ரத்த சொந்த திருமணம் கண்களை பாதிக்கும் !

Fakrudeen Ali Ahamed
தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா வில், 50 சதவீத திருமணங்கள், குடும்ப வழக்கம், சமூக நம்பிக்கைகள் என்று பல காரணங்களால், ரத்த சொந்தங்களு க்குள் நடக்கிறது. நம்மைப் போலவே, வட ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், மேற்காசிய நாடுகளிலும், இந்த பழக்கம், கலாசாரம், சமூக ரீதியில் விரும்பிச் செய்யும் நிகழ்வாக உள்ளது. தாத்தா – பாட்டி என்று நம் முன்னோர்களிடம் இருந்து, பொதுவாகவே, மரபணுக்களை நாம் பகிர்ந்து கொள்கிறோம். 
கண்களை பாதிக்கும் திருமணம்
மாமா – மருமகள் என்ற பெற்றோருடன் பிறந்தவர்களின் பிள்ளைகளுக்கு இடையே நடைபெறும் திருமணங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு, மரபியல் கோளாறுகள் அதிகம் வருகின்றன. தாய்மாமா – மருமகள் திருமண உறவில், பகிர்ந்து கொள்ளப்படும் மரபணுக்கள், 25 சதவீதமாகவும் மாமா – அத்தை பிள்ளைகளுக் கிடையே பகிர்ந்து கொள்ளப்படும் 

மரபணுக்களின் சதவீதம், 12.5 சதவீதமாகவும் உள்ளன. அதாவது, தாய் மாமாவைத் திருமணம் செய்து கொள்வதால், பிறக்கும் குழந்தைகளுக்கு வரும் மரபணு கோளாறுகள், மற்ற ரத்த சொந்தங்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. நெருங்கிய உறவு திருமணங்கள் வாயிலாக பிறக்கும் குழந்தைகளு க்கு, மூளை நரம்பு மண்டல பாதிப்பு, உணர்வு உறுப்புகள் பாதிப்பு, பிறவியிலேயே ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். 

நோய்த் தொற்று, புற்று நோய் பாதிப்பு வரும் அபாயமும் அதிகம் உள்ளது. கண்களைப் பொறுத்த வரை, மரபணு குறைபாடுகள், அதன் எந்தப் பகுதியில் வேண்டு மானாலும் வரலாம். கண்களே இல்லாமல் பிறப்பது, சிறிய கருவிழி, இயல்பைக் காட்டிலும் கண்கள் சிறிய அளவில் இருப்பது, கண் வெண்படல ஊட்டச் சத்துக் குறைபாடுகள், கண்புரை, விறைப்பு நோய், விழித்திரை குறைபாடுகள், சிதைவுகள் என்று ஒன்றோ, ஒன்றுக்கு அதிகமான கோளாறுகளோ ஏற்படலாம். 

பிறவியிலேயே ஏற்படும் கருவிழி நோய்கள், கண்புரை, விறைப்பு நோய் ஆகிய வற்றிற்கு, செய்யும் அறுவை சிகிச்சையில், பார்வைத் திறன் கிடைக்கும். ஆனால், பிறவியிலேயே ஏற்படும் விழித்திரை பிரச்னைகளுக்கு, சிகிச்சை ஆரம்ப நிலையிலேயே உள்ளது. விழித்திரை கோளாறு களுக்கு, மரபணு சிகிச்சை, நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், பரிசோதனை நிலையிலேயே உள்ளது. 
ரத்த சொந்த திருமணம்
மரபியல் காரணங்க ளால் ஏற்படும் பார்வைத் திறன் இழப்பை சரி செய்ய, ஸ்டெம் செல் சிகிச்சை நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கிறது. சமீபத்தில், இளம் வயது நபர் ஒருவர், பரிசோதனைக்கு வந்தார். கண்ணாடியோடு பார்க்கும் போது, அவரின் பார்வைத் திறன் இயல்பான தாக இருந்தது. சில பரிசோதனை க்குப் பின், அவரின் கடந்த கால மருத்துவ வரலாறு, குடும்பப் பின்னணி குறித்து, ஆய்வு செய்தோம். விழித்திரை சார்ந்த கோளாறால், அவர் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. 

அவரது பெற்றோர் மிக நெருங்கிய ரத்த சொந்தத்தில் திருமணம் செய்ததால், மரபியல் காரணங்களால் இந்தப் பிரச்னை இருப்பது தெரிந்தது. முழுமையான பரிசோதனையை அவருக்குச் செய்து, பிரச்னை, அதற்கான சிகிச்சை குறித்து விளக்கி, தொடர் சிகிச்சைக்கு வருமாறு அறிவுறுத்தி உள்ளோம். 

இந்தக் கோளாறை சரி செய்வதற்கான நம்பிக்கையையும் கொடுத்து உள்ளோம். நம் சமுதாயத்தில், ஆழமாக வேரூன்றி யிருக்கும், ரத்த சொந்தங் களுக்கு இடையிலான திருமணம், பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் நல பாதிப்புகள், ஆபத்துகள் குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம். டாக்டர் பல்லவி தவான், கருவிழி மற்றும் பார்வைக் குறைபாடு அறுவை சிகிச்சை நிபுணர்,
Tags: