தோலில் ஏற்படும் சிவந்த மற்றும் வீக்கத்துடன் உண்டாகும் தடிப்பு நீங்க !

Fakrudeen Ali Ahamed
சத்துக்கள் : 
சோடியம், கார்போ ஹைட்ரேட் நார்ச்சத்து, சர்க்கரை, புரதம் வைட்டமின் (ஏ, பி6, சி, இ, கே)
தீர்வு : 

வாழைப்பூ (இரண்டு அல்லது மூன்று இதழ்களை நீக்கி விட்டு பூவை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொண்டு

(100 கிராம்) அதனுடன் முருங்கை விதை (10) , கோவக்காய் (10), புதினா (சிறிதளவு) இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு 

தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.

இளம் பிஞ்சு வாழைக்காய் மற்றும் வாழைப் பூவை தேவையான அளவு எடுத்து நீராவியில் வேக வைத்து 

பொறியல் செய்து அதனுடன் புதினா தழையை பொடியாக நறுக்கி பொறியலுடன் 
கலந்து மதிய வேளை உணவில் அதிகமாக வைத்து சாப்பிட்டு வரவும்.

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் 
இரவு படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு :

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன் படுத்தவும்.

கோவை பாலா இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்.
Tags: