உங்களுக்கு எப்படிப்பட்ட சருமமா இருந்தாலும் முகம் பளபளக்க தேன் போதும் !

Fakrudeen Ali Ahamed
0
சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இது வரை உங்கள் கிட்சேனில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தித் தீர்வு கண்டு இருப்பீர்கள். 
உங்களுக்கு எப்படிப்பட்ட சருமமா இருந்தாலும் முகம் பளபளக்க
ஆனால் அதனை விடச் சிறப்பான பண்புகளைத் தேன் கொண்டுள்ள தால் உங்கள் சருமத்தில் மேஜிக் செய்ய உதவும். 

தேனும் அந்த காலத்தி லிருந்தே சமையலறை யிலும் மருத்துவச் சிகிச்சை யிலும் பயன்படுத்தப்பட்டு தான் வருகிறது.

தேன் இயற்கை யாகவே ஆன்டி பாக்டீரியல் பண்பினை கொண்டுள்ள தால் முகத்தில் முகப்புகளுக்கு எதிராகப் போராடுகிறது. 

மேலும் தேன் ஆக்ஸிஜனேற்ற திறனைக் கொண்டுள்ள தால் சருமத்தைச் சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல் களையும் எதிர்த்துப் போராடுகிறது. 
அத்துடன் இயற்கையான ஹியூமெக்டன்ட் பண்பினை கொண்டுள்ளதால் காற்றிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சு சருமத்தை ஈரப்பதமாக வும் மென்மை யாகவும் வைக்கிறது .

இதனால் உங்கள் முகத்தில் உள்ள துளைகளை அடைத்து முகப்பரு வராமல் தடுக்கிறது.

பயன்பாடு

உங்கள் சருமத்தில் எப்படி தேனைப் பயன்படுத்த வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். முதலில் உங்கள் முகத்தினை நன்றாகக் கழுவி ஸ்க்ரப் செய்து தேனைப் பயன்படுத்துங்கள். 

இது உங்களுக்கு விட்டிலையே பேஷியல் செய்தது போன்ற பளபளப்பைத் தரும். 

தேன் மாஸ்க் அப்ளை செய்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவி நல்ல மொய்ஸ்ட்ரைரை அல்லது எண்ணெயைத் தடவுங்கள். இப்போது எவ்வாறு தேன் மாஸ்க் போட வேண்டும் என்று பார்க்கலாம்.

முகப்பரு

நீங்கள் முகப்பருக்களி னால் பாதிக்கப்பட்டு இருந்தால் இந்த தேன் மாஸ்கினைப் பயன்படுத்தலாம். 

பேக்கிங் சோடா மற்றும் தேன் இவை இரண்டும் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. 
முகப்பரு
இதனுடன் எலுமிச்சை சாறு சேர்க்கும் போது முகப்பருவை அகற்ற உதவும் என்று தோல் மருத்துவர்கள் கூறுகின்றனர். 

ஒரு தேக்கரண்டி யளவு எலுமிச்சை சாறு, ஒரு தேக்கரண்டி யளவு தேன், ஒரு தேக்கரண்டி யளவு பேக்கிங் சோடா எடுத்து ஒன்றாகக் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடத்தில் வெது வெதுப்பான நீரில் கழுவுங்கள். 
முகத்தில் அப்ளை செய்யும் போது கண்களுக்கு அருகில் செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 

எலுமிச்சை சாறு முகத்தினை ஒளிரச் செய்யும் எனவே வெளியில் செல்லப் போகிறீர்கள் என்றால் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்.

எண்ணெய் சருமம்

நீங்கள் எண்ணெய் சருமம் கொண்டவர்க ளாக இருந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் எண்ணெய்யை அகற்றத் தேனுடன் கிளே மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்துப் பயன்படுத்தலாம். 
எண்ணெய் சருமம்
ஒரு தேக்கரண்டி யளவு தேன், ஒரு தேக்கரண்டி யளவு பெண்ட்டோனைட் க்ளே அல்லது மொராக்கோ சிவப்பு கிளே, ஒரு தேக்கரண்டி யளவு ஆப்பிள் சீடர் வினிகர் எடுத்து ஒரு டப்பாவினை பயன்படுத்திக் கலக்குங்கள். 

நீங்கள் உலோகப் பாத்திரத்தைப் பயன்படுத்தினால் அவை ஒட்டிக் கொள்ளும். 

எனவே ஒட்டாத ஒன்றைத் தேர்வு செய்து கலந்து முகம் மற்றும் கழுத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவி பின்பு குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

சென்சிடிவ் சருமம்

கிரீன் டீ மற்றும் தேன் இரண்டும் சருமத்தின் அழற்சி எதிர்ப்பு பொருளாக செயல்படுகின்றன. 

இவை இரண்டும் உங்கள் சருமத்தில் இருக்கும் சிவப்பு நிற மாற்றத்தைச் சரி செய்யவும் மற்றும் சென்சிடிவ் சருமத்தினை மென்மையாக்கவும் உதவுகிறது. 
சென்சிடிவ் சருமம்
ஒரு வேலை இது உங்கள் சருமத்தில் ஏதேனும் அழற்சியை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் இருந்தால் உங்கள் கைகளில் தடவி சோதனை செய்து பார்த்து விட்டுப் பயன்படுத்துங்கள். 

ஒரு தேக்கரண்டி யளவு மேட்சா பவுடர், ஒரு தேக்கரண்டி யளவு தேன், ஒரு தேக்கரண்டி யளவு இனிப்பு பாதாம் அல்லது ஜோஜோபா எண்ணெய் அனைத்தையும் கிண்ணத்தில் சேர்த்து கலவையாகக் கலந்து கொள்ளுங்கள். 
உங்களிடம் மாட்சா பவுடர் இல்லை யெனில் கிரீன் டீ பவுடர் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான நீரில் அலசுங்கள்.

வறண்ட சருமம்

உங்கள் வறண்ட சருமத்தை மென்மை யாகுவதற்குச் சிறந்த கலவை தேன் மற்றும் அவோகேடோ. இவற்றுடன் பாதாம் சேர்ப்பதினால் பாதாமில் உள்ள நல்ல கொழுப்புகள் உங்கள் சருமத்தை ஈரப்பததுடன் வைக்க உதவும். 

உங்கள் சருமம் மிகவும் வறண்டு காணப்பட்டால் அவற்றுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். 
வறண்ட சருமம்
இரண்டு தேக்கரண்டி யளவு தேன் அல்லது ஒரு தேக்கரண்டி யளவு தேன் எடுத்து அதனுடன் ஜோஜோபா எண்ணெய் அல்லது இனிப்பு பாதாம் எண்ணெய் ஆகிய வற்றில் 

ஒன்றை எடுத்து 1/4 அவோகேடோ மற்றும் இரண்டு தேக்கரண்டி யளவு நொறுக்கப்பட்ட பாதாம் சேர்த்து கிண்ணத்தில் போட்டுக் கலந்து முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப் பான நீரில் முகங்களைக் கழுவுங்கள்.

கருமை நிற புள்ளிகள்

உங்கள் முகம் சற்று நிறம் மங்கி மற்றும் கருமை நிறப் புள்ளிகளைக் கொண்டிருந்தால் நீங்கள் மஞ்சள் மற்றும் தேன் கலந்த மாஸ்கினை பயன்படுத்தலாம். 

இதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்ப்பதால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றி புதிய செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. 
கருமை நிற புள்ளிகள்
ஒரு தேக்கரண்டி யளவு எலுமிச்சை சாறு, ஒரு தேக்கரண்டியளவு தேன், ஒரு தேக்கரண்டி யளவு தயிர், 1/4 தேக்கரண்டியளவு மஞ்சள் தூள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து 
கிண்ணத்தில் போட்டு கலவையாகக் கலந்து முகம் மற்றும் கழுத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். 

இதனை வாரம் வாரம் செய்யலாம் அல்லது முகத்தில் இருக்கும் நிற மாற்றம் மாற வேண்டுமானால் 2 நாட்களுக்கு ஒரு முறை செய்யுங்கள். இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் உங்கள் முகத்தில் மாற்றத்தை உணருவீர்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)