பருவம் அடைந்த சிறுமிகளுடன் உறவு - ஆப்பிரிக்காவில் சடங்கு !

Fakrudeen Ali Ahamed
1 minute read
பாலியல் சுத்திகரிப்பு சடங்கு என்ற பெயரில் பருவம் அடைந்த சிறுமிகளுடன், வயது முதிர்ந்த ஒருவர் 
பாலியல் உறவு கொள்ளும் வினோத பழக்கம் ஆப்பிரிக்கா நாட்டில் நடந்து வருகிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மால்வேயில் ஒரு விசித்திரமான பழக்கம் உள்ளது. 
அதாவது, பருவம் அடைந்த சிறுமிகளை, தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு ஒருவருடன் பாலியல் உறவில் ஈடுபடுத்து கிறார்கள்.

இதற்கு அந்த சிறுமி மறுத்தால், அந்த குடும்பத்திற்கு சாபம் வந்து சேரும் என்று நம்புகிறார்கள். 

அந்த கிராமத்தில் இதற்காகவே ஒருவர் நியமிக்கப் பட்டுள்ளார். அவர் பெயர் எரிக் அனிவா. 

ஆனால் இவரை எல்லோரும் ஹெய்னா (கழுதைப் புலி) என்று அழைக்கிறார்கள்.

சிறுமிகள் கருவுற்றால் அதை கலைத்து விடுகிறார்கள். இவர் ஒரு சிறுமியுடன் உறவில் ஈடுபடுவதற்கு 3 முதல் 5 டாலர்கள் வரை பணமும் கொடுக்கிறார்கள்.

இதில் ஒரு கொடிய செய்தி என்ன வெனில், எரிக் அனிவா ஒரு எய்ட்ஸ் நோயாளி. 

இதனால், அங்கு ஏராளமான சிறுமிகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

ஆனால், அதைப் பற்றி யெல்லாம் யாரும் கவலைப் படுவதில்லை. 
ஹெரிக் இந்த வேலையில் ஈடுபடுவதை அவரின் 2 மனைவிகளும் விரும்ப வில்லை. ஆனாலும், ஹெரிக் நிறுத்திய பாடில்லை.

கல்வி கற்றுக் கொடுப்பதன் மூலம், இந்த சடங்கை தடுக்க பல வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் முயன்று பார்த்துள்ளது. 

ஆனால் தடுக்க முடிய வில்லை.
Tags:
Today | 6, April 2025