கொசுக்கள் பற்றி தெரிந்ததும் தெரியாததும் !

Fakrudeen Ali Ahamed
உலகத்திலேயே மிக ஆபத்தான பூச்சி எது? என்று பார்த்தால்… நாம் நினைப்பது போன்று அமேசான் காடுகளிலோ 
அல்லது ஆப்பிரிக்க காடுகளிலோ இருக்கும் ஒரு இனம் தெரியாத ஜந்து அல்ல… நம்மை சுற்றி இருக்கும் நாம் அறிந்த ” நுளம்பு/கொசு” தான்.

உலகிலேயே மிக ஆபத்தான பூச்சியாகும்! மலேரியா, டெங்கு, மஞ்சள் காமாலை காய்ச்சல், 

மேற்கு நைல் வைரஸ் போன்ற எண்ணி லடங்காத நோய்கள் பரவுவதற்கு இந்த கொசுக்கள் காரணமாக அமைகின்றது. 

வருடா வருடம் லட்சக் கணக்கான மக்களின் இறப்பிற்கு இந்த கொசுக்கள் காரணமாக இருக்கின்றன.

கற்காலம் முதல் இன்று வரை உலகில் வாழ்ந்த மனிதர்களில் 50% ஆனவர்களின் 

இறப்பிற்கு கொசுக்கள் காரணம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

இனி கொசுக் களை பற்றி தெரிந்த, தெரியாத சுவாரஷ்யங் களைப் பார்ப்போம்…

1. பெண் கொசுக்கள் மாத்திரமே மனிதரையும் விலங்கு களையும் கடிக்கும். ஆண் கொசுக்கள் பூக்களில் இருந்து உணவைப் பெற்றுக் கொள்ளும்.
2. இது அனைவரு க்கும் தெரிந்த விசயம். ஆனால், பெண் கொசுக்கள் மனிதரை தாக்குவதற் கான காரணம் 

தமது இனப்பெருக்க முட்டை க்குத் தேவையான புரதத்தை (protein ) பெற்றுக் கொள்வதற் காகவே.
3. சில இடங்களில் இருக்கும் கொசுக்கள் மனிதரை கடிப்பதே இல்லை (பெண் கொசுவாக இருந்தாலும்) 

அவை விலங்குகள் மற்றும் பறவைகளை மட்டுமே கடிக்கின்றன.

4. கொசுக்கள் மணிக்கு 1.5 – 2 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும்.

5. இது ஏனைய பூச்சி வகைகளுடன் ஒப்பிட்டால் மிகவும் மந்தமானது. போட்டி வைத்தால் கொசுக்கள் கடைசி யாகவே வரும்.

6. ஒரு செக்கனிற்கு 300-600 தடவைகள் தமது இறக்கைகளை அடிக்கும்.

7. இதன் விளை வாகவே உங்கள் தலைப்பகுதியை கொசு அண்டும் போது ஒரு வித ஒலி ஏற்படுகின்றது.

8. பொதுவாக வீடுகளை அண்டியே கொசுக்கள் வாழும். ஆனால் சிலவகை கொசுக்கள் 160 கிலோ மீட்டர் 
தூரத்தில் கூட தமது இனப்பெருக் கத்தை நடத்தும். (நீரிலேயே தமது குஞ்சுகளை இடும்.)

9. டைனோசர் காலத்தில் இருந்தே கொசுக்கள் இருந்து வந்துள்ள தாக விஞ்ஞானிகள் நம்புகின் றார்கள். 

தென் ஆபிரிக்க கண்டத்தில் உருவாகி உலகம் முழுவதும் பரந்திருக் கலாம் என்று கருதப்படுகிறது.

10. கொசுக்கள் கடித்து இரத்தத்தை உறிஞ்ச முதல் சிறிய அளவில் சிறு நீரை கழிக்கின்றன. 

சில வேளை களில் கடித்த இடத்தை சுற்றி ஈரமாக இருப்பதை உணர முடியும்.

11. கொசுக்கள் ஆண்களை விட பெண்களையே அதிகம் கடிப்பதற்கு ஆர்வம் காட்டுகின்றன.

12. பண்டைய கொசுக்கள் தற்போது இருக்கும் கொசுக்களை விட 3 மடங்கு உருவில் பெரியது.
13. 75 அடி தூரத்தில் இருக்கும் ஒரு மனிதரை சரியாக இனங்கண்டு கடிக்கும் மோப்ப சக்தி கொசுக் களுக்கு உண்டு.

14. ஒரு கொசு 5-6 மாத காலம் வரை வாழும் தகுதி யுள்ளது.

15. கொசுக்கள் 6 கால்களை உடையன.
16. ஒரு கொசுவின் சாதாரண நீளம் 16 மில்லி மீட்டர்க ளாக இருக்கும்.

17. 2700 – 3500 வகையான கொசுக்கள் உலகம் பூராவும் இருக்கின்றன.

18. mosquito என்பது biting fly என்பதையே குறிக்கின்றது.
Tags: