இந்த காய் உங்களுக்கு தைராய்டு பிரச்சினையை ஏற்படுத்தும்?

Fakrudeen Ali Ahamed
இயற்கை நமக்கு அளித்துள்ள பச்சை இலைக் காய்கறிக ளில் ஒன்றான முட்டைக்கோஸ் பலருக்கும் விருப்பமான ஒரு காய்கறி ஆகும். 

இந்த இலைக் காய்கறி உங்களுக்கு பல அற்புத பலன்களை வழங்கக் கூடியது. 

இதில் உள்ள நார்ச் சத்துக்கள் மற்றும் ஊட்டச் சத்துக்கள் உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மை களை வழங்குகிறது. 

குறிப்பாக இது இதய நோய் மற்றும் புற்றுநோய் பாதிப்புகளை குறைக்க உதவுகிறது

முட்டைக் கோஸால் எந்த அளவிற்கு நன்மைகள் இருக்கிறதோ அதேஅளவு அதனால் ஆபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. 

உங்களுக்கு முட்டைகோஸ் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும் என்றால் அதனால் ஏற்படும் பின் விளைவு களுக்கு தயாராகிக் கொள்ளுங்கள். 

இதனால் ஏற்படும் பாதிப்புகளின் அளவுகள் உங்கள் உடல் வலிமையை பொறுத்து மாறுபடும். 

இந்த பதிவில் முட்டைக் கோஸால் ஏற்படும் பகை விளைவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

வாயுக் கோளாறு

முட்டைகோஸால் வாயுக் கோளாறு ஏற்படும் எனது பலரும் அறியாத ஒரு தகவலாகும். 
ஆனால் அது தான் உண்மை. ப்ரோக்கோலி, காலிப்ளவர், பீன்ஸ் போன்ற உணவுகளை போலவே முட்டை கோஸும் 

உங்கள் சிறுகுடலில் உள்ள என்சைம் களால் எளிதில் செரிக்கக் கூடிய காய் அல்ல. 

அவை உங்கள் பெருங்குடலை அடைந்த வுடன் அவற்றின் மீது ஏற்படும் பாக்டீரியா தாக்குதல் வாயுவை உண்டாக்கும். 

உங்கள் வயிற்றில் வீக்கமோ அல்லது அடிக்கடி வாயு வெளியேறும் பிரச்சினையோ 

இருந்தால் அதற்கு காரணம் முட்டைக் கோஸாகத் தான் இருக்கும். 

இந்த கையை சாப்பிடாமல் தவிர்ப்பதே இதிலிருந்து தப்பிக்க ஒரே வழியாகும்.

தைராய்டு பிரச்சினை

அதிகளவு முட்டைகோஸ் சாப்பிடுவது உங்கள் தைராய்டு சுரப்பியின் இயல்பான செயல் பாட்டில் தலையிடக் கூடும். 
இதற்கு காரணம் முட்டைகோஸ் உங்கள் தைராய்டு சுரப்பி போதுமான அளவு அயோடின் சத்தை எடுத்துக் கொள்ள விடாமல் தடுக்கிறது. 

அப்படி இருக்கும் போது அதிகளவு முட்டைகோஸ் சாப்பிடுவது உங்களுக்கு அயோடின் பற்றாக் குறையை ஏற்படுத்தும், 

இதனால் உங்களுக்கு ஹைப்போ தைராய்டு ஏற்பட அதிக வாய்ப் புள்ளது. 

இதனை எப்போதாவது சாப்பிடுவது பாதிப்பை ஏற்படுத்தாது ஆனால் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும். 

குறிப்பாக காலிப்ளவர், கீரை, பருப்புகள், ப்ரோக்கோலி போன்ற உணவுகள் சாப்பிடும் போது 

இதனை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது தைராய்டு சுரப்பியில் பிரச்சினையை ஏற்படுத்தும்.

வயிற்றுப்போக்கு

செரிமான மண்டல கோளாறுகள் மற்றும் வயிற்றெரிச்சல் போன்ற பிரச்சினைகள் 

இருப்பவர்கள் முட்டைகோஸ் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இதற்கு காரணம் இதிலுள்ள ரெபினோஸ் என்னும் பொருளாகும், 

இது எளிதில் செரிக்காது. முட்டை கோஸில் அதிகளவு எளிதில் கரையாத நார்ச் சத்துக்கள் உள்ளது, 

100 கிராம் முட்டை கோஸில் 2.5 கிராம் நார்ச் சத்துக்கள் உள்ளது. 

பொதுவாக நார்ச் சத்துக்கள் உங்கள் செரிமான மண்டலத்திற்கு அதிக நன்மைகளை வழங்கக் கூடியது, 

ஆனால் அதிகளவு நார்ச்சத்து நிச்சயம் பிரச்சினை தான்.

இரத்த சர்க்கரை அளவை குறைப்பது

இரத்த சர்க்கரை அளவை கட்டுப் படுத்த வேண்டும் என்னும் போது முட்டைகோஸ் 

எவ்வளவு நன்மைகளை வழங்கு கிறதோ அதே அளவு தீங்கையும் ஏற்படுத்தக் கூடியது. 

இரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவை குறைக்கும் தன்மை இருப்பதால், 

அதிகமாக சாப்பிடும் போது அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மிகவும் குறைக்கக் கூடும். 

நீங்கள் எச்சரிக்கை யாக இல்லை யென்றால் இது ஹைபோக் லேசமியா குறை பாட்டை ஏற்படுத்தக் கூடும்.

குழந்தைகளுக்கு ஏற்றதல்ல

பெரியவர் களுக்கு முட்டைகோஸ் எப்படி வீக்கத்தையும், வாயுக் கோளாறையும் ஏற்படுத்து கிறது என்பதை முன்னரே பார்த்தோம். 

நீங்கள் பாலூட்டும் தாயாக இருந்தால் நீங்கள் சாப்பிடும் உணவுகள் உங்கள் குழந்தையின் மீதும் பாதிப்பை ஏற்படுத்தும். 
பொதுவாகவே குறிப்பிட்ட காலம் வரை குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகளிடம் 

இருந்து விலகி இருக்க வேண்டும் என்று அம்மாக் களுக்கு பரிந்துரை க்கப்படுகிறது. 

நீங்கள் இரவு நேரத்தில் முட்டைகோஸ் சாப்பிட்டால் அது குழந்தை களை இரவு முழுவதும் அழ வைக்கும்.

மருந்துகள் மீது குறுக்கீடு

இரத்தத்தை உறை யவைக்க வைட்டமின் கே என்பது அத்தியா வசியமான ஊட்டச் சத்தாகும். 

முட்டைகோஸில் உள்ள வைட்டமின் கே இதற்கு சிறந்த தேர்வாக உள்ளது 

ஆனால் அதே சமயம் இரத்தம் உறைய சில மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது. 

ஒரு கப் முட்டை கோஸில் 53 மைக்ரோகிராம் வைட்டமின் கே உள்ளது. 

ஊட்டச் சத்து நிபுனர்களின் கூற்றுப்படி ஆண்கள் ஒரு நாளைக்கு 120 மைக்ரோ கிராமும், 

பெண்கள் ஒரு நாளைக்கு 87 மைக்ரோ கிராம் வைட்டமின் கே எடுத்துக் கொள்ள வேண்டும். 

இந்த அளவு அதிகரிக்கும் போது அது பல பக்க விளைவு களை ஏற்படுத்தும்.
Tags: