பெட்ரோலியம் ஜெல்லியின் 23 வகையான பயன்கள் !

Fakrudeen Ali Ahamed
0
எல்லா வீடுகளிலும் பெட்ரோலியம் ஜெல்லி தடிப்புகள், சிறிய வெட்டுக்காயங்கள், பாத வெடிப்புகள், உதடு வெடிப்புகளை குணப்படுத்த உதவுகிறது.
பெட்ரோலியம் ஜெல்லியின் 23 வகையான பயன்கள்
ஆனால் இவற்றை தவிர பெட்ரோலியம் ஜெல்லி வேறு பல பயன்களை உள்ளடக்கி யுள்ளது. அவற்றை குறித்து இங்கு பார்ப்போம்.
1) கண்களில் உள்ள மேக் அப்பை கலைக்க:
கண்களில் உள்ள மேக் அப்பை கலைக்க
மேக் அப் ரிமூவர் தீர்ந்து விட்டதா? பதட்டப்பட வேண்டாம். சிறிது பெட்ரோலிய ஜெல்லியை பஞ்சில் எடுத்து மேக் அப்பை சுலபமாக எடுத்துவிடலாம்.

2) லிப் க்ளாஸாக பயன்படுத்தலாம்:
லிப் க்ளாஸாக பயன்படுத்தலாம்
உங்களுக்கு பிடித்த ஐ ஷாடோவை சிறிதளவு பெட்ரோலியம் ஜெல்லியுடன் சேர்த்தால் உங்களுக்கு பிடித்தமான லிப் க்ளாஸ் தயார்.

3) வாசனை பொருளாக:
வாசனை பொருளாக
நீண்ட நேரம் வெளியே சுற்ற வேண்டுமா? கவலைப்பட வேண்டாம். சிறிதளவு பெட்ரோலியம் ஜெல்லியை உங்கள் கை கால் முட்டிகளில், கைகளில், கால்களில் தடவிக் கொள்ளுங்கள்.
நீங்கள் செய்யும் இந்த தவறுகள் தான் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது தெரியுமா?
அதன் மீது உங்களுக்கு பிடித்தமான வாசனை திரவியத்தை பூசுங்கள். நாள் முழுவதும் மணமாக இருக்கும்.

4) தடிமனான புருவங்களுக்கு:
தடிமனான புருவங்களுக்கு
புருவங்கள் சரியான வடிவத்தில் இல்லையா? சிறிது பெட்ரோலியம் ஜெல்லி எடுத்து தடவி அழகான வடிவத்திற்கு கொண்டு வாருங்கள்.

5) ஹேர் டையிலிருந்து உங்கள் தோலை காப்பற்ற:
ஹேர் டையிலிருந்து உங்கள் தோலை காப்பற்ற
ஹேர் டை தடவும் பொழுது அது ஒழுகி உங்களின் நெற்றிக்கு வரலாம். எனவே, அதிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க, சிறிது பெட்ரோலியம் ஜெல்லியை உங்கள் நெற்றியில் தடவிகொள்ளுங்கள். இனி கறை படாது.
6) கரடுமுரடான முடி இருப்பவர்களுக்கு:
கரடுமுரடான முடி இருப்பவர்களுக்கு
தடிமனான முடி இருப்பவர்கள், அவர்களுக்கு பிடித்த ஹேர் ஸ்டைல் போடுவதில் பெரும் சிரமத்தை சந்திப்பார்கள்.

இந்த பிரச்சனைக்கும் சிறிது பெட்ரோலியம் ஜெல்லி தடவி, உங்களுக்கு பிடித்தமான ஹேர் ஸ்டைலை போட்டுக்கொள்ளுங்கள்.

7) மோதிரத்தை எளிதாக கழட்ட:
மோதிரத்தை எளிதாக கழட்ட
நீண்ட நாட்கள் மோதிரத்தை அணியும் பொழுது அதை விரல்களில் இருந்து அவ்வளவு சுலபமாக கழட்ட முடியாது.

இதை எளிதாக கழட்ட, மோதிரம் உள்ள பகுதியை சுற்றி சிறிது பெட்ரோலியம் ஜெல்லியை தடவி கழற்றினால், மோதிரம் எளிதாக வந்துவிடும்.

8) உங்கள் ஐ ஷாடோவிற்கு மேலும் மெருகூட்ட:
உங்கள் ஐ ஷாடோவிற்கு மேலும் மெருகூட்ட
பெட்ரோலியம் ஜெல்லியை சிறிது கண்களின் மீது தடவி அதன் பின்னர் உங்களுக்கு பிடித்த நிறத்தில் ஐ ஷாடோ போட்டுக்கொள்ளுங்கள்.
9) லிப்ஸ்டிக்கை மெருகூட்ட:
லிப்ஸ்டிக்கை மெருகூட்ட
பழைய லிப்ஸ்டிக் உபயோகப்படுத்தி உங்களுக்கு சலிப்பாக இருக்கிறதா? கவலை வேண்டாம்.

உங்களின் பழைய லிப்ஸ்டிக்கை உதட்டில் தடவி, அதன் மீது சிறிது பெட்ரோலியம் ஜெல்லி தடவுங்கள். உதடுகள் பளபளப்பாக இருக்கும்.

10) ஸ்க்ரபாக பயன்படுத்தலாம்:
ஸ்க்ரபாக பயன்படுத்தலாம்
சிறிது சமையல் சோடா மற்றும் பெட்ரோலியம் ஜெல்லி சேர்த்து, முகத்தில் தடவ, சருமத்தில் உள்ள வறட்சியை போக்கி, ஈரப்பதத்தை வழங்கி, சருமத்தை மென்மையாக்குகிறது.

11) இறந்த செல்களை நீக்க:
இறந்த செல்களை நீக்க
சக்கரை மற்றும் பெட்ரோலியம் ஜெல்லி சேர்த்து சருமத்தில் தடவ, அது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது.
12) சருமம் ஜொலிக்க:
சருமம் ஜொலிக்க
நீங்கள் எப்போதும் பயன்படுத்தும் இரவு கிரீம் உங்களுக்கு பிடிக்கவில்லையா? சிறிது பெட்ரோலியம் ஜெல்லியை முகத்தில் இரவு கிரீமாக தடவிக்கொள்ளுங்கள். காலையில் முகம் பளபளப்பாக இருக்கும்.

13) முடியில் உள்ள வெடிப்புகளை சரிசெய்ய:
முடியில் உள்ள வெடிப்புகளை சரிசெய்ய
நுனி முடியில் நிறைய பிளவுகள் உள்ளனவா? பார்லருக்கு சென்று முடி வெட்ட நேரமில்லையா? பதட்டப்பட வேண்டாம்.

சிறிது பெட்ரோலியம் ஜெல்லியை முடியில் தடவி உங்களுக்கு விருப்பமான ஹேர் ஸ்டைலை போட்டுக்கொள்ளுங்கள்.

14) இமை முடிகள் பளபளக்க:
இமை முடிகள் பளபளக்க
சிறிது பெட்ரோலியம் ஜெல்லியை கண் இமைகளில் படுக்க செல்வதற்கு முன் பூசுங்கள். இதனால் உங்கள் இமை முடிகள் ஈரப்பதத்துடனும் பளபளப்பாகவும் இருக்கும்.
15) புண்கள் கொப்பளங்களுக்கு:
புண்கள் கொப்பளங்களுக்கு
செருப்பு கடி மிகவும் வலி மிகுந்ததாக இருக்கும். மேலும், அவ்வளவு எளிதாக குணமாகாது.

எனவே, புது காலணி அணியும் பொழுது, நீங்கள் உராய்வு ஏற்படக்கூடும் என்று நினைக்கிற இடங்களில் பெட்ரோலியம் ஜெல்லியை தடவுங்கள். இதனால், செருப்பு கடியோ அல்லது கொப்பளங்களோ வராது.

16) ஷூக்கள் பைகள் பளபளக்க:
ஷூக்கள் பைகள் பளபளக்க
தோலினால் செய்யப்பட்ட பழைய பைகள் மற்றும் ஷூக்கள் ஏதேனும் இருந்தால் அதன் மீது சிறிது பெட்ரோலியம் ஜெல்லி தடவினால் புதியது போன்று தோற்றமளிக்கும்.
17) Manicureக்கு பிறகு:
Manicureக்கு பிறகு
Manicure செய்த பிறகு நகத்தின் நுனிகளில் சிறிது பெட்ரோலியம் ஜெல்லி தடவினால் இன்னும் மென்மையாக இருக்கும்.

18) பப்பில் கம் முடியில் ஒட்டிக்கொண்டால்:
பப்பில் கம் முடியில் ஒட்டிக்கொண்டால்
பப்பில் கம் முடியில் ஒட்டிக்கொண்டால் அதற்காக நீங்கள் முடியை வெட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அந்த பகுதியை சுற்றி கணிசமான அளவு பெட்ரோலியம் ஜெல்லியை தடவிக் கொள்ளுங்கள். மெதுவாக அதை இழுத்து கம்மை எடுத்து விடுங்கள்.
19) பிரிட்ஜில் உள்ள தட்டுகள் இடுக்கில் ஒட்டிக்கொண்டால்:
பிரிட்ஜில் உள்ள தட்டுகள் இடுக்கில் ஒட்டிக்கொண்டால்
நீங்கள் பிரிட்ஜை சுத்தம் செய்யும் பொழுது அதில் இருக்கும் தட்டுகள் அதன் இடுக்கில் சில நேரங்களில் சிக்கிக் கொள்ளுங்கள்.

இதனை தவிர்க்க அடுத்த முறை பிரிட்ஜை சுத்தம் செய்யும் பொழுது, இடுக்குகளில் சிறிது பெட்ரோலியம் ஜெல்லி தடவி வைத்தால் தட்டுகள் இடுக்கில் ஒட்டிக் கொள்ளாது.

20) குழந்தையின் கண்களில் ஷாம்பூ புகாமல் இருக்க:
குழந்தையின் கண்களில் ஷாம்பூ புகாமல் இருக்க
உங்கள் குழந்தைக்கு ஷாம்பூ உபயோகிக்கும் பொழுது... அது அவர்களின் கண்களில் புகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் இயற்கை ஜூஸ்கள் !
இதனை தவிர்க்க குழந்தையின் புருவத்தின் மேல் பெட்ரோலியம் ஜெல்லியை தடவினால், ஷாம்பூ குழந்தையின் கண்களில் விழாமல் விலகிச்செல்லும்.

21) உங்களின் செல்ல பிராணியின் உணவில் எறும்பு புகாமல் இருக்க:
உங்களின் செல்ல பிராணியின் உணவில் எறும்பு புகாமல் இருக்க
உங்கள் செல்ல பிராணிக்கு வைக்கும் உணவு தட்டை சுற்றி பெட்ரோலியம் ஜெல்லி பூசுங்கள். இதை தாண்டி எறும்புகளால் வர முடியாது.

22) பெயிண்ட் படாமல் இருக்க:
பெயிண்ட் படாமல் இருக்க
நீங்கள் நன்றாக கவனித்தீர்கள் என்றால், வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும் பொழுது அது கதவுகளின் கைப்பிடியில் படிந்துவிடும். பிறகு அதை சுத்தம் செய்வது இயலாத காரியமாக இருக்கும்.
பூரான் கடியா? மருந்து உண்டு !
எனவே, பெயிண்ட் அடிக்கும் முன்பு, கதவுகளின் கைப்பிடி மீது பெட்ரோலியம் ஜெல்லி தடவினால், பெயிண்ட் அதில் ஒட்டாது.

23) நெய்ல் பாலிஷ் சுலபமாக போட:
நெய்ல் பாலிஷ் சுலபமாக போட
நெய்ல் பாலிஷ் வைக்கும் பொழுது, அது கை விரல்களில் படுகிறதா? இப்போது நெய்ல் பாலிஷை மிக சுலபமாக வைக்கலாம்.
கர்ப்பிணிகளுக்கு தைராய்டு இருந்தால் குழந்தைக்கு பாதிப்பு தெரியுமா?
சிறிது பெட்ரோலியம் ஜெல்லியை கை விரல்களில் சுற்றித்தடவி பின்பு நெய்ல் பாலிஷ் இடுங்கள். இப்போது நெய்ல் பாலிஷ் விரல்களில் படியாது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)