தில் வாழ்ந்த எகிப்திய பெண்கள் தாங்கள் கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொள்ள ஒரு வித்தியாசமான முறையை பின்பற்றி இருந்திருக்கிறார்கள். 

அது என்னெ வென்றால் அவர்கள் கோதுமை செடியின் கீழ் சிறுநீர் கழித்திருக்கிறார்கள்.

ஒரு வேளை அந்த செடி நன்கு வளர்ந்தது என்றால் அவர்கள் கர்ப்பமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். 
 
ஒரு வேளை அந்த செடி பட்டு போனது என்றால் அவர்கள் கர்ப்பமாக இல்லை என்று அர்த்தமாம்.

இதை ஆராய்ச்சி செய்து பார்த்த நிபுணர்கள் கூட இதனை உண்மை என்றே சொல்லி இருக்கிறர்கள். 
 
அந்த காலத்தில் பெண்கள் கூட எவ்வளவு திறமை சாலிகளாக இருந்திருக்கிறார்கள் பாருங்கள்.

கண்களை அழகுபடுத்த
கண்களை அழகுபடுத்த
பாலைவனத்தில் வாழ்ந்த எகிப்தியர்களுக்கு அடிக்கடி அவர்களுடைய கண்களை சுத்தம் செய்ய வேண்டி இருந்தது. 

இதனால் அவர்கள் சுமார் 5000 வருடங்களுக்கு முன்பு ஒரு வித்தியாசமான திரவத்தை தயாரித்திருக்கி றார்கள்.
அதில் சேர்க்கப்பட்ட மூலப் பொருட்கள் தெரிந்தால் உங்களுக்கு வாந்தி வந்து விடும். ஏனென்றால் அவர்கள் தேனுடன் மனித மூளையை சேர்த்து இந்த திரவத்தை தயாரித்திருக்கி றார்கள்.

5000 வருடங்களுக்கு முன்பு காண்டம்
5000 வருடங்களுக்கு முன்பு காண்டம்
எகிப்தியர்களின் வித்தியாசமான விஷயங்களில் ஒன்று 5000 வருடங்களுக்கு முன்பே காண்டம் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

ஏனென்றால் அந்த காலத்தில் மக்கள் தொகை அதிகமாக இருந்திருக்கிறது. இதனால் மக்கள் தொகையை குறைப்பதற்காக காண்டத்தை கண்டு பிடுத்து பயன்படுத்தி இருந்திருக்கிறார்கள்.

இதற்கு அவர்கள் பயன்படுத்திய பொருள்களை கேட்டால் அசந்து போவீர்கள். தேன், மணல், முதலை சாணி இந்த மூன்று பொருள்களையும் பயன்படுத்தி ஒரு பேஸ்ட் தயாரித்திருக்கிறார்கள்.
இதனை அவர்கள் பயன்படுத்திய விதத்தை பார்த்தால் மிகவும் ஆச்சர்யமாக இருக்கும். 
 
பெண்கள் தான் இந்த பேஸ்ட்யை தங்கள் அந்தரங்க உறுப்பில் தடவி கர்ப்பமாவதை கட்டுப்படுத்தி இருந்திருக்கிறார்கள்.

தலை முடி
தலை முடி
எகிப்தியர்களுக்கு உடலில் புருவங்கள் தவிர வேறு எந்த பகுதிகளிலும் முடி வைத்திருப்பது அவர்களுக்கு பிடிப்பதில்லை. 
 
அதனால் அவர்கள் தங்கள் முடிகளை முற்றிலும் அகற்றி விட்டு விக் தான் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

வசதி படைத்தவர்கள் மனித முடியினால் செய்த விக்குகளையும், நடுத்தரப்பட்ட மக்கள் ஆட்டின் ரோமங்களை கொண்டு செய்யப்பட்ட விக்குகளையும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

108 மனைவிகள்
108 மனைவிகள்
இந்த நவீன காலத்தில் ஒரு மனைவியை வைத்து சமாளிக்க முடியாத சமயத்தில் 3300 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தியர் ஒருவர் 108 பெண்களை திருமணம் செய்து 100 குழந்தைகளையும் பெற்றுள்ளார். 
அது மட்டுமல்லாமல் அந்தப்புரத்தில் மனைவிகள் இல்லாத 90க்கும் மேற்பட்ட பெண்களை வைத்திருக்கிறார்.

நாள்காட்டி

5000 வருடத்திற்கு முன்பு வாழ்ந்த எகிப்தியர்கள் கணக்கில் மிகவும் திறமைமிக்கவர்களாக இருந்திருக்கின்றனர். 
 
வருடத்திற்கு 12 மாதங்கள் என்றும் மாதம் 30 நாள்கள் என்றும் நாள்காட்டியை உருவாக்கி இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இப்போது நாம் கோடைகாலம், குளிர்காலம், இலையுதிர்காலம் என காலநிலையை வேறுபடுத்தி வைத்திருப்பதை போல
நாள்காட்டி
5000 வருடங்களுக்கு முன்பு பயிரிடுதல், பயிர் வளர்த்தல், அறுவடை என காலநிலையை மூன்றாக வகைப்படுத்தி இருந்திருக்கின்றனர்.

இந்த காலநிலை படி பயிரிடுதலை இவர்கள் தவறாக செய்து விட்டால் அங்குள்ள பயிர்களை நைல் நதி வெள்ளம் மொத்தமாக இழுத்து சென்று விடுமாம். 

அதனால் காலநிலையை எந்த தவறுகளும் வராமல் பின்பற்றி வந்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு கணித முறையை பயன்படுத்த வேண்டுமானால் அவர்கள் எவ்வளவு திறமை படைத்தவர்களாக இருந்திருக்க வேண்டும். 
 
இப்போது உங்களுக்கு சந்தேகம் எழுந்திருக்கலாம் ஒரு வருடத்தில் 365 நாள்கள் உண்டு.

ஆனால் மாதம் 30 நாள்கள் என்றால் 360 நாள்கள் தான் வரும். மீதமுள்ள 5 நாள்களை அவர்கள் சேர்க்கவில்லை என்று நினைக்கிறீர்களா? 

ஆம், மீதம் உள்ள 5 நாள்களை அவர்கள் அறுவடை எல்லாம் முடித்து ஓய்வு எடுத்து அந்த நாள்களை குதூகலமாக கொண்டாடி வந்திருக்கிறார்கள்.