குடும்பத்திற்காக பணியை கைவிடும் இந்தியப் பெண்கள் !

Fakrudeen Ali Ahamed
0
பணியிடத்தில் பெண்களுக்கான சமத்துவம் பற்றி பேசிக் கொண்டிருக்கும் தருணத்தில் இந்த ஆய்வு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. 
குடும்பத்திற்காக பணியை கைவிடும் இந்தியப் பெண்கள்
மேலும் பெண்களுக் கான வேலை வாய்ப்பு அதிகரித்துக் கொண்டிருப்ப தாக தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கிறது.

அவ்தார் குழுமம் வியூபாய்ண்ட் என்கிற ஆய்வு ஒன்றை வெளி யிட்டுள்ளது.

அதில் 48 சதவீதம் இந்தியப் பெண்கள் பாதியிலேயே வேலையை விட்டு விலகுவதாகவும், அதற்கு குடும்பமே முக்கியக் காரணமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வு 783 பெண்களிடம் நடத்தப்பட் டுள்ளது. அதில் 45 சதவீதம் பெண்கள் குழந்தைகளை கவனிக்க வேண்டிய பொறுப்பால் பணியைக் கை விடுவதாகவும், 36 சதவீதம் பெண்கள் மகப்பேறு காரணமாக விலகுவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் வீட்டில் போதுமான ஆதரவு இல்லாத காரணத்திற் காகவும் பணியைத் தொடர முடியாமல் போகிறது. இப்படி 23 சதவீதம் பெண்கள் குடும்பத்தாரின் தடையை எதிர் கொண்டிருப்ப தாகவும் தெரிவித்துள்ளது.

அப்படி எதிர்கொண்டு மீண்டு வரும் பெண்கள் தங்கள் திறமையை மேம்படுத்தி நிரூபிக்க முற்படுகின்றனர். 

அப்படியே வீட்டில் இருந்தாலும் 69 சதவீதம் பெண்கள் திறனை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)