இன்று பல வீடுகளில் இருக்கும் பெரிய பிரச்சினை இந்த குறட்டை தான்.
தூங்கும் போது "கொர் கொர்" என்ற சத்தத்தை தந்து, பிறரின் எரிச்சலுக்கு ஆளாக்கும் இந்த குறட்டையை ஒழிக்க முடியாமல் தடுமாறுபவர்கள் பலர்.
குறிப்பாக தம்பதிகளிடையே இந்த குறட்டை மிக மோசமான விளைவை ஏற்படுத்தி உள்ளது.
குறட்டையை உடனே விரட்டும் ஆயுர்வேத முறைகள்..! ஒரு முறை செய்தாலே நல்ல பலன் கிடைக்குமாம்...
இதனால் விவாகரத்து வாங்கிய கதைகளும் இங்கு உண்டு.
இப்படிப்பட்ட சற்றே மோசமான இந்த குறட்டையை முழுமையாக விரட்ட பல்வேறு இயற்கை வழிகள் இருக்கின்றன.
அவை என்னென்ன என்பதை வாங்க தெரிஞ்சிக்கலாம்.
யாருக்கு பாதிப்பு..? பொதுவாக நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது தான் இந்த குறட்டை ஏற்படுகிறது.
நமது தொண்டை பகுதி மிகவும் இலகுவாகி அதிக சத்தத்தை குறட்டையாக ஏற்படுத்துகிறது.
இது பெரும்பாலும் குறட்டை விடுபவரை காட்டிலும் அவருக்கு அருகில் உறங்குபவரை பாதித்து தூக்கத்தை தொலைத்து விடுகிறது.
வேறு காரணிகள்..? வேறு காரணிகள்..? தொண்டை பகுதியை சுற்றியுள்ள திசுக்கள் ஒன்றோடு ஒன்று உராயும் போது குறட்டை வருகிறது.
ஆனால், குறட்டை விடுபவர்களுக்கு மேலும் சில பாதிப்புகள் இதனால் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக உடல் எடை கூடுதல், தூக்கமின்மை, தயக்கம் ஆகிய பிரச்சினை குறட்டையால் ஏற்படுகிறது.
ஆலிவ் எண்ணெய் போதுமே..!
உங்களின் குறட்டை பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு அற்புத மருந்து தான் இந்த ஆலிவ் எண்ணெய்.
இந்த குறிப்பை தொடர்ந்து செய்தாலே போதும்.
தேவையானவை :-
தேன் - 1/2 ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 1 ஸ்பூன்
செய்முறை :-
தினமும் தூங்குவதற்கு முன்னர் 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சப்பிட்டு விட்டு தூங்கவும்.
இல்லையேல் 1/2 ஸ்பூன் தேனுடன் 1/2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து தினமும் இரவு சாப்பிடலாம்.
இவ்வாறு செய்வதால் குறட்டை தொல்லையில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.
புதினா வைத்தியம்
புதினா வைத்தியம் குறட்டையை எளிதாக விரட்டி அடிக்க இரு அற்புத மூலிகைகள் உள்ளன.
இவை நம் வீட்டிலே கிடைக்கும் பொருட்கள்.
தேவையானவை :-
புதினா - சிறிது
வெந்தயம் - 1 ஸ்பூன்
செய்முறை :-
புதினா மற்றும் வெந்தயத்தை நீரில் கலந்தும் குடிக்கலாம். அல்லது அப்படியே இதனை சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்து விடலாம்.
இந்த முறையை தூங்க போகும் 1 மணி நேரத்திற்கு முன்பாக செய்வது மிக சிறந்தது.
மேலும், இதனை தொடர்ந்து செய்து வந்தால் குறட்டை தொல்லை நீங்கி விடும்.
ஏல நீர்
வெது வெதுப்பான நீரில் 1/2 ஸ்பூன் ஏலக்காய் பொடியை கலந்து தினமும்
தூங்குவதற்கு முன்னர் குடித்து வந்தால் தொண்டை பகுதியில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் குணமாகி விடும்.
எனவே, சுலபமாக மூச்சு விடலாம். மேலும், விரைவிலே குறட்டை பிரச்சினை நீங்கி விடும்.
இந்த ஜுஸ் பயன்படுத்துங்க...
உங்களின் குறட்டை பிரச்சினைக்கு ஒரு எளிய ஜுஸ் உதவும்.
இதனை தொடர்ந்து குடித்து வந்தால் எல்லா வித சுவாச பிரச்சினையாக்கும் முடிவு கிடைக்கும்.
தேவையானவை :-
கேரட் 1
ஆப்பிள் - 1
எலுமிச்சை - 1/4 கப்
இஞ்சி - சிறிது
ஆரஞ்சு சாறு - 1 கப்
செய்முறை :-
முதலில் கேரட், இஞ்சி மற்றும் ஆப்பிளை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
பிறகு இவற்றுடன் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிக்கவும்.
இந்த ஜுஸை தூங்க போகும் முன் குடித்து வந்தால் குறட்டையுடன் சேர்ந்து சுவாச பிரச்சினைகளும் குணமாகி விடும்.
யூகலிப்டஸ் எண்ணெய் யூகலிப்டஸ் எண்ணெய் வெது வெதுப்பான நீரில் சிறிது யூகலிப்டஸ் எண்ணெய்யை சேர்த்து
ஆவி பிடித்தால் உங்களின் குறட்டை பிரச்சினை முடிவுக்கு வரும்.
ஏனெனில், இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வலி நிவாரணி தன்மைகள் குறட்டையை தடுக்க கூடியது.
மேலும், சளி தொல்லை உள்ளவர்களுக்கும் இது சிறந்த தீர்வாகும்.
மஞ்சளின் மகிமை
நம் எல்லோருக்கும் இது நன்கு தெரிந்த ஒன்று தான். அதாவது நமது உடலில் ஏற்படுகின்ற
பல வகையான நோய்களுக்கு இந்த மஞ்சள் ஒரு சிறந்த மருந்தாக உள்ளது.
அதே போன்று, இது குறட்டை பிரச்சினைக்கும் ஒரு தீர்வை தருகிறது.
தேவையானவை :-
பால் - 1 கப்
மஞ்சள் - 2 ஸ்பூன்
செய்முறை :-
முதலில் 1 கப் பாலை கொதிக்க வைத்து விட்டு, பிறகு அதனுடன் மஞ்சள் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
இதனை தூங்க போகும் 30 நிமிடத்திற்கு முன்னர் குடித்தால் குறட்டை பிரச்சினையை சரி செய்து விடுமாம்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.