காதல் அதிகரிப்பதால் முத்தம் தரத் தோன்றுகிறதா அல்லது முத்தம் தருவதால் காதல் அதிகரிக்கிறதா..?
இதற்கான விடை, சிக்னல் கிடைப்பதால் செல்போனில் பேசுகிறோமா அல்லது நாம் பேச வேண்டும் என்பதற்காக சிக்னல் கிடைக்கிறதா என்பதற்கான பதிலில் அடங்கி யிருக்கிறது! எப்படி வந்தாலும் இன்பம் இன்பம்தான்!
* அதிக நேரம் முத்தம் கொடுத்தால் உடலில் 8 முதல் 16 கலோரிகள் வரை குறையும்! ‘துப்பாக்கி’ படத்தில் இது வசனமாகவே வரும்!
* பெண்ணின் உதட்டில் ஓர் ஆண் முத்தமிடும் போது அவனுக்குள் டெஸ்டோஸ்ட்டிரான் என்னும் காதல், காமம் தொடர்புடைய ஹார்மோன் சுரக்கும்.
அது அப்படியே பெண்ணின் வாய் வழியே அவளுக்குள் சென்று ம்யூகஸ் மெம்ப்ரேன் வழியாக ஊடுருவுகிறது. அவளுக்குள் காதல் உணர்வைத் தூண்டுகிறது!
* ஆணோ பெண்ணோ, முத்தமிடுவதால், முத்தம் கொடுப்பதால் இரத்த அழுத்தம் குறையும். இரத்த ஓட்டம் அதிகரிக்கும். தலைவலி நீங்கும்!
* முத்தம் என்பது செரோடோனின், டோபமைன், ஆக்சிேடாஸின் ஆகிய வற்றை சுரக்கச் செய்து ஆணையும் பெண்ணையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
* காலையில் வேலைக்குச் செல்லும் முன் மனைவியிடம் / கணவனிடம் முத்தம் வாங்கிச் செல்பவர்கள் அன்றைய தினம் முழுக்க தங்கள் பணியை சிறப்பாகச் செய்வார்களாம்.
சோடா புட்டி அணிந்த ஆராய்ச்சி யாளர்கள் இதை புள்ளி விவரத்துடன் நிரூபித்திருக் கிறார்கள்!
* முத்தமும் உடற் பயிற்சி தான். முகத்தி லிருக்கும் தசை சீராகி முகப்பொலிவு அதிகரிக்கும்.
* முத்தமிடும் போதும், அதைப் பெறும்போதும் உமிழ்நீர் அதிகம் சுரக்கும். இதனால் பற்களுக்கு இடையில் சிக்கியிருக்கும் உணவுத் துணுக்குகள் விலகும். பற்கள் சொத்தையாவது தடுக்கப்படும்!
* லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... இவை அனைத்தும் தமிழ்கூறும் நல்லுலகுக்கு கமல் அறிமுகப் படுத்திய பிரெஞ்ச் கிஸ் எனப்படும் உதட்டோடு உதடு முத்தமிடும் போது தான் கிடைக்கும்.
எனவே, சட்டப்படி பந்தமான இணையின் உதடுகளை மட்டுமே பயன்படுத்துங்கள். இல்லையெனில் இன்றில்லை என்றாலும் என்றேனும் ஒருநாள் சர்ச்சையில் சிக்கி #metoo -வில் சிக்குவீர்கள்!
முக்கிய குறிப்பு: இந்த நன்மைகள் தமிழ் முத்தங் களுக்கு இல்லை என்பதால், தமிழனாக இருந்தால் இதை ஷேர் செய்யாதீர்கள்!