ஆண்களும் வீட்டு வேலை செய்வார்களா? என்ன?

Fakrudeen Ali Ahamed
0
இந்தியாவில் உள்ள வேலை வாய்ப்பு மற்றும் வேலை யில்லாதவர்களின் எண்ணிக்கை குறித்து அரசு அவ்வப் போது கணக்கெடுப்புகளை நடத்துவது அனை வரும் அறிந்தது தான
ஆண்களும் வீட்டு வேலை செய்வார்களா? என்ன?
ஆண்கள் அளவுக்கு வேலை களில் ஈடுபடும் பெண் களின் எண்ணிக்கை குறைவு என்பதும் நிதர்சனமே. 
 
ஊரகப் பகுதிகளில் வேலைக்குச் செல்லும் 55 ஆண்களுக்கு நிகராக 25 பெண்கள் தான் வேலை பார்க்கி றார்கள் என்றால், அதுவே நகர்ப் புறத்தில் இன்னும் குறைவாக இருப்பது ஆச்சரிய மளிக்கிறது.  
 
நகரங்களில் 56 ஆண்க ளுக்கு நிகராக 16 பெண்கள் தான் வேலைக்குச் செல்கிறார்கள் என்கிறது அண்மை கணக்கெடுப்பு. இது வெளி வேலைகளை மட்டும் தான் சுட்டிக் காட்டுகிறது. 
வீட்டு வேலைகளை யார் செய்கிறார்கள் என்றும் அரசு அண்மையில் ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்டது. 

இதன் முடிவு என்ன வாயிருக்கும் என்பது அனை வருக்கும் தெரிந்தாலும், புள்ளி விவரங்கள் தானே கணக் கெடுப்பின் ஆதாரம்? 
 
வீட்டு வேலைகளின் மையமாக பெண்கள் மட்டுமே இருப்பதாக கூறும் அந்த ஆய்வு, வெறும் 0.4 சதவிகித ஆண்கள் மட்டுமே வீட்டு வேலை களை செய்கி றார்கள் என்கிறது! 

ஆனால், இந்த தோற்றம் இனி மாறலாம். மாற வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றாலும், அதற்கு வீட்டு வேலைகள் தொடர்பான சமுதாய கண்ணோட்டமும் மாற வேண்டும். 
 
சிறுவர்களும் 'ஹோம் சயின்ஸ்' படிக்க வேண்டும் என்ற பரிந்துரையை, அரசு தீவிரமாக பரிசீலித்து, செயல்படுத்த வேண்டும். இந்தியாவின், மத்திய அரசு 'பெண்களுக்கான தேசிய கொள்கையை' உருவாக்கி வருகிறது. 

தேசிய கொள்கைகளை உருவாக்குவது தொடர்பான ஒரு கூட்டத்தில், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இந்த பரிந்துரையை முன் வைத்ததாக ஒரு செய்திக் குறிப்பு கூறுகிறது. 
 
மாணவர்களுக்கு பள்ளியிலேயே ஹோம் சயின்ஸை கற்றுக் கொடுப்பது, பழைய மனோ பாவங்களின் இயல்பான மாற்றத்தையும், சமூக மாற்றத்தையும் ஏற்படுத்துவதாக இருக்கும் என்று சுஷ்மா கருத்து தெரிவித் திருக்கிறார். 
சென்னையில் பெண் ஊழியர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்களா? ஆண்களும், பெண்களும் வெளி வேலைகளில் ஈடுபடுவது இயல்பாகி விட்டது என்ற போதிலும், 
பெண்களுக்கான வேலைச் சுமை அதிகரித்து விட்டது என்று சொல்கிறார் இந்திய அமைச்சர். அவருடைய கருத்து அப்பட்டமான உண்மை என்றாலும், சட்டமாக மாறுமா என்பது கேள்விக் குறியாக இருக்கிறது.
 
ஆனால் இது, சுஷ்மாவின் கணவர் ஸ்வராஜுக்கு உவப்பானதாக இல்லை. தனது டிவிட்டரில் அவர் எழுதுகிறார், கெட்ட காலம் வரப் போகிறது… இதை அவர் வேடிக்கையாகவோ, விளையாட்டாகவோ எழுதியிருக்கலாம். 

அல்லது வீட்டில் எப்போதுமே வேலை செய்யாதவராக இருக்கலாம். எனவே இந்த பரிந்துரைக்கு அவர் முரண்படலாம். 
 
பெண்களுக்காக பெண்களால் இலங்கையில் முதல் தொழிற்சங்கம் எது எப்படியிருந்தாலும், இந்த டிவிட் செய்தி பலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தி விட்டது. 
 
டிவிட்டரில் அவரைத் தொடரும் பல பெண்களும் அவரை தர்மசங்கடமாக்கும் கேள்விகளை எழுப்பத் தொடங்கி விட்டனர். 

மீனாக்‌ஷி திக்‌ஷித் தனது டிவிட்டர் செய்தியில் சார், கெட்ட காலம் வரப் போகிறது என்று ஏன் சொல்கிறீர்கள்? இன்னமும் நீங்கள் வீட்டு வேலையை கற்றுக் கொள்ள வில்லையா? என்று கேட்கிறார். 
 
ரிஷிதா கூறுகிறார், நல்ல காலம் வரப் போகிறது..., மாயா கேட்கிறார், இது வரை நீங்கள் கற்றுக் கொள்ள ஆரம்பிக்க வில்லையா?". 
மெல்ல மெல்ல மாற்றங்கள் ஆனால், வீட்டு வேலைகளில் கை கொடுப்பது தவறு என்ற எண்ணத்தில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கி விட்டது. 
 
கடந்த தசாப்தத்தில் பெண்கள் வளரும் போது, அவர்களுக்கான கற்பித்தல்களும் மாறின, உயர் கல்வி வழங்குவது உயர்ந்தது, வாகனங்களை சுயமாகவே ஓட்டிக் கொண்டு, எல்லா இடத்திற்கும் செல்வதும் சாத்தியமானது.

துபாயில் துஷ் பிரயோகத்துக்கு ஆளாகும் வீட்டுப் பணிப் பெண்கள்: 
வீட்டுப் பணிப் பெண்கள்
புதிய அறிக்கை ஆசிரியர், செவிலியர் பணி களுக்கு மட்டுமே பெண்கள் ஏற்றவர்கள் என்ற எண்ணம் மாறி, கடினமான, நீண்ட நேரம் பார்க்கும் வேலை களிலும் பெண்கள் ஈடுபடத் தொடங்கினார்கள். 
 
காலங் காலமாக பெண்கள் பார்த்து வந்த வீட்டு வேலையைத் தவிர பெண்களின் வேலை பார்க்கும் திறமையும், துறைகளும் அதிகரித் தாலும், ஆண்கள் அதே இடத்திலேயே இருக்கின்றனர்.
இது வரை ஈடுபடாத வேறு புதியத் துறைக்கு, அதாவது வீட்டு வேலைகளுக்கு ஆண்கள் இன்னும் இயல்பாக வில்லை. ஆண்களுக்கு சமையல் கற்றுக் கொடுக்கப்படுவ தில்லை. 
 
உடல் நலிவுற்ற குழந்தை மற்றும் தனது பெற்றோரை பார்த்துக் கொள்ள, தான் விடுப்பு எடுப்பதற்கு பதிலாக மனைவியே விடுப்பு எடுக்க வேண்டும் என்ற எதிர் பார்ப்பும் மாறவில்லை. 

அலுவலகப் பணிகளுக்கு பிறகு, வீட்டு வேலைகளை முடித்து விட்டு, இரவு வெகு நேரம் விழித்திருந்து அலுவலக வேலையை செய்து விட்டு மனைவி அயர்ந்து உறங்கினால், 
 
அவருக்கு சிறிது ஓய்வு கொடுத்து விட்டு, காலையில் மனைவியின் வீட்டு வேலையை பகிர்ந்துக் கொள்ள வேண்டும், 

அல்லது குறைந்த பட்சம், பணி யாளர்களை வேலை செய்ய பணிக்கவும் ஆண்களுக்கு தோன்றுவதில்லை. அரசின் அண்மையக் கணக்கெடுப்பே அதற்கான சான்று. 
 
இந்தக் கணக்கெடுப்பின் போது, நீங்களே ஏன் வீட்டு வேலைகளை செய்கிறீர்கள்? அது உங்களுக்கு பிடித்த மானதா என்று கேட்கப்பட்டதற்கு, பெண்களின் பதில் என்ன தெரியுமா? இல்லை, 
வீட்டில் இருக்கும் வேறு யாரும் வேலை செய்வதில்லை, எனவே நான் செய்கிறேன். இது ஓர் அற்பமான விஷயம் போல தோன்றினாலும், இதன் பின்னணி மிகவும் ஆழமானது. 
நீங்களே ஏன் வீட்டு வேலை களை செய்கிறீர்கள்?
வேலைக்கு போக வேண்டும் என்று அதீத ஆர்வம் இருக்கும் பெண்கள், இரட்டை சுமைக்கு தயாராகி விடுகிறார்கள். 
 
வேலைக்குப் போகும் பெண்களில் பலர், திருமணமாகி குழந்தை பிறந்ததும், வேலையை விடும் கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். 
 
ஒரு கணக் கெடுப்பின்படி, 18-24 சதவிகித பெண்களே, கருவுற்ற பிறகு, தங்கள் வேலையில் தொடர்கிறார்கள். இந்தியாவில் ஒரு பெண், அரசியல் வாதியாக இருக்க சிறந்த இடம் எது? 

சமத்துவம் மற்றும் பெண் விடுதலை என்ற சொற்றொடர்களை கால மாற்றத்தினால் ஆண்களின் அறிவு ஏற்றுக் கொண்டாலும், அதன் முழுமையான பொருளை தெரிந்து கொண்டார்களா? 
 
அதை அமல்படுத்துவதற்கு மனம் தயாராகி விட்டதா? இப்படி தொக்கி நிற்கும் கேள்விகளுக்கு ஆம் என்ற பதில் கிடைக்கும் போது தான், 
எதிர் காலத்திலாவது 'நல்ல நாள்' வரும் என்று எதிர் பார்க்கலாம் இல்லா விட்டால் சமத்துவதராசு ஒரு பக்கம் எப்போதும் தாழ்ந்தே இருக்கும். 

அது சமுதாயத்திற்கு நல்ல தல்ல. இதைப் படிக்கும் நீங்களும், பெண்களுக்காக எதாவது செய்ய விரும்புகிறீர்களா? இந்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கு உங்கள் கருத்துகளை எழுதி அனுப்பலாம். 
 
பெண்களுக்கான தேசிய கொள்கை உருவாக்கத்தில் நீங்களும் பங்களிக்கலாம் உங்கள் பரிந்துரைகளால்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)