ஆண்களுக்கு ஆண்மை குறைவை உருவாக்கும் சோப்பு !

Fakrudeen Ali Ahamed
ஒரு மனுஷனுக்கு இப்படி யெல்லாமா சோதனை வருமா? ‘இனிமை யான தாம்பத்திய வாழ்க்கைக்கு  சரியான உணவுப் பழக்கம் உடற் பயிற்சி ஆரோக்கிய மான வாழ்க்கை முறை மட்டுமே போதுமான தல்ல.
ஆண்களுக்கு ஆண்மை குறைவை உருவாக்கும் சோப்பு
நீங்கள் நினைத்துக் கூட பார்த்திராத விஷயங் களும் உங்கள் செக்ஸ் வாழ்க் கையை பாதிக் கின்றன. ஆமாம்...

குளியல் சோப்புகளில் இருக்கிற டிரைக்ளோஸன் என்கிற வேதிப்பொருள் ஆண்களிடம் பெண் தன்மையை உருவாக்கி தாம்பத்திய வாழ்க்கையை அழிக்கிறது’ என்று கூறியிருக்கிறது சமீபத்திய திகில் ஆய்வு ஒன்று.

இந்த டிரைக்ளோஸனை சோப் தயாரிப்பில் பயன் படுத்து வதற்கு அமெரிக்கா வின் உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப் பாட்டு நிறுவன மான FDA தடை விதிப்பதாகக் கூறியிரு க்கிறது.

அலர்ட்டான வெளிநாட்டு சோப் தயாரிக்கும் நிறுவனங் கள் டிரைக்ளோஸன் என்ற பெயரைத் தங்களுடைய லேபிளில் இருந்து அகற்றத் தொடங்கி யிருக்கிறது.

சரும நல மருத்துவர் வானதியிடம் இந்த சர்ச்சை குறித்துக் கேட்டோம். ‘‘நுண் கிருமிகளை நீக்குவ தற்காகப் பயன் படுத்தப்படும் ஒரு வேதிப்பொருள் தான் டிரைக்ளோஸன் (Triclosan). 
ஆண்களுக்கு ஆண்மை குறைவை உருவாக்கும் சோப்பு !
மருத்துவத் துறையில் தொற்று அபாயம் அதிகம் என்பதால் மருத்து வர்கள் செவிலியர் களின் பயன் பாட்டுக் காகவே இந்த டிரைக்ளோஸன் கலந்த சோப்பு களைப் பயன்படுத்த ஆரம்பித் தார்கள். இதற்கு Medicated Soap என்றே பெயர். 
 
இது தெரிந்திருந்தும் இப்போது பொதுமக்கள் பயன் படுத்தும் குளியல் சோப்பு களிலும் ஷாம்பு களிலும் பாடி வாஷ் களிலும் டியோடரண்டு களிலும் இந்த டிரைக்ளோஸனை கலந்து விற்பனை செய்யத் தொடங்கி யிருக்கிறார் கள். 

அவ்வளவு ஏன் டூத் பேஸ்ட்டு களில் கூட இப்போது டிரைக்ளோஸனை சேர்க்கி றார்கள். இது பெண் தன்மையை ஏற்படுத்தும் வேதிப்பொருள் என்பது உண்மை தான். 
 
ஆனால் அது அளவு கடந்து டிரைக்ளோஸனைப் பயன்படுத்தும் போது தான். இந்தியாவில் விற்கப்படுகிற சோப்புகளைப் பொறுத்த வரை மிகமிகக் குறைந்த அளவிலேயே டிரைக்ளோஸன் சேர்க்கப் படுகிறது.

நாம் பயப்படுகிற அளவுக்கு டிரைக்ளோஸன் நம் சோப்புகளில் இல்லை. இதனால் தைராய்டு குறைபாடு ஏற்படலாம்...’ என்றவரிடம் பிறகு எப்படி இந்த சர்ச்சை எழுந்தது என்று கேட்டோம்.
டிரைக்ளோஸனை சேர்க்கி றார்கள்
‘நாம் பயன்படுத்தும் சோப் ஷாம்பு டூத் பேஸ்ட்டில் இருக்கும் மிகக் குறைவான டிரைக்ளோஸன் தண்ணீர் மூலம் பூமியிலும் சுற்றுப் புறங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாகக் கலந்து வருகிறது.

இதுவே காய்கறிகள் தானியங்கள் கடல் உணவுகள் போன்ற வற்றில் கலந்து உணவு வழியாக நம் தட்டுக்கு வருகிறது. இதனால் தான் பெண் தன்மை ஏற்படுகிறது என்று ஆராய்ச்சி யில் கூறியிருக் கிறார்கள்.

அதனால் வேதிப் பொருட்களின் பயன் பாட்டை முடிந்த அளவு குறைத்து சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதன் மூலமே இது போன்ற அபாயங் களில் இருந்து தப்பிக்க முடியும்.

சுத்தமாக இருக்கிறேன் பேர்வழி என்று அடிக்கடி சோப் போட்டு முகத்தைக் கழுவுவது குளிப்பது மெடிக்கேட்டட் சோப்புகள் பயன் படுத்துவது 
ஆண்களுக்கு ஆண்மை குறைவை உருவாக்கும் சோப்பு !
நுண் கிருமிகளை நீக்கும் திறன் கொண்டது என்று விளம்பரப் படுத்தப்படும் சோப்புகளை வாங்கிப் பயன் படுத்தாமல் இருப்பது...
 
என்று எந்தளவுக்கு எச்சரிக்கை யாக இருக்கி றோமோ அந்த அளவுக்கு நம் ஆரோக்கிய த்துக்கு நல்லது. நம் சருமத்தில் நல்ல பாக்டீரியா க்களும் இருக்கின்றன கெட்ட பாக்டீரியா க்களும் வசிக்கின்றன.
 
கெட்டதை அழிக்க வேண்டும் என்று நாம் பயன் படுத்தும் சோப் ஃபேஸ் வாஷ் போன்றவை நல்ல பாக்டீரியாக் களையும் அழித்து விடுகிறது. பல சருமப் பிரச்னை களுக்கு நம் அதீத சுத்தமும் அதிகப் படியான அறிவுமே காரணம்!’’ என்கிறார் வானதி
Tags: