ஏன் ஆண்கள் பெண் குரலில் பேசுகிறார்கள் !

Fakrudeen Ali Ahamed
அறிமுக மில்லாத நபரு டன் போனில் பேசும் போது, அவர் ‘ஆணா, பெண்ணா’ என்பதை அந்தக் குரலை வைத்தே தீர்மானி ப்போம்.
போனில் நம்மிடம் பெண் குரலில் பேசியவர், எதிரில் ஆஜானு பாகுவான ஆணாக வந்து நின் றால் எப்படி இருக்கும்?

இயற்கை யாக பெண் களுக்கு இனிமை யான கீச்சு குரலும் ஆண் களுக்கு சற்று கடின மான குரலும் இருக்கும். 

சில ஆண் களின் குரல் பெண் களைப் போன்றே கீச் சென்று ஒலிக்கும்.

இது அடுத்தவர் களுக்கு சிரிப்பை வர வழைத் தாலும், சம்பந்தப் பட்டவரு க்கு ஆழ்ந்த மன வலி யையும் உளைச் சலையும் ஏற்படுத்தி விடும். 

இதே போன்று சில பெண் களும் ஆண் குரலில் பேசுவ துண்டு.

இது போன்ற குரல் மாற்றம் ஏற்ப டுவது ஏன்? இதை மாற்ற முடியுமா? காது, மூக்கு, தொண்டை நிபுணர் குமரே சனிடம் பேசினோம்...

‘‘14 வயது வரை எல்லா ஆண் களுக்கும் பெண் குரல் தான் இருக்கும். 14 வயதில் குரல் வளை யானது விரி வடைந்து விடும். 

இதைத் தான் குரல் உடைவது (மகரக்கட்டு) என்கிறா ர்கள்.

ஆண்க ளுக்கு ‘கீச்சு’ குரலானது மாறி, கொஞ்சம் கடினமான குரல் வரும். இதன் விளை வாகவே அவர்களுக்கு கழுத்தில் உள்ள

தைராய்டு கார்டிலேஜ் எனப்படும் குருத் தெலும்பு புடைத்து வெளிப் படையா கவே தெரியும். இதை ‘ஆடம்ஸ் ஆப்பிள்’ என்று சொல்வோம்.

15 வயதுக்கு மேலும் குரல் வளை யானது விரிவடைய வில்லை என்றால், அவர்க ளுக்கு பெண் குரலே தொடரும். 

குரல் வளையை இழுத்து விட்டு சரி செய்ய பல நவீன சிகிச்சை கள் உள்ளன.

எண்டோ ஸ்கோப் துணை யுடன் எளிமை யாக சிகிச்சை செய்து, இந்த பிரச்னையை சரி செய்து விடலாம். 

பெரும் பாலும் அறுவை சிகிச்சை தேவை ப்படாது. குரல் பயிற்சி கொடுத் தாலே சரியாகி விடும்.

ஆண்களை நாக்கை வெளியே நீட்டி கத்தச் சொல்லு வோம். அப்போது உள்ளி ருக்கும் உண்மை யான ஆண் குர லானது வெளிப் பட்டு விட்டால்,

அவருக்கு குரல் பயிற்சி மட்டுமே கொடுத்து ஆண் குரலை கொண்டு வந்து விடலாம்.

பெண் குரல் உடைய பெரும் பாலான ஆண்கள் தங்களது இயற்கை யான குரலை மாற்ற முடியாது என நி னைத்து சிகிச்சைக்கு வருவ தில்லை.

இது தவறான மனப் பான்மை. குரலில் எந்த மாற்றம் ஏற்பட் டாலும் காது, மூக்கு, தொண்டை நிபுணரை அணு குவது அவசியம்.

பெண்களு க்கும் ஆண் குரல் வரலாம். சில பெண் களுக்கு குரல் வளை யானது இயற்கை யாவே அகன்று காணப் படும். 

இதனால் குரல் கட்டை யாக, கரகரப் புடன் இருக்கும்.

ஆண்களு க்கான ஆண்ட் ரோஜென் ஹார் மோன், பெண் களுக்கு அதிக மாக சுரந்தால் குரல் கடின மாவது,

உடலில் ரோம ங்கள் அதிகம் முளை ப்பது போன்றவை ஏற்படும். 

குரல் மாற்றத் துக்கான காரண த்தைக் கண் டறிந்து அதற் கேற்ற சிகிச் சையை கொடுக்க வேண்டும்.

சில பெண் களுக்கு இயற்கை யாகவே நல்ல குரல் அமைந்தும், அதைத் தவறாக பயன்ப டுத்தி, கடின மாக்கிக் கொள்வதும் உண்டு.

அதிக மாக சத்தம் போட்டு, பேசுவதாலும் காலப் போக்கில் ஆண் குரலாக மாறி விடுவதும் உண்டு.

பாடகிகள் சரி யான முறையில் குரல் வளையை பயன் படுத்தா மல் உச்சஸ் தாயியில் பாடினால், இனிமை யான குரல் காணாமல் போகும் அபாயமும் உண்டு.

அறுவை சிகிச்சை செய்து குரலை மாற்றி அமைத் தாலும், உண்மை யான குரல் வரும் என்று சொல்ல முடியாது. 

அதன் பின்னரும் குரலுக் கான சிறப்புப் பயிற்சி களை கொடுத்து தான், பழைய குரலை கொண்டு வர முடியும்.

அதிக மாக குரல் வளையைப் பயன் படுத்தி சத்த மாக பேசுவது, சரியான முறை யில் குரலை பயன் படுத்தா மல் இருப்பது, 

தவறான முறை யில் குரல் வளைக்கு அழுத்தம் கொடுப்பது ஆகிய 3 விஷ யங்கள் குரலை பாதிக்கும்.

குரல் வளையை அதிகமாக பயன் படுத்திப் பேசும் போது குரல் நாண் களில் மொட்டு கள் உருவாகும். 

முதலில் மெது மொட் டுகளாக இருக்கும். சரியாக கவனி க்காமல் விட்டால் கடின மொட்டு களாக மாறி விடும்.
இதனால் குரல் கடின மாக மாறி விடும். மெது மொட்டு களை குரல் பயிற்சி களின் மூலம் சரி செய்து விடலாம். 

மொட்டுகள் கடினமாகி விட்டால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி யிருக்கும்...’’

என குரலின் மாறு பாடுகளை பற்றி பேசும் டாக்டர் குமரேசன், அதைச் சரியாக பயன் படுத்தும் முறைகள் குறித்தும் சொல் கிறார்.

‘குரலை சரியான முறை யில் பயன் படுத்த அரசியல் வாதிகள், பேச்சா ளர்கள், பாடகிகள், மிமிக்ரி செய்ப வர்கள் போன்றவர்கள்

பலவித மான குரல் பயிற்சிக் காகவும் குரலை மேம் படுத்திக் கொள்ளவும் சிகிச்சை க்கு வருகி றார்கள். 

அடி வயிற்றில் இருந்து காற்றை எடுத்து பேச வேண்டும். இவ்வாறு செய்தால் குரல் வளை பாதிப்படை யாது.

நடிகர் சிவாஜி கணேச னுக்கு இறுதி வரை சிம்மக் குரல் மாறாமல் இருந்த தற்கு நாபிக் கமலத்தில் இருந்து காற்றை எழுப்பி சிறப் பாக பேசத் தெரிந் ததே காரணம்.

குரலை பாதுகாக்க மூச்சுப் பயிற் சியும் அவசியம். 

அடி வயிற்றில் இருந்து காற்றை எழுப்பும் போது குரல் நாண்கள் எளிதாக ஒட்டிக் கொண்டு சரியான முறை யில் குரலை எழுப்பும்.

குரல் வளையை அதிகம் அலட்டிக் கொள்ளாமல் பேச முடியும். 

குரல் வளையை அதிகம் பயன் படுத்தா மல் மெது அண்ண த்தைப் பயன் படுத்தி பேச பழக வேண்டும்.

‘ஹா’ என்று உரத்துச் சொல்லி பழக வேண்டும். கசடதபற வரிசை யை உச்சரிப் பதும் குரலுக் கான சிறந்த பயிற்சி.

உதடு களை குவித்து ‘ஓம்’ சொல்லிப் பழக வேண்டும். அதிக அழுத்தம் கொடு த்தும் சத்த மாகவும் பேசு வதைத் தவிர்க்க வேண்டும்.

குரல் பயிற் சிகள் செய்து பார்த்தும் பலன ளிக்க வில்லை என்றால், இறுதி யாக அறுவை சிகிச் சையை தேர்வு செய்ய வேண்டும்...

கேப்ஸ்யூல்

கழுதைப் பால் கொடுக்க லாமா?

குழந்தை பிறந்த வுடன் 400 ரூபாய், 500 ரூபாய் கொடுத் தெல்லாம் சிலர் கழுதைப் பால் வாங்கி வந்து கொடுக்கி றார்கள். 
பிறந்த குழந்தை க்கு கழுதைப் பால், சர்க்கரை தண்ணீர் ஆகி யவை கொடுப்பது சரியா?

மகப்பேறு மருத்துவர் கீதா அர்ஜுன்...

குழந்தை பிறந்து முதல் 6 மாதங் களுக்கு தாய்ப்பால் தவிர, வேறு எதுவும் கொடு க்கக் கூடாது 

என்பது முக்கிய மான விஷயம். கழுதைப் பால், சர்க்கரை தண்ணீர், பால் பவுடர்,

இவ்வளவு ஏன் சாதாரண தண்ணீர் கூட தரக் கூடாது. நாக்கில் தேன் தடவு வதும் கூடாது. 

இவை தேவையும் கிடை யாது. தாய்ப் பால் தவிர, இந்த மாதிரி யான பொருட் களை தருவது கெடுதல் பயக்கும்.
Tags: