குண்டான பெண்கள் ஆடையை தேர்வு செய்வது?

Fakrudeen Ali Ahamed
உடல் பருமனாக இருக்கும் பெண்கள் ஆடைத் தேர்வில் சில முக்கியமான விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். இது குறித்து விரிவாக பார்க்கலாம். 
குண்டான பெண்கள் ஆடையை தேர்வு செய்வது?
எந்த ஆடையும் தனக்குப் பொருத்தமாக இல்லையே என்ற கவலை உடல் எடை அதிகமாக இருக்கும் பெண்களுக்கு உண்டு.
 
பருமனாக இருக்கும் பெண்கள் ஆடைத் தேர்வில் கடைப்பிடிக்க வேண்டிய வற்றை இங்கே பார்க்கலாம். உடம்புடன் ஒட்டிக் கொள்கிற மாதிரியான மெட்டீரியலில் ஆடை அணியக் கூடாது.

அவை உடம்பின் ஒவ்வொரு வளைவிலும் ஒட்டிக் கொண்டு, உடம்பு ஷேப்லெஸ்ஸாக இருப்பதைக் காட்டிக் கொடுத்து விடும். 
 
அந்த மாதிரி மெட்டீரியல் தான் வேண்டும் என்றால் அதை வாங்குவதற்கு முன் டிரையல் செய்து பாருங்கள். ஓரளவுக்குப் பொருந்தி யிருந்தால் மட்டுமே வாங்குங்கள்.
பொதுவாக உடையின் அளவு கச்சிதமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். பருமனாக இருப்பவர்கள் ஓரளவு தளர்வாக உடையணி வதில் தவறில்லை.

அதற்காகத் தொள தொளவென சாக்குப்பை மாதிரி உடை அணிவது தவறு. இன்னும் சிலர் சரியான அளவில் உடையணிவதாக நினைத்துக் கொண்டு மூச்சு விடக்கூட முடியாத அளவுக்கு இறுக்கமாக உடை அணிவார்கள். இதுவும் தவறு.
குண்டான பெண்கள் ஆடையை தேர்வு செய்வது?
உடைகளின் நிறங்களுக்கும் நம் தோற்றத்துக்கும் தொடர்பு இருக்கிறது. கண்களைக் கூசச்செய்கிற பளிச் நிறங்களில் ஆடைகளை அணியக் கூடாது. 
 
காரணம், அவை உங்கள் தோற்றத்தை இன்னும் பெரியதாக்கிக் காட்டும். அதனால் எப்போதும் வெளிர் நிறங்களையே தேர்ந்தெடுங்கள்.
ஜீன்ஸ் அணிவதாக இருந்தால் எந்த மாடலில் அணிகிறீர்கள் என்பதும் அவசியம். முழங்காலுக்குக் கீழே கட் வருகிற ஜீன்ஸைத் தவிர்ப்பது நல்லது.
 
இந்த மாடலை அணியும் போது கால்கள் குட்டையாகவும் குண்டாகவும் இருப்பது போல் தெரியும். உடல் பருமனைக் காட்டிக் கொடுத்து விடும் என்பதால் ஜீன்ஸ் விஷயத்தில் கொஞ்சம் எச்சரிக்கை யாக இருப்பது நல்லது.

எந்த மாடலை அணிவதாக இருந்தாலும், அது உங்களுக்கு இணக்கமாவும் பொருத்தமாக வும் இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள். 
 
ஜீன்ஸுக்கு மேட்ச்சிங்காக ஹால்டர் டைப் டாப்ஸ் அணிவது நன்றாக இருக்கும் தான். ஆனால், அது உங்கள் தோற்றத்தை மேலும் பெரியதாக்கிக் காட்டும். 
குண்டான பெண்கள் ஆடையை தேர்வு செய்வது?
இந்த டைப் டாப்ஸ்கள், வயிறு மற்றும் இடுப்புப் பகுதிகளில் உள்ள அதிகப் படியான சதையைத் தனித்துக் காட்டி விடும் என்பதால் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
உங்கள் டிரெஸ்ஸு க்குப் பொருத்தம் இல்லாத நகைகளை அணிவதும் தவறு. எளிமையான நகை தேர்வு, உங்கள் தோற்றத்தை எடுப்பாகக் காட்டும். 
 
கால்களில் பெரிய கொலுசு அணிவதையும் பெரிய வளையங் களைக் கம்மலாக அணிவதையும் தவிர்த்தால், எத்தனை பெரிய கூட்டத்திலும் நீங்கள் தனித்துத் தெரிவீர்கள்!
Tags: