கொசுக்கள் மனித இரத்தத்தை விரும்புவது ஏன்? தெரியுமா?

Fakrudeen Ali Ahamed
1 minute read
யானை மற்ற விலங்குகள் மனித வாடையை பல அடி தொலைவில் மனித நடமாட்டம் இருக்கும் போதே கண்டுபிடித்து விடுகின்றன. உண்ணும் உணவின் வாடையை சுவையை நாம் உணர்ந்து கொள்வது போல் என்று கூறலாம்.
குறிப்பாக “சல்கேடோன் ” (Sulcatone ) எனும் வேதியல் நொதி வியர்வை சுரப்புகளில் வெளிப்படுகிறது. இந்த வாசம் அவற்றின் கொசுக்களின் மூளையில் ஆழ பதிந்துள்ளது.

நியூயார்க் ராக்ஃபெல்லர் பல்கலை கழகத்தை சேர்ந்த லெல்ஸ்லி வோஷெல் தலைமையில் ஒரு குழு கொசுக்களுக்கு ஏன் மனித இரத்தம் பிடிக்கிறது என்ற ஆய்வில் இறங்கியது.
ரத்தக் கட்டை நீக்கும் எளிமையான வைத்திய குறிப்புகள் !
விலங்குகளை காட்டிலும் மனிதனின் வாழ்க்கை முறை அவைகளுக்கு பிடித்து போனது. கொசுக்கள் தம் இனத்தை பெருக்குவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளை யும் மனிதர்கள் தங்களது இருப்பிடத் தினை சுற்றி தண்ணீர் மற்றும் கழிவுப் பொருட்களை அமைத்துக் கொண்டதே காரணமாம்.

காடுகளில் இரத்தத்தை தேடி அலைவதற்கு கிராமங்கள் நகரங்கள் அவைகளுக்கு தோதாக அமைந்து விட்டன. விலங்குகளிடம் இருப்பதை போன்ற தடிமனான ரோமங்களும், தோலும் மனிதர்களுக்கு இல்லை.
அது மட்டுமின்றி மனிதர்கள் கூட்டங் கூட்டமாக வசிக்கிறார்கள். அதனாலேயே விலங்குகளை விடுத்து அவை மனிதர்களை தேர்தெடுத்து இருக்க வேண்டும்.

14 விதமான கொசுக்களின் மரபியல் கூறுகளை ஆராய்ந்த போது மனிதர்களுக்கும் கொசுக்களுக் குமான தொடர்பினை உறுதி செய்து இருக்கிறார்கள்.
ஏன் கொசுக்கள் தேடி வந்து கடிக்கிறது - காரணம் இது தான் !
குறிப்பாக “Or4” (codes for an odor receptor) எனும் கூறு இதை உறுதி செய்கிறது. மேற்சொன்ன கூறு அதன் ஜீனில் பதியப்பட்டதி னால், புதிய கொசுக்கள் மனிதர்கள் மேல் காதல் கொண்டு துரத்துகின்றன. “அடெஸ் அஜிப்டி ” (Aedes aegypti) எனும் வகை கொசுக்களே அதிக அளவில் உலக முழுவதும் பரவி உள்ளன.
Tags:
Today | 13, April 2025