கர்ப்பிணிகளுக்கு தைராய்டு இருந்தால் குழந்தைக்கு பாதிப்பு தெரியுமா?

தைராய்டு பிரச்சினை இருப்பவர்களுக்கு உடல் சோர்வு, அடிக்கடி மாதவிடாய் கோளாறு அதிக ரத்தப்போக்கு ஏற்படும். உடல் எடை கூடுதல், தோல் கடினத்தன்மை அடைவது ஆகியவை ஆகும். 
குழந்தைக்கு பாதிப்பு தெரியுமா?
தைராய்டு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்தலாம். கர்ப்பிணிகளுக்கு தைராய்டு குறைபாடு இருந்தால் அது கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும். 

கருவில் குழந்தை நன்கு வளர்வதற்குத் தாயிடமிருந்து தைராக்சின் ஹார்மோன், சரியான அளவில் சென்றாக வேண்டும். அப்படிக் கிடைக்காத போது, குழந்தைக்குக் குறை தைராய்டு ஏற்படுகிறது. 

இதனால், குழந்தையின் வளர்ச்சி பாதிப்படைகிறது. தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியின் கீழ்ப்பாதியில் இருக்கும் நாளமில்லா சுரப்பி. 
வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும் இதன் முக்கிய பங்கு தைராய்டு ஹார்மோன்களை சுரப்பது தான். 

உடலில் ஏற்படும் வளர் சிதை மாற்றங்களைக் கட்டுப்படுத்த தைராக்ஸின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. 

உடலில் உள்ள செல்கள் எந்த அளவு சக்தியைப் பயன்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்பவை இந்த ஹார்மோன்கள் தான். 

இதில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் அளவு அதிகரிப்பது, குறைப்பது இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும். நாம் உண்ணும் உணவில் அயோடின் சத்து குறைவாக இருந்தாலும் தைராய்டு குறைபாடு ஏற்படலாம்.
கர்ப்பிணிகளுக்கு தைராய்டு இருந்தால்
கார்போ ஹைட்ரேட், புரதம், கொழுப்பு முதலிய உணவுச் சத்துகளின் வளர்சிதை மாற்றப் பணிகளை ஊக்குவிப்பதும், புரதச் சத்தைப் பயன்படுத்தி உடல் வளர்ச்சியைத் தூண்டுவதும், 

சிறுகுடலில் உள்ள உணவுக் கூழிலிருந்து குளுக்கோஸைப் பிரித்து ரத்தத்தில் கலப்பதும், ரத்தக் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவதும் தைராக்சின் ஹார்மோன் செய்கிற அற்புதப் பணிகள். 

இதயம், குடல், நரம்பு, தசை, பாலின உறுப்புகள் போன்ற முக்கியமான உறுப்புகளின் செயல்பாடு களையும் தைராக்சின் ஹார்மோன் தான் ஊக்குவிக்கிறது. 
மனித உடலில் வெப்பத்தை உண்டாக்கி, அதைச் சமநிலையில் வைத்திருப்பது, உடல் செல்களில் பல என்சைம்களைத் தயாரித்துக் கொடுப்பது, 

பருவமடைவ தற்கும் கருத்தரித்தலு க்கும் துணைபுரிவது ஆகியவற்றில் தைராக்சின் முக்கியப் பங்கு வகிக்கிறது.

தைராய்டு பிரச்சினை
தைராய்டு பிரச்சினை
இந்திய மக்கள் தொகையில் 12 சதவிகிதம் பேர் தைராய்டு நோயால் பாதிக்கப் பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்நோய் பாதிப்பு ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு 10 மடங்கு அதிகம் எனக் கூறப்படுகிறது. 

பெண்களை அதிகம் பாதிக்கும் தைராய்டு நோய் குறித்த விழிப்புணர்வு பெண்களிடையே போதிய அளவு இல்லை. 

இந்தியாவில் 30 வயதைத் தாண்டிய பெண்களில் பெரும்பாலானோருக்கு 30 முதல் 45 சதவிகிதம் வரை தைராய்டு பாதிப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தைராய்டு ஹார்மோன்
தைராய்டு ஹார்மோன்
தைராய்டு சுரப்பியில் இருந்து தைராக்சின் (T4) டிரைஅயடோதைரோனின் (T3) என்ற இரண்டு விதமான ஹார்மோன்களைச் சுரக்கின்றன. 

இந்த இரண்டு ஹார்மோன்களும் உடலின் தேவைக்கேற்ப ரத்தத்தில் கலந்து, உடல் உறுப்புகள் சீராகச் செயல்பட உதவுகின்றன. இத்தனைச் செயல்பாடு களையும் முன்பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கிற தைராய்டு ஊக்கி ஹார்மோன் (TSH) கட்டுப்படுத்துகிறது.
தைராய்டு சுரப்பிக்குப் போதுமான அளவு அயோடின் கிடைக்காவிட்டால், தைராக்சின் ஹார்மோனைச் சுரக்க முடியாது. 

இதனால் தைராய்டு ஊக்கி ஹார்மோன் அதிக அளவில் சுரந்து, தைராய்டு சுரப்பியை மேன்மேலும் தூண்டும். ஆனாலும், அதனால் போதுமான அளவுக்குத் தைராக்சின் ஹார்மோனைச் சுரக்க முடியாது.

கர்ப்பிணிகளுக்கு தைராய்டு
கர்ப்பிணிகளுக்கு தைராய்டு
பெண்கள் கர்ப்பமான உடன் தைராய்டு டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். 

ஏனெனில் கருவில் குழந்தை நன்கு வளர்வதற்குத் தாயிடமிருந்து தைராக்சின் ஹார்மோன், சரியான அளவில் சென்றாக வேண்டும். அப்படிக் கிடைக்காத போது, குழந்தைக்குக் குறை தைராய்டு ஏற்படுகிறது. 

இதனால், குழந்தையின் வளர்ச்சி பாதிப்படைகிறது. குறை தைராய்டு உள்ள குழந்தைக்கு வளர்ச்சி தாமதமாகும். குழந்தையின் செயல்பாடுகளில் மந்த நிலை ஏற்படும். மாறுகண், காது கேளாமை போன்ற குறைபாடுகளும் ஏற்படும்.

குழந்தைக்கு பாதிப்பு
குழந்தைக்கு பாதிப்பு
தைராய்டு குறைபாடு இருந்தால் குழந்தைக்கு புத்திக்கூர்மை பாதிக்கும். கற்றல் குறைபாடு ஏற்படும். பெண் குழந்தையாக இருந்தால் பருவமடைதலில் தாமதம் ஏற்படும். 
பள்ளி வயதில் அறிவு வளர்ச்சி மற்றும் புத்திக்கூர்மையிலும் குழந்தை பின்தங்கும். முக்கியமாக, கற்றலிலும் நினைவாற்ற லிலும் குறைபாடுகள் தோன்றும். 

பெண் குழந்தைகள் பருவமடைவதில் தாமதம் ஏற்படும். அல்லது மாதவிலக்கு அதிக நாட்கள் நீடிக்கும்.

தைராய்டை கட்டுப்படுத்தலாம்
தைராய்டை கட்டுப்படுத்தலாம்
கோபப்பட வேண்டாம், டென்சன் ஆகாதீங்க, கோபத்தையும் டென்சனையும் குறைங்க மூளையும் உங்க கட்டுப்பாட்டில் இருக்கும். தைராய்டு சுரப்பியும் உங்க கட்டுப்பாட்டில் இருக்கும்.

என்ன சாப்பிடலாம்
என்ன சாப்பிடலாம்
சமையலுக்குச் சாதாரண உப்பைப் பயன்படுத்துவதை விட அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்த வேண்டும். நிறைய தண்ணீர் குடிங்க, நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை அதிகமாக சாப்பிடுங்க. 

மீன், நண்டு போன்ற கடல் உணவு வகைகளில் அயோடின் சத்து அதிகம் என்பதால் அடிக்கடி சாப்பிடுவது நல்லது. பால், முட்டை, இறைச்சி சாப்பிடலாம். 
அதே நேரம் பசலைக்கீரை, முள்ளங்கி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ், டர்னிப் ஆகியவற்றைக் குறைவாகச் சாப்பிட வேண்டும்.
Tags: