என்ன தான் விஞ்ஞானம், தொழில் நுட்பம் வளர்ந்தாலும் கொசுக் கடியில் இருந்து மட்டும் நம்மால் தப்பிக்க முடிவதே இல்லை.
அதிலும் மழைக்காலம் பனிக்காலம் என்றால் கேட்கவே வேண்டாம்.
கொசுக் களுக்கு கொண்டாட்டம் தான். கூட்டமாக வந்து கடிக்கும். கொசு கடித்த இடம் வேறு சிவப்பாகி தடித்தும் விடும்.
அதிலும் சிலரையே குறி வைத்து கடிப்பது போல் இருக்குமே! சரி இதுக்கெல்லாம் என்ன காரணம் என்று பார்ப்போம்.
36 முதல் 50 மீட்டர் தூரம் வரை வாசனைகளை கொசுவால் நுகர முடியும்.
கொசுக்கள் இரை தேடும் விதம்
கொசுக்கள் முதலில் வாசனையை வைத்து தான் இரை எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கும்.
அதாவது நாம் வெளிவிடும் கார்பன் டை ஆக்ஸைடை கொசுக்க ளால் நுகர முடியும். மேலும் அவற்றால் 72 வகையான வாசனையை உணர முடியுமாம்.
நம் வியர்வையில் உள்ள லாக்டிக் அமிலம் (Lactic Acid) போன்ற பல வேதிப்பொருட்கள் மணம் கொண்டவை.
கொசுக்களால் இவற்றை எளிதில் நுகர முடியும். மேலும் 36 முதல் 50 மீட்டர் தூரத்தில் கூட இந்த வாசனைகளை கொசுவால் நுகர முடியுமாம்.
வாசனையை நுகர்ந்து அருகில் வந்தவுடன் பார்த்து இரையை உறுதி செய்யும்.
கடைசியாக நம் உடல் வெளிவிடும் வெப்பத்தை உணர்ந்து நம்மை கடிக்கிறது.
கொசு ரத்த நாளத்தை தேடும் முறையை இங்கே வீடியோவாக காணுங்கள்!
ஏன் சிவந்து தடிக்கிறது?
உண்மையில் கொசுக்கள் நம்மை கடிப்பது இல்லை. நம் உடலில் உள்ள ரத்தத்தை கொசுக்கள்
அதன் வாய் பகுதியில் உள்ள உறிஞ்சு குழலை கொண்டு உறிஞ்சுகிறது. அதனால் நமக்கு வலி ஏற்படுகிறது.
கொசு உடலில் இருந்து ரத்தத்தை உறிஞ்சும் போது ரத்தம் உறைந்து விடாமல் இருக்க
சில என்சைம்கள் கொண்ட உமிழ்நீர் போன்ற வேதிப்பொருளை சுரந்து விட்டுச் செல்லும்.
நம் உடலில் இப்போது ஒரு அந்நிய பொருள் வந்து விடுவதால் நமது நோய் எதிர்ப்பு மண்டலம்
ஹிஸ்டமைன் (Histamine) என்ற வேதிப்பொருளை கொசு கடித்த இடத்திற்கு அனுப்பும்.
இப்போது கடித்த இடத்தில் உள்ள ரத்த குழாய் விரிவடைந்து ரத்தம் பாயும்.
இதனால் தான் கடித்த இடம் சிவந்து தடிக்கிறது.மற்ற எந்த அலர்ஜியையும் விட கொசுக் கடிக்குத் தான் நமது உடல் உடனே எதிர் வினை யாற்றும்.
கொசுக் கடித்த உடனே நாம் சொறிய ஆரம்பித்து விடுவோம். இதனால் தான் காயங்கள் ஏற்படுகின்றன.
மாறாக ஐஸ் கட்டியை கடித்த இடத்தில் வைப்பதன் மூலம் தடித்தல் மற்றும் காயங்களில் இருந்து தப்பிக்கலாம்.
யாரை அதிகமாக கடிக்கும்
உங்களுக்கு அதிகமாக வியர்த்தால் கொசு உங்களைத் தேடி வந்து கடிக்கும்.
வியர்வை யில் கொசுவைக் கவரும் வேதிப் பொருட்களின் அடர்த்தி அதிகமாக இருப்பதே அதற்குக் காரணம்.
உங்கள் உடலில் இருந்து வெளிவரும் வெப்பம் அதிகமாக இருந்தாலும் அது கொசுவைக் கவரும்.
நீங்கள் அதிகமாக அசையும் போதும் கொசு கடிக்கும் வாய்ப்பு அதிகம்.
ஏனெனில் உயிருள்ள இரையை கொசுவால் எளிதாக அடையாளம் காண முடியும்.
சுற்றுப் புறத்திற்கு முரணான நிறத்தில் நீங்கள் ஆடை அணிந்து இருந்தாலும் உங்களை விரைவில் கண்டு கொண்டு கடிக்கும்.
கர்ப்பிணிப் பெண்கள் அதிகமாக கார்பன் டை ஆக்ஸைடை வெளி விடுவதாலும்,
உடல் வெப்பத் தாலும் அவர்களை அதிகமாக கொசு கடிக்கிறது.
A ரத்த வகையை விட O ரத்த வகை உள்ளவர் களை அதிகமாக கடிக்குமாம்.
தீர்வு
கொசு கடித்தால் கடித்து விட்டுப் போகிறது என்று விட்டு விட முடியாது.
ஏனெனில் கொசுக்கள் தான் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களை உருவாக்கு கின்றன.
அதற்காக செயற்கை யான கொசுவர்த்தி சுருள்,கொசு திரவம் போன்ற வற்றை உபயோகிப்பதும் பல ஆபத்துகளை விளை விக்கிறது.
எனவே இயற்கையான வழிகளைப் பின்பற்ற லாம்.
வேப்பிலை, யூகலிப்டஸ் இலைகளை கொண்டு புகை போடுவது கொசுக்களை விரட்டும்.
வேப்பெண்ணை, விளக்கெண்ணை கொண்டு விளக்கு ஏற்றுவதும் சாம்பிராணி போடுவதும் கொசுக்கள் வராமல் தடுக்கிறது.
ஜன்னல் ஓரங்களில் பூண்டை நசுக்கி வைப்பதும், புதினாவை அரைத்துத் தெளிப்பதும் கொசுக் களை விரட்டும். எல்லா வற்றையும் விட கொசு வலைகளை பயன் படுத்துவது சிறந்தது. The post was originally published inNeotamilpublished here with permission