பெண்கள் கல்யாணச் செலவுகள் !

Fakrudeen Ali Ahamed
இதோ... ஆவணி வந்து விட்டது. இனி ஊரெங்கும் கெட்டி மேளச்சத்தம் தான்! ஆனால், 'விலைவாசி தாறுமாறாக எகிறிக் கிடக்கும் இன்றைய கால கட்டத்தில்...
சிக்கனமாக ஒரு கல்யாணத்தை நடத்தி முடிக்க முடியுமா?' என்கிற கவலை தான் பலரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. பெற்றோர் தங்கள் பிள்ளைக்கு நகை, சீர், ஆடைகள் என அத்தனையும் முன் கூட்டியே வாங்கி வைத்த ருந்தாலும்,

மேடை அலங்காரம் முதல் பந்திக்கான மெனு வரை 'திருமணச் செலவுகள்’ என்ற விஷயம் பயமுறுத்துவதாகவே இருக்கும்.

கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு போஸ் கொடுத்த டிக்டாக் இலக்கியா !

அஞ்சு லட்சம் ஒதுக்கியிருக்கேன்... பத்துமானு தெரியல! என்று பதறாமல், திருமண தினத்துக்கான ஒவ்வொரு செலவையும் திட்ட மிட்டுச் செய்தால், பணத்தை மிச்சப்ப டுத்தலாம் தாராளமாக''...

முதல் வேலை...  மண்டபம் புக்கிங்! 

'பொதுவா ஒரு சுமாரான நகரத்துல, 8 ஆயிரம் ரூபாய் வாடகையில இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் மண்டபம் கிடைக்கும். மாநகராட்சிகள்ல வாடகை அதிகமா இருக்கும்.

கல்யாணத்துக்கு எத்தனை பேரை அழைக்கப் போறோம், அதுக்கேத்த மாதிரி பார்க்கிங் வசதி இருக்குமா, சொந்த பந்தங்கள் வந்து போக வசதியா இருக்குமா,

அவசரத் துக்கு நம்ம வீட்டுக்கு வந்து போக பக்கமா இருக்கு மாங்கிறது மாதிரியான விஷயங் களை யோசிச்சு அதுக்கேத்த மாதிரியான மண்ட பத்தைப் பிடிக்கணும்.
 
அழைப்பிதழ்... அழகு!

ஒரு பத்திரிகை 50 காசுல இருந்து 1,000 ரூபாய் வரைக்கும் கூட இருக்கு. வெள்ளி, தங்க ஜரிகை போட்ட பத்திரி கைகள் தான் இவ்வளவு காஸ்ட்லியா இருக்கும்.
 
நம்ம வசதிக்கு ஏத்த மாதிரி பத்திரி கைகளை தேர்ந்தெடுத்துக்கலாம். பிரின்டிங் செலவு தனி. 2 ஆயிரம் ரூபாய் ரேஞ்சுக்கு 500 பத்திரிகைகள் வாங்கினா நல்ல ராயலா இருக்கும்.

மூட்டு வலியை போக்க வர்ம புள்ளிகள் !

பகட்டா இருக்கிறதைவிட, சிம்பிள் அண்ட் நீட்டா இருக்கிற பத்திரிகைகளா செலக்ட் செய்றது நலம்!
டெக்கரேஷன் உங்கள் சாய்ஸ்! 

கல்யாணத்துல ஒரு ஸ்பீக்கர் செட், வெல்கம் போர்டு வைக்கிறதுக்கு 1,500 ரூபாய் செலவாகும். மண்டபம் முழுக்க சீரியல், பந்தல்னு அமர்க்களப் படுத்துனா 2 லட்ச ரூபாய் கூட செலவு பண்ணலாம்.

பேக்டிராப், நேம் போர்டு மட்டும் வெச்சு டிஸ்கோ டெக்க ரேஷன் பண்றதுக்கு 2,500 ரூபாய் செல வாகும். இதையே இன்னும் ராயலா பண்ணனும்னா 25 ஆயிரம் ரூபாய்க்கு கூட பண்ணலாம்.

பூ மணவறை அமைக்கணும்னா 10 ஆயிரம் ரூபாய்ல இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை ஆகும். ஒவ்வொரு டிஸை னுக்கும் ஒவ்வொரு தொகை நிர்ணயம் பண்ணி ருப்பாங்க.

மாலைகள் பலவிதம்! 

கைச் செண்டோட, 800 ரூபாய்ல இருந்து மாலை செட் கிடைக்குது. இதுல ரோஜா இதழ் மாலை, சம்பங்கி மூணடுக்கு மாலை, மணமக்கள் பேர் போட்ட மாலைனு நிறைய டிசைன்கள் போட்டுத் தருவாங்க.

ஒரு செட் 50 ஆயிரம் ரூபாய் வரை கூட இருக்கு. இதுல தலைப்பூ, உதிரிப்பூ, 10 முழம் மல்லி கையும் அடக்கம். ரோஜா இதழ் மாலை தான் இப்போ எல் லாரும் விரும்புறாங்க!

நம் உடல் சூடாக காரணம் என்ன?

மங்கல இசை! 

மங்கல இசைக்கு ஓரளவுக்கு நல்ல மியூசிக் செட்காரங்க 5 ஆயிரம் ரூபாய்க்கு கிடைப்பாங்க. பெரிய வித்வான்களைக் கூப்பிட்டா லட்சக்கணக்குல சம்பளம் கேப்பாங்க.

இப்போல்லாம் நிறைய இடங்கள்ல டேப் ரிக்கார்டர்லயே நாதஸ் வரத்தைப் போட்டு முடிச்சுடுறாங்க. நம்ம வசதியைப் பொறுத்து பேண்டு வாத்தியம் மத்த விஷயங்களை முடிவு பண்ணிக்கலாம்.
பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள் ஆர்கெஸ்ட்ரா போல ஏற்பாடு பண்ணினா, அவங்களுக்கு வாய்ப்புக் கொடுத்த சந்தோஷம் கிடைக்கும்!

பளபள போட்டோ

வீடியோ! போட்டோ ஆல்பத்துல ஸ்லிப் இன் ஆல்பம், ஆட்டோ ஸ்டிக் ஆல்பம், டிஜிட்டல் ஆல்பம், பக்கெட் ஆல்பம், சூட்கேஸ் ஆல்பம், மெட்டாலிக் ஆல்பம்...னு பல ரகங்கள் பல சைஸ்கள்ல இருக்கு.

ஒரு ரோலுக்கு, அதாவது 36 படங்களுக்கு குறைந்த பட்சம் 600 ரூபாய்ல இருந்து 4 ஆயிரம் ரூபாய் வரைக்கும் செலவு பண்ணி போட்டோ எடுக்கலாம்.

கோதுமையில் உள்ள சத்துக்கள் !

அதேமாதிரி வீடியோவுல சிங்கிள் கேமரா, டபுள் கேமரா, ஸ்பாட் மிக்ஸிங், இண்டோர் மிக்ஸிங், டி.வி ரிலேனு செலவு களைக் கூட்டிக்கிட்டே போகலாம்.

குறைஞ்ச பட்சமா 5 ஆயிரம் ரூபாய் செலவுல ஒரு கல்யாணத்துக்கு வீடியோ எடுத்துட முடியும். அதிகபட்சமா கிரேன்லாம் வெச்சு சூட்டிங் செஞ்சா 5 லட்ச ரூபாய்கூட வீடியோவுக்கு செலவு பண்ணலாம்!
சமையல்... சிக்கனம்! 

அதிக செலவு பிடிக்கிற விஷயம் சமையல் தான். ஆள் வெச்சு சமைச்சு சாமான் வாங்கிக் கொடுத்து கூலி கொடுத்து சமைக்கிறது பெரிய வேலை. அதுக்கு அவங்க கூடவே கண் காணிக்க நம்ம தரப்புல ஒரு ஆள் இருக்கணும்.

திடீர் திடீர்னு ஏதாவது வேணும்னு கேப்பாங்க. ரெடிமேட் சமைய லுக்கு ஆர்டர் பண்ணிட்டா இந்த பிரச்னை இருக்காது. நைட் 200 பேர், காலையில 300 பேர்,

மதியம் 100 பேர்னு மொத்தம் 600 பேருக்கான சாப்பாட்டை சிம்பிளா, டேஸ்டா 50 ஆயிரம் ரூபாய்க்கு ரெடி பண்ணிடலாம். இட்லி, பொங்கல், கேசரி, சாப்பாடு, 2 பொரியல், பாயசம்னு அசத்திடலாம் 
Tags: