குழந்தை கருவிலேயே புத்திசாலியாக வளர?

Fakrudeen Ali Ahamed
0
உங்கள் கருவில் இருக்கும் குழந்தையை சாதாரண மாக எடை போட்டு விடாதீர்கள். உங்கள் நடவடி க்கைகள் அனைத்தை யும் இஞ்ச் பை இஞ்ச்சாகக் கவனித்துக் கொண்டி ருக்கும் ஒரே நபர் கருவி லிருக்கும் உங்கள் குழந்தை தான். உங்களுடைய நல்ல மற்றும் கெட்ட குணங்கள் அனைத்தையும் அது தனக்குள்ளும் கிரகித்துக் கொண்டிருக்கும். 
கருவி லிருக்கும் குழந்தை
கருவில் இருக்கும் போதே குழந்தைகள் தங்கள் தாயிடமிருந்து ஐ.க்யூ. என்னும் புத்திசாலித் திறனை சிறிது சிறிதாக வளர்த்துக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். எனவே, உங்கள் நடவடிக்கைகளை எப்போதும் பாஸிட்டிவ்வாகவே வைத்துக் கொள்ளுங்கள்; உங்கள் உடம்பையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் குழந்தையும் அதிபுத்திசாலியாகப் பிறக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

அதிக ஃபோலேட் உணவுகள் 

ஃபோலிக் அமிலம் அதிகமுள்ள உணவுகளை நீங்கள் சாப்பிடுவ தால், கருவில் உள்ள குழந்தையின் புத்தி சாலித்தனம் மளமள வென்று வளர்கிற தாம். தினமும் 400 மைக்ரோகிராம் ஃபோலேட் உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்வது முக்கியம். குழந்தை பிறப்பில் ஏற்படும் சில குறை பாடுகளைக் களை வதற்கும் இது மிகவும் உதவுகிறது. 
அதிக ஃபோலேட் உணவுகள்
கருவில் உள்ள குழந்தை யின் புத்தி சாலித்தன த்தை அதிகப் படுத்துவதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங் களும் முக்கியப் பங்காற்று கின்றன. குறிப்பாக, டிஎச்ஏ (DHA) என்ற ஒருவகை ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தில் இதற்கான பவர் அதிகம் உள்ளதாம். 

கருவை வருட வேண்டும் கரு இருக்கும் வயிற்றுப் பகுதியை நீங்கள் அடிக்கடி லேசாக அழுத்தித் தடவிக் கொடுக்க வேண்டும். இதனால் கருவுக்குள் செல்லும் இரத்த ஓட்டம் சீராக அதிகரிக்கும்.

குழந்தையோடு பேசுங்கள் 

கருவில் இருக்கும் உங்கள் குழந்தையோடு நீங்கள் தினமும் பேச வேண்டும். கரு உருவான 15 வாரங்களில் குழந்தை க்குக் கேட்கும் திறன் வந்து விடுமாம். 
குழந்தையோடு பேசுங்கள்
தினமும் இரவு படுக்கச் செல்லும் முன் உங்கள் குழந்தையோடு சத்தமாகப் பேசினால், அது கேட்டு தனக்குள் கிரகித்துக் கொள்ளுமாம். அதிகம் இசை கேளுங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு இசை ஒரு முக்கியப் பங்காற்று கிறது. நல்ல இசையைக் கேட்டுக் கொண்டி ருக்கும் குழந்தை களுக்குக் கற்றல் திறன் அதிகமாகும் என்று கூறப் படுகிறது.
மன அழுத்தத்தைக் குறையுங்கள் 

உங்களுக்கு ஏதாவது மன அழுத்தம் ஏற்பட்டால் அதை உடனே தூக்கி எறிந்து விடுங்கள். அதை நீங்கள் தக்க வைத்துக் கொண்டு எப்போதுமே சோகமாக இருந்தால், அது உங்கள் கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சியை மோசமாகப் பாதிக்க வாய்ப்புள்ளது. 

நோ ஸ்மோக்கிங் 

நீங்கள் கருவைச் சுமந்து கொண்டி ருக்கும் போது, கண்டிப்பாக புகைப் பிடிக்கக் கூடாது. கருவில் உள்ள குழந்தையின் மூளையையும் ஐ.க்யூ. திறனையும் உங்கள் புகைப் பிடிக்கும் பழக்கம் கடுமையாகப் பாதிக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)