9 மணி நேரத்திற்கு மேல் தூங்குபவரா நீங்கள்?

Fakrudeen Ali Ahamed
1 minute read
0
தினமும் இரவு தூக்கம் ஒன்பது மணி நேரத்திற்கு மேல் நீடித்தால் ஆயுள் காலம் குறையும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. 
9 மணி நேரத்திற்கு மேல் தூங்குபவரா

அதே போல் பகலில் நீண்ட நேரம் தூங்கினாலும் பக்கவாதம் வரும் வாய்ப்பு 85 சதவீதம் இருப்பதாகக் கண்டறிந்துள்ளது.

சீனாவில் உள்ள ஹுவாஸோங் பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில் 31,750 பேரை ஈடுபடுத்தி யுள்ளது. இதில் 62 வயது கொண்ட முதியவர்களை வைத்தே இந்த ஆய்வை நிகழ்த்தி யுள்ளது. 

அவர்களுக்கு கடந்த 6 வருடங் களாகவே இரவு ஒன்பது மணி நேரத்திற்கு மேல் தூங்கும் பழக்கம் இருந்துள்ளது.

இளமை தொடங்கி முதுமை வரை எந்த பக்கவாத அறிகுறிகளும் அவர்களுக்கு இல்லை. ஆனால் இந்த 9 மணி நேரத்திற்கு மேலான தூங்கும் பழக்கம் தொடங்கிய நாளிலிருந்து பக்கவாதம் வரும் அறிகுறி தென்பட்டுள்ளது.

அதே போல் பகலில் 90 நிமிடங்களு க்கு மேல் தூங்கும் பழக்கம் இருந்தாலும்

அவர்களுக்கு உடனே இல்லா விட்டாலும் நீண்ட நாள் கழித்து பக்கவாதம் வரும் வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஆய்வில் முதியவர்கள் சரியாக தூங்கா விட்டாலும் அவர்களுக்கு பக்கவாதம் வரும் வாய்ப்பு உன்ள்ளதாக தெரிவித்துள்ளது. 

எனவே ஆரோக்கியமான தூக்க நேரம் என்பது சரியாக ஒன்பது மணி நேரம் அல்லது எட்டு அல்லது ஏழு மணி நேரம் என்பதே ஆரோக்கியமான தூக்க நேரம் என்று குறிப்பிட் டுள்ளது.

இறுதியாக, இந்த ஆய்வு முதியவர் களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து வயதினரும் கருத்தில் கொண்டு ஆரோக்கியமான தூக்க நேரத்தை கடைபிடிக்க வேண்டும் என்று குறிப்பிட் டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)