ஒரு ஆணால் அம்மா! என்று எத்தனை, வயது வந்த பெண்களையும் அழைத்து விட முடியும், தங்கச்சி என்றோ அக்கா என்றோ ஒன்று விட்ட சகோதரங்களையோ வேறு பெண்களையோ அழைத்து விட முடியும்.
மகனே! மகளே! என்று பிறர் குழந்தைகளைக் கூட அழைத்து விட முடியும். ஆனால் மனைவி எனும் அழைப்பிற்குச் சொந்தம் ஒரு ஆணின் வாழ்க்கையில் ஒரு பெண்ணுக்கே உரியதாகும்.
அழைக்கும் விதத்திலேயே தனித்தன்மை வாய்ந்தவள் மனைவி ஒருத்தியே. ஒரு ஆணுடைய வாழ்க்கையில் அவன் தாய், தன் கணவராகிய அவனது அப்பாவுடன் தான் இறுதிவரை இருக்க விரும்புவர்.
சகோதரர்கள் தமது துணையுடன் தூரமாக எங்காவது சென்று விடுவார்கள், பெற்ற பிள்ளைகளும் இதே தான் செய்வார்கள்,
ஆனால் மனைவி என்பவள் தான் இருபதிலோ முப்பதிலோ என இடையில் இணைந்தாலும் இறுதி வரை வருவாள்.
வாழுகின்ற கொஞ்ச காலத்தில் தன் துணையை எந்தளவிற்கு எந்தளவு சந்தோசப்படுத்த முடியுமோ அந்தளவிற்கு அந்தளவு சந்தோசப்படுத்தி உண்மையாக வாழ வேண்டும்.
அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும். மனது புண் படும்படி பேசக் கூடாது. கோபப் படக்கூடாது. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது பலர் முன் திட்டக் கூடாது.
எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது. முக்கிய விழாக் களுக்கு சேர்ந்து போக வேண்டும். மனைவி யிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும். மனைவி யின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
வித்தியாச மாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும். பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றி ற்கும் உரிய முக்கியத் துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும். மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும். பிள்ளைக ளின் படிப்பைப் பற்றி அக்கறை யுடன் கேட்க வேண்டும்.
ஒளிவு மறைவு கூடாது. மனைவியை நம்ப வேண்டும். முக்கிய மானவற்றை மனைவி யிடம் கூற வேண்டும். மனைவி யிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப் பட வேண்டும்.
தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும். உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும். சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும். குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் இது உன் குழந்தை என்று ஒதுங்கக் கூடாது.
அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியி டமும் காட்ட வேண்டும். ஏனென்றால்
மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள்
மனைவி.
நேரத்திற்குச் சாப்பிட வேண்டும். சாப்பாடு வேண்டு மென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும். எங்கு சென்றாலும் மனைவி யிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
சொன்ன நேரத்திற்கு வர வேண்டும். எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும். மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும். மனைவிக்குப் பிடித்த வற்றைத் தெரிந்து வைத்தி ருக்க வேண்டும்.
பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக் கங்கள் கூடாது. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.... feeling wonderful with......