முடியின் அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமா?

Fakrudeen Ali Ahamed
0
சிலருக்கு முடி அடர்த்தி இல்லாமல் இருக்கும். இதற்கு முடிக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைக்காதது தான் முக்கிய காரணம். அதிலும் மழைக்காலம் ஆரம்பித்து விட்டது.
முடியின் அடர்த்தியை அதிகரிக்க
இக்காலத்தில் முடி அதிகம் கொட்ட ஆரம்பிக்கும். எனவே இக்காலத்தில் சரியான பராமரிப்புக்களை கொடுக்க வேண்டும்.

இல்லாவிட்டால், நாளடைவில் வழுக்கைத் தலை ஏற்படும். குறிப்பாக, ஆண்கள் தங்களுக்கு முடி கொட்ட ஆரம்பித்தால், உடனே அதனை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
இல்லையெனில், முடியின் அடர்த்தி மெதுவாக குறைந்து, பின் வழுக்கையை சந்திக்க நேரிடும். அதுவே பெண்களை எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு முடியின் அடர்த்தி குறைந்து, எலி வால் போல் ஆகிவிடும்.

எனவே உங்களுக்கு முடி அடர்த்தியாக இல்லாமல், உதிர்ந்து கொண்டே இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில இயற்கை வைத்தியங்களை பின்பற்றி வாருங்கள். இதனால் நிச்சயம் உங்கள் முடியின் அடர்த்தியை அதிகரிக்கலாம்.

சரி, இப்போது முடியின் அடர்த்தியை அதிகரிக்க உதவும் இயற்கைப் பொருட்களைப் பார்ப்போமா! 

முட்டையின் வெள்ளைக்கரு
முட்டையின் வெள்ளைக்கரு
ஒரு பௌலில் இரண்டு முட்டையின் வெள்ளைக் கருவை ஊற்றி, அதில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.
இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால், முடிக்கு வேண்டிய புரோட்டீன் கிடைத்து, முடியின் அடர்த்தி அதிகரிக்க ஆரம்பிக்கும். 

ஷாம்பு
ஷாம்பு
தினமும் தலைக்கு குளிப்பவராக இருப்பின், ஷாம்புவிற்கு பதிலாக, 3-4 ஸ்பூன் பேக்கிங் சோடாவை 3/4 கப் நீரில் கலந்து, அதனைக் கொண்டு முடியை அலச வேண்டும்.

இது நல்ல ஷாம்பு போன்று செயல்படுவதோடு, முடியின் அடர்த்தியையும் மேம்படுத்தும். அவகேடோ மற்றும் வாழைப்பழத்தை நன்கு மசித்து, அதனை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும்.
இதனால் பழங்களில் உள்ள வைட்டமின்கள் மயிர்கால்களுக்கு கிடைத்து, முடி நன்கு வலிமையோடும், அடர்த்தியாகவும் இருக்கும். 

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய்
பழங்கால முறைப்படி தேங்காய் எண்ணெயை சூடேற்றி, அதனைக் கொண்டு மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால், முடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் இருப்பதைக் காணலாம்.

முடிக்கு கண்டிஷனர் போடும் போது, அந்த கண்டிஷனருடன் ஓட்ஸை பொடி செய்து சேர்த்து, பின் போட்டு வந்தால், முடியின் அடர்த்தி அதிகரிக்கும். 

வெங்காயச்சாறு
 வெங்காயச்சாறு
வெங்காயச் சாறு முடியின் அடர்த்தியை அதிகரிக்கும் பொருட்களுள் சிறப்பான ஒன்று. இது முடி உதிர்வதையும் குறைக்கும்.
எனவே வெங்காய சாற்றினை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, வாரம் ஒருமுறை தலையில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து அலசி வருவது நல்ல பலனைத் தரும். 

விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெயில் முடியின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் தேவையான எண்ணற்ற சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.

அதிலும் அதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் வைட்டமின்கள், முடியின் வளர்ச்சியைத் தூண்டுவதோடு, அடர்த்தியையும் அதிகரிக்கும்.

முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் நெல்லிக்காய். எனவே அந்த நெல்லிக்காயைக் கொண்டு முடியைப் பராமரித்தால், முடியின் வளர்ச்சியும், அடர்த்தியும் அதிகரிக்கும். 

மருதாணி
 மருதாணி
மருதாணி முடிக்கு நிறத்தைக் கொடுப்பதோடு, ஹென்னா முடியை பட்டுப் போன்றும் பொலிவோடும் மின்ன உதவும். 
மேலும் மருதாணி பொடியை மாதம் ஒருமுறை தலைக்கு பயன்படுத்தி வந்தால், முடியின் அடர்த்தியும் மேம்படும்.

உங்கள் கைகள் கூட முடியின் அடர்த்தியை அதிகரிக்கும். அதற்கு தினமும் சிறிது எண்ணெயை தலைக்கு தடவி 10-15 நிமிடம் மசாஜ் செய்து வர வேண்டும். 

இதனால் தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முடியின் வளர்ச்சி தூண்டப்பட்டு, அடர்த்தியும் அதிகமாகும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)