அழகாக இருக்கிறோம் என்றால் முகம் மட்டுமல்ல, உடலை வைத்தும் தான் சொல்வார்கள். அவ்வாறு உடலை அழகாக வைத்துக் கொள்பவர்கள் தான தற்போது உலக அழகியாக வருகிறார்கள்.
நம் உடலை எப்படி அழகாக வைத்துக் கொள்வது தெரியுமா?
ஏன் உலக அழகி போட்டிக்கு செல்பவர்கள் மட்டும் தான் உடலை அழகாக வைத்துக் கொள்ள வேண்டுமா என்ன?

வீட்டில் இருக்கும் அனைவருமே ஒரு சிலவற்றை செய்தால், உலக அழகி என்ன அதை விட பேரழகி யாகவே ஆகலாம்.
அதிலும் உடலில் இருக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி பராமரிப்பை செய்ய வேண்டும்.
 
மேலும் சருமம் மிகவும் மென்மை யாக இருக்க, சருமத்திற்கு சரியான பராமரிப்பை மேற் கொள்ள வேண்டும்.

ஆகவே உடலை அழகாக வைத்துக் கொள்ள என்ன வெல்லாம் செய்ய வேண்டும் என்பதை சற்று படித்து தெரிந்து கொண்டு, நீங்களும் அழகியாக மாறுங்களேன்.

கழுத்து 
நம் உடலை எப்படி அழகாக வைத்துக் கொள்வது தெரியுமா?
முகத்தை விட கழுத்தில் தான் பெரும் பிரச்சனை ஏற்படுகிறது. எப்படி யெனில் கழுத்தின் பின்புறம், கூந்தல் அடிக்கடிப் படுவதால், அங்கு அதிகமான வியர்வை ஏற்பட்டு, அழுக்குகள் படிந்து விடுகின்றன.

ஆகவே மற்ற இடத்தை விட கழுத்திற்கு அதிகப் படியான கவனிப்பு தேவைப் படுகிறது. மேலும் எந்த ஒரு கிரீமை முகத்திற்கு பயன்படுத்தி னாலும், அதை கழுத்திற்கும் பயன்படுத்த வேண்டும்.

வாரத்திற்கு ஒரு முறை ஸ்கரப் செய்து, மாய்ஸ்சு ரைசரை தடவ வேண்டும். இதனால் முகமும் கழுத்தும் ஒரே நிறத்தில் இருக்கும். மேலும் சருமமும் மென்மை யடையும்.
கைகள்

பெண்களின் கைகள் எப்போதும் பட்டுப் போன்று இருக்க வேண்டும். ஆகவே அத்தகைய கைகளை எப்போதும் சரியாக பராமரிக்க வேண்டும்.

உடல் அழகாக பராமரிக்கும் போது, தவறாமல் கைகளையும் கவனிக்க வேண்டும். ஏனெனில் கைகளில் அதிகமாக வெயில் படுவதால், அவை கருப்பாக மாறி விடும்.
 
அதுவே குளிர் காலங்களில் வறட்சியுடன் காணப்படும். எனவே எப்போது கைகளை கழுவினாலும் கைகளுக்கு மாய்ஸ்சு ரைசரை பயன்படுத்த வேண்டும்.

இதனால் கைகள் சற்று மங்கலாக காணப்படுவதைத் தவிர்க்கலாம். அதிலும் கை மூட்டுகளில் தான் அதிகமான கருப்பு காணப்படும்.

ஆகவே அங்கும் கிரீம்களை பயன்படுத்த வேண்டும். இதனால் வெயிலால் சருமம் கருமையடைவதைத் தடுக்கலாம்.

பின்புறம்
நம் உடலை எப்படி அழகாக வைத்துக் கொள்வது தெரியுமா?
வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை எண்ணெ யால் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் பின்புறம் நன்கு ஈரப் பதத்துடன் காணப்படும். 
 
அது மட்டு மல்லாமல் தினமும் குளிக்கும் போது, சிறிது மாய்ஸ்சு ரைசரை தடவி குளிக்க வேண்டும். இதனால் பின்புறம் அழகாக இருக்கும்.

 வயிறு 

சேலைகள் கட்டும் போது கண்டிப்பாக இடுப்பு பகுதி வெளியே தெரியும். அத்தகைய இடுப்புகள் அழுக் கில்லாமல், நன்கு சுத்தமாக சற்று ஈரப் பசையுடன் காணப்படும்.

அதற்கு சற்று பஞ்சை நீரில் நனைத்து, வயிறு மற்றும் இடுப்பை நன்கு துடைக்க வேண்டும். பின்னர் அங்கு மாய்ஸ்சுரைசர் கிரீமை தடவி வந்தால், அந்த இடம் பார்க்க அழகாக, கண்ணை கவரும் வகையில் இருக்கும்.
கால்கள் 

உடல் பராமரிப்பில் கால்களை பராமரிப்பது என்பது முக்கிய மானது. ஏனெனில் சிறு வயதில் அடிக்கடி முட்டிப் போட்டு நடத்தல் மற்றும் இதர காரணங் களால், முழங் கால்களில் கருப்பாக இருக்கும்.

ஆகவே அந்த இடத்தில் ஒயிட்னிங் கிரீம் அல்லது ஏதேனும் பேக்கை போட்டு வர வேண்டும். இதனால் கருப்பாக இருப்பது மாறி, குட்டையான ஸ்கர்ட் அல்லது சாட்ஸ் போன்றவை போடும் போது, அந்த இடம் அழகாக கணப்படும்.
அதுமட்டு மல்லாமல், பாதங் களையும் நன்கு அடிக்கடி மசாஜ் அல்லது கரப் செய்து வந்தால், பித்த வெடிப்புகள ஏற்படாமல் இருப்பதோடு, பாதங்களும் மென்மை யாக இருக்கும்.

மேற் கூறிய வற்றை யெல்லாம் மனதில் கொண்டு நடந்தால், சருமம் மென்மை யாக காணப் படுவதோடு, உடலும் அழகாக காட்சி யளிக்கும்.