அழகுக்கு அழகு சேர்க்கும் எளிய அழகு குறிப்புகள் !

Fakrudeen Ali Ahamed
0
*கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபி ள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடு நீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.
அழகுக்கு அழகு சேர்க்கும் அழகு குறிப்பு
 * ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.

* பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.

* பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.
* பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர் ந்து தடவி வர முகப் பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும்.

* புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு பெறு ம். இதை தொடர்ந்து ஒரு மாதம் செய்து வர நல் ல பலன் கிடைக்கும்.

* தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை உதட்டின் மீது தொடர்ந்து தடவி வந்தால், தரம் குறைந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவ தால் ஏற்படும் கருமை நிறம் மறை யும்.

தயிருடன் கடலை மாவு கல ந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழி த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வ தால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்.
கிளிசரினுடன் ரோஸ் வாட்டர்
* உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற் றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவலாம்.

* முகம் மிருதுவாகவும், ரோஸ் நிறத்துடனு ம் இருக்க ரோஜாப் பூ இதழ்களை அரைத்து, 
 
அதோடு பால், பச்சை பயிறு மாவு, மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர சருமம் பளபளக்கும்.

* கரும்புள்ளி உள்ள இடத்தில்,பச்சை பயிரு டன் தயிர் சேர்த்து தடவ வேண்டும். 
 
அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன் கு தேய்த்து பின் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.
* கடலைமாவு 6 டீஸ்பூன், பாலாடை இரண்டு டீஸ்பூன், எலுமிச் சம்பழச் சாறு 10 சொட்டு, கிளிசரின் ஒரு டீஸ் பூன் கலந்து தினம் ஒரு முறை முகம், கை, கழுத்து பகுதிகளில்,

தடவினால் வெயிலினால் ஏற்படும் கருமையை போக்கலாம். பப்பாளி கூழுடன் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தாலும் நல்லது.
வெள்ளரிச்சாறு
* வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலை மாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந் தால் முகம் பிரகாசமாக இருக்கும்.

*செம்பருத்தி இலையை அரைத்து தலை க்கு தேய்த்து குளித்தால் முடியின் தன்மை மிருதுவாகவும் ,முடியின் வளர்ச்சி நற்றக இருக் கும் .

* நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்திக் காட்டலாம். வைட்டமின்கள், தாதுப் பொருட்களை உணவில் சேர்த்து கொ ள்ள வேண்டும். 
காய்கறி, பழங்களையும் அ திகளவில் சாப்பிட வேண்டும். மேலும் சில பயனுள்ள குறிப்புகள் !

1. தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வலம் வருவீர்கள். சோர்வு என்பதே எட்டி ப்பார்க்காது.

2. தினமும் காலையில் எழுந்ததும் பழங்கள் சாப்பிடுவது இளமையை அதிகரிக்கும். குறிப்பாக, ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளிப் பழங்கள் சாப்பிடுவது நல்லது.

3. தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந் தால் உடலில் ஒருவித மினுமினுப்பை பெற லா ம்.

4. தினமும் காலை, மாலை வேளைகளில் 5 நிமிடம் மூச்சுப் பயிற்சி செய்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் நீங்கள் புத்துணர்ச்சி யோடு காணப்படுவீர்கள்.
எளிய அழகு குறிப்புகள்
5. கறிவேப்பிலையின் இளம்இலைக ளை காய வைத்து பொடியாக்கி, அதை தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி கரு கருவென்று வளரும்.

6. தயிருடன் கடலைமாவு சேர்த்து முக த்தில் அப்ளை செய்து வந்தா ல் முகப்பரு தொல்லை இருக்காது.
7. இரண்டு டீஸ்பூன் தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு நான்கு சொட்டு கலந்து குடித்து வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.

8. தோலில் உள்ள மருக்கள் மற்றும் கரும் புள்ளிகளை பப்பாளி நீக்குகிறது. இதற்கு பப்பாளி பழத்தை மசித்து அதனுடன் 1 ஸ்பூன் தேன் சேர்த்து கல ந்து முகத்தில் பூசி வர வேண்டும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)