கடலில் மணல் உருவாவது எப்படி? தெரியுமா?

Fakrudeen Ali Ahamed
பீச்சுக்குப் போனால் மணலில் உட்கார்ந்து மணல் வீடு செய்வோம், மணலில் குழி பறித்து விளையாடு வோம் இல்லையா? 
இப்படி விளையாடும் போது கடற்கரையில் இவ்வளவு மணல் எப்படி வந்தது என்று எப்போதாவது யோசித்திருக் கிறீர்களா?

கடற்கரையில் மணல் நிரம்பிக் கிடக்க அலைகளே காரணம்.

அலைகள் எப்போதும் கரையை ஓங்கி அறைந்தபடி கரையில் உள்ள கற்களை யெல்லம் அரித்துக் கொண்டே இருக்கின்றன.

சிறுசிறு கற்களை ஒன்றோடு ஒன்று அலைகள் மோத வைக்கின்றன.

இப்படிக் கற்கள் மோதிக் கொள்ளும் போது மாவரைக்கும் இயந்திர த்தில் அரைபடுவது போலக் கற்கள் அரைபட்டு கடல் மணல் உருவாகிறது.

கடலில் அலைகள் ஏற்பட என்ன காரணம் தெரியுமா? நிலாவும் சூரியனும் தான்.

இவை இரண்டும் மாறிமாறி செலுத்தும் ஈர்ப்பு விசைதான் அலைகளு க்குக் காரணம்.

இதனால் கடலில் உயர்வான அலையும் தாழ்வான அலையும் எப்போதும் மாறிமாறி ஏற்படு கின்றன.

பூமியின் சுழற்சியாலும் காற்றின் வேகத்தாலும் தொடர்ந்து அலைகள் அதிகரிக்கின்றன.
பல நீரோட்டங்கள் ஆழ்கடலுக்குள் மாவு அரைக்கும் கன்வேயர் பெல்ட்டுகள் போலப் பிரம்மாண்ட மாகச் சுழல்கின்றன.

இப்படி ஏற்படும் விசைகளின் தாக்குதலு க்கு ஈடுகொடுக்க முடியாமல் கடலுக்குள் பாறைகள் நொறுங்கு கின்றன.

பாறைகள் நொறுங்குவ தால் ஏற்படுவது தான் கடல் மணல்.

ஒரு கடற்கரையில் குவிந்து கிடக்கும் கடல் மணல், அந்த இடத்தில் உள்ள பாறைகளி லிருந்து வந்தது என்று மட்டும் கூறி விட முடியாது.

உதாரணமாக, கர்நாடக மாநிலத்தின் ஹர்வாடா கடற்கரையில் உள்ள மணல், வடக்கே மகாராஷ்டிர த்திலிருந்து வந்தது.

இப்படி அலையின் போக்கில் மணல் பயணிக்கவும் செய்கிறது.

அது சரி, கடற்கரை யில் உள்ள மணல் எந்தப் பகுதியைச் சேர்ந்தது என்று எப்படிக் கண்டுபிடிக் கிறார்கள்?
குவார்ட்ஸ், ஃபெல்ஸ்பார் போன்றவை கடல் மணலில் நிறைய உள்ளன.

இவற்றையும், கடல் மணலில் உள்ள வேதித்தன்மை, அதிலுள்ள கனிமங்கள் ஆகிய வற்றை ஆராய்ந்து,

அந்தந்த இடத்தின் பூர்வீக ரகசியங் களைக் கண்டு பிடிக்கிறார்கள் புவியியல் ஆய்வாளர்கள்.
Tags: