பெண்களின் உடல் வலியும், ஹை ஹீல்சும் !

Fakrudeen Ali Ahamed
2 minute read
0
உடைகளையும், ஆபரணங் களையும் தவிர்த் தாலே போதும் பெரும்பாலான பெண்கள் தங்களை வாட்டிக் கொண்டி ருக்கும் மூட்டு வலி, முதுவலி, கழுத்து வலி மற்றும் தலை வலிப்பிரச் சினைகளில் இருந்து விடுபட்டு விடலாம். இன்றைக்கு வேலைக்குப் போகும் பெண்களிடையே கேஸுவல் வியர் என்றால் அது தோலை கவ்விப் பிடிக்கும் ஜீன்ஸ், லெக்கின்ஸ், ஸ்லிம் ஃபிட் டாப்ஸ், டைட் குர்தி வகைய றாக்கள் மட்டுமே என்றாகி விட்டது. 
பெண்களின் உடல் வலி
அதே போல பெரும் பாலன பெண்கள் ஹை ஹீல்ஸ் பயன் படுத்து கின்றனர். உயரமான பெண்களே கூட பென்ஸில் ஹீல் என்று சொல்லக் கூடிய மெல்லிய கூரான ஹீல்ஸ் பொருத்திய காலணி களை அணிய விரும்பு கிறார்கள்.  இந்த பென்ஸில் ஹீல் வகை செருப்பு களை முன்பெல்லாம் ராம்ப் வாக் மாடல்கள் மட்டுமே பயன் படுத்து வார்கள்.

இப்போது கல்லூரி, அலுவலகம் என எல்லா இடங்க ளிலும் இவற்றைப் போட்டுக் கொண்டு செல்வது ட்ரெண்டி யான விசயமாகக் கருதப் படுவதால் பெண்கள் தங்களுக்கு அவை அசெளகரி யமாக இருந்த போதிலும் அவற்றைப் பயன் படுத்தத் தயங்கு வதே இல்லை.

ஆனால் நமது அதிகப் படியான ஃபேஷன் அடிக்‌ஷன் கூட ஒரு கட்டத்தில் நாட்பட்ட முதுகுவலி, மூட்டு வலி, கழுத்து வலி, கண் எரிச்சல், போன்ற வற்றிற்கு காரண மாகி விடுகின் றனவாம். இதை லண்டனில் இயங்கும் பிரிட்டிஷ் ஸிப்ரோ பிராக்டிக் அசோஸியேசன் (BCA) குழும விஞ்ஞா னிகள் குழு ஒன்று சமீபத்தில் தங்களது தொடர் ஆராய்சிகள் மூலம் தகுந்த சான்று களுடன் நிரூபித்தி ருக்கிறது.

பெண்களின் உடல் வலிக்கு முக்கிய காரணம் உடையும், ஹை ஹீல்சும் இதில் ஆச்சரியம் என்ன வென்றால் 73 % பெண்கள் தங்க ளுக்கு வரக்கூடிய முதுகு வலிக்கு தாம் தினமும் பயன் படுத்தும் வார்ட்ரோப் தான் முக்கிய காரணம் என்பதை உணர்ந்தும், உணராமல் அலட்சிய மாக இருப்பது தான் அவர்களை மேலும் தீரா வலியில் தள்ளி விடுகிறது.

இதில் 28% பெண் களுக்கு மிக நன்றாகவே தெரியும், தங்களது முதுகுவலி, கழுத்து வலிக்கு பிரதான காரணமே தாங்கள் பயன் படுத்தும் இறுக்க மான உடைகளும், தமது உடல் வாகுக்கு சற்றும் பொருத்த மில்லாத உயரமான அல்லது கனமான காலணி களும் தான் என்பது. ஆனாலும் அவர்கள் அதை ஒப்புக் கொள்ளாமல் ஸ்டைல் மற்றும் ஃபேஷன் என்ற பெயரில் தொடர்ந்து அதே விதமான ஆடை களையும், செருப்பு களையுமே பயன் படுத்து வருகின் றனர் என்பது பல கட்ட ஆய்வு களின் பின் உறுதி செய்யப் பட்டிருக் கிறது. 
ஹை ஹீல்ஸ்
இவை மட்டுமல்ல இவர்களில் 10% பெண்கள் உடை மற்றும் காலணிகள் மட்டு மல்லாது, உடை களுக்குப் பொருத்த மாக அணிவ தாகக் கூறிக் கொண்டு கனமான கற்கள் வைத்த அல்லது பீட்ஸ்கள் என்று சொல்லப் படக் கூடிய பெரிய குண்டுமணி களுடன் கூடிய ஆபரணங் களை வேறு தினசரி பயன்படுத்து கின்றனராம். இவை அனைத்துமே எந்த வகை யிலும் ஒரு சராசரிப் பெண்ணின் உடல் நலனுக்கு நன்மை தரக்கூடிய விசயமே இல்லை.

ஏனெனில் இவை அனைத்துமே பெண் களின் கழுத்து, முதுகு மற்றும் இடுப்புப் பகுதிகளின் இயல் பான இயக்கத்தை தடை செய்கின்றன. இதனால் அந்த இடங் களில் சிறிதி, சிறிதாக ஆரம்ப மாகும் வலி தொடர்ந்து அவற்றைப் புழக்கத்தில் கொள்ளும் போது ஒரு கட்டத்தில் தீரா வலியாகத் தங்கி விடுகிறது என BCA ஆய்வு முடிவுகள் தெரிவிக் கின்றன.

உடலை இறுக்கிப் பிடிக்கும் கனமான ஜீன்ஸ்கள் (இடுப்பு வலி) இடுப்பைக் கவ்வும் மெல்லிய லெக்கின்ஸ் வகையறாக்கள் (இடுப்பு வலி) வட இந்திய ஸ்டைலில் அணியப் படும் கனமான நெக்லஸ்கள், காது தொங்கட் டான்கள், மூக்குத்திகள் ( கழுத்து வலி, கண் எரிச்சல், தலை வலி) பென்ஸில் ஹீல்ஸ் எனப்படும் உயரமான ஹீல் வைத்த செருப்புகள் (முதுகு வலி)

மேற்கண்ட உடைகளையும், ஆபரணங் களையும் தவிர்த் தாலே போதும் பெரும் பாலான பெண்கள் தங்களை வாட்டிக் கொண்டிரு க்கும் மூட்டு வலி, முதுவலி, கழுத்து வலி மற்றும் தலை வலிப்பிரச் சினைகளில் இருந்து விடுபட்டு விடலாம் என்கிறது BCA ஆய்வு முடிவுகள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 7, April 2025