குழந்தை அறிவாக வளர | As the child learns to grow !

Fakrudeen Ali Ahamed
0
சின்ன வயது முதல உங்கள் குழந்தையை அறிவுள்ளதாக வளர்க்க முடியும். எவ்வளவுக்கு எவ்வளவு சின்ன வயதிலேயே தொடங்க முடியுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.
குழந்தை அறிவாக வளர

படிப்பை ஒரு விளையாட்டாகச் சொல்லிக் கொடுங்கள். தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரம் குழந்தையுடன் இருப்பது என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்

இரவுச் சாப்பாட்டின் போதுகுழந்தையின் வகுப்புப் பற்றியும்,பாடத்தைப் பற்றியும்,நண்பர்கள் பற்றியும் பேச்சுக் கொடுங்கள்.
அகராதியில் தினசரி ஒரு வார்த்தை கற்றுக் கொள்ளப் பழக்குங்கள். வெளியூருக்குப் போனால் அவ்வூர் இருக்கும் இடம், போகும் வழி பற்றி விளக்குங்கள்.

குழந்தையை மனப்பூர்வமாகப் பாராட்டுங்கள். மிகச் சிறிய சுலபமான விஷய த்திற்குப் பாராட்டுவது தவறு.

ஒரு புதிய விஷயத்தைக் குழந்தைக்குச் சொல்லித்தர வேண்டுமானால் ,அதற்குப் பழக்கமான வேறொன்றைக் காட்டி விளக்குங்கள்.

எங்காவது செல்லும் போது,வழியில் காணப்படும் அறிவிப்புப் பலகைக ளுக்கு விளக்கம் கொடுங்கள்.

சாலை விதிகளைப் பற்றிச் சொல்லிக் கொடுங்கள். குழந்தையிடம் அடிக்கடி சொல் விளையாட்டு விளையாடுங்கள்.

ஓரிடத்துக்குப்போய் வந்த பின் அதைப்பற்றி வர்ணித்துப் பேசக் குழந்தை யைக் கேளுங்கள்.
குழந்தைகளை அடக்காமல் ,நிறையக் கேள்விகேட்க இடம் கொடுக்க வேண்டியது அவசியம்.புரிகிற மாதிரி முழுமை யாகப் பதில் கொடுங்கள்.

படிப்பது ஒரு சந்தோசமான விஷயம் என்பதை உங்கள் குழந்தை அறியும் வண்ணம் படியுங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)