உடை அணிவதில் செய்யும் தவறுகளால் ஏற்படும் பாதிப்புகள் !

Fakrudeen Ali Ahamed
0
நாம் ஃபேஷனாக நினைக்கும் ஒவ்வொன்றும் நமது உயிரை ஏதோ ஒரு வகையில் பறிக்கும் விஷமாக தான் இருக்கிறது. பெண்கள் தினந்தோறும் பயன்படுத்தும்
 உடை அணிவதில் செய்யும் தவறு
அலங்கார பொருட்கள் தான் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணியாக இருக்கிறது என்று அவர்களுக்கே தெரிவது இல்லை.

அது போல நமது உடல் அலங்காரமும். ஸ்கின் ஃபிட் ஜீன்ஸ் என்ற ஒன்றை விரும்பி அணிகிறோம் அது, ஆண், பெண் இருபாலருக்கும் பல உடல் நல பாதிப்புகள் ஏற்பட காரணியாக இருக்கிறது.
அதிலும் முக்கியமாக ஆண்களின் விறைப்பையை பாதிக்கிறது என்பது நிபுணர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்.

இது மட்டுமல்லாமல், நாம் நாகரீகம் என்ற பெயரில் அணியும் உடைகள் பல வகைகளில் உடல் நலத்தை பாதிக்கிறது. அதை பற்றி இனிக் காணலாம்.....

மார் கச்சு (curvy corset)
மார் கச்சு - curvy corset
உடல் வடிவு நன்கு அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக பெண்கள் அணியும் மார் கச்சு தான் இந்த curvy corset. 

இதனால், வயிறு மற்றும் மார்பு சார்ந்த உடல் பாகங்கள் இயங்க சிரமப்படுகிறது. சுவாச பிரச்சனைகளும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

ஸ்கின்னி ஜீன்ஸ்
ஸ்கின்னி ஜீன்ஸ்
நிபுணர்கள் இந்த ஸ்கின்னி ஜீன்ஸ் அணிவதால் நரம்பு மண்டலம் பாதிக்கிறது என்று கூறுகிறார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அயல்நாட்டில் ஓர் பெண் திடீரென மயங்கி
விழுந்து எழ முடியாமல் தவித்தார். மருத்துவமனைக்கு சென்ற போது தான் அவரது கால்களின் நரம்புகள் செயலிழந்துவிட்டன என்று கண்டறியப்பட்டது.

தாங் (Thong)
தாங் - Thong
ஓர் ஈர்ப்புக்காக அணியப்படும் இந்த உடை பெண்களுக்கு பிறப்புறுப்பு பகுதியில் பதிப்புகள் ஏற்பட காரணமாக இருக்கின்றன. சில ஃபேப்ரிக் வகைகள் அலர்ஜிகள் ஏற்படுத்தவும் செய்கின்றன.

லெக்கின்ஸ்
லெக்கின்ஸ்
தற்போது பெண்களை பேய் போல் ஆட்டிப் படைக்கும் உடை இந்த லெக்கின்ஸ். கம்போர்ட் என்று கூறி இவர்கள் இறுக்கமாக அணியும் இந்த உடை வியர்வை வெளியேற விடாமல் தடுக்கிறது.
ஆகையால் வியர்வை சருமதிலேயே ஒட்டிக் கொள்கிறது. இதனால், சரும பிரச்சனைகளும், அலர்ஜிகளும் ஏற்படும்.

ஸ்விம்மிங் உடை
ஸ்விம்மிங் உடை
ஸ்விமிங் செய்வதற்கு இந்த உடையை தவிர வேறு உடை இல்லை தான். ஆனால், நீச்சலடித்தவுடன், உடனடியாக இந்த உடையை மாற்றிவிட்டு, உங்கள் பிறப்புறுப்பு பாகங்களை நன்கு கழுவி, எரம் போகும் வரை துடைக்க வேண்டும்.

இல்லையேல், நீச்சல் குளத்து நீரில் இருந்து பரவிய பாக்டீரியா தொற்றுகள்,ம் பிறப்புறுப்பு பகுதிகளில் தொற்று அல்லது அலர்ஜிகள் ஏற்படுத்திவிடும்.

சாயங்கள் பயன்படுத்தப்பட்ட உள்ளாடைகள்
சாயங்கள் பயன்படுத்தப்பட்ட உள்ளாடைகள்
இன்று வண்ண வண்ணமாக, டிசைன் டிசைனாக தான் உள்ளாடைகளை விரும்புகிறார்கள். ஆனால், அந்த ஃபேப்ரிக்கில் சேர்க்கப்படும் சாயங்கள், நீங்கள் இறுக்கமாக அணியும் போது,
வியர்வையோடு சேர்ந்து வெளியாகும் போது, சருமத்திற்கு பாதிப்புகள் ஏற்படுத்துகிறது. பிறப்புறுப்பு பகுதியில் ஃபங்கஸ் தொற்றுகள் ஏற்பட இது வழிவகுக்கலாம்.

மார்பக கச்சுகள் (Bra)
மார்பக கச்சுகள் - Bra
அனைத்திலும் ஃபேஷன் எதிர்பார்க்கும் வழக்கம் வந்துவிட்டதால், மார்பகம் மிக கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள்.

இதற்காக இறுக்கமாகவும், மார்பகத்தை எடுப்பாக காட்டும் பிரா அவர்கள் அணிவதால், மார்பகத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் குறைபாடு ஏற்படுகிறது.
இவை எல்லாம் நாள்பட்ட பிறகு தான் அறிகுறிகளை வெளிபடுத்துகிறது என்பதால் பெண்களுக்கு இதை பற்றி ஏதும் தெரிவதில்லை.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)