அடிக்கடி சிறுநீர் கழிப்பது பற்றி நாம் அறியாத உண்மைகள் !

Fakrudeen Ali Ahamed
சிறுநீர் பாதை நோய் தொற்று மற்றும் மிகைப்புச் சிறுநீர்ப்பை. ஆகியவை அடிக்கடி சிறுநீர் கழிப்பதன் ஒருவித அறிகுறியாகும். 
 
பெண்களில், மாதவிடாய் அல்லது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் ஏற்ற இறக்கங்களும் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான தூண்டுதலை ஏற்படுத்தும். 
 
சிறுநீர்ப்பை கற்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான மற்றொரு காரணமாகும். ஆனால் சில முட்டால் தனமான காரணங்கள் கூறப்படுவது உண்டு. அதனை பற்றி இன்கு காண்போம்.

கொலஸ்ட்ரால் என்பது என்ன? நம் உடல் எங்கிருந்து பெறுகிறது?
உண்மை #1


ஒரு நாளுக்கு ஒருவர் 7 முறை வரை சிறுநீர் கழிப்பது சாதாரணமாகும். இதை காட்டிலும், மிக குறைவாக அல்லது அதிகமாக சிறுநீர் கழிப்பது உங்கள் ஆரோக்கி யத்தில் ஏதோ மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதன் அறிகுறி

உண்மை #2

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்றால் குறைந்த பட்சம் 7 நொடிகளாவது சிறுநீர் கழிப்பீர்கள்.

மிக அவசரமாக சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு இருந்தும் 2 நொடிகள் மட்டும் சிறுநீர் கழிக்கிறீர்கள் என்றால் நீங்கள் ஏதோ தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளீர்கள் என அர்த்தம்.

உண்மை #3

முதிர்ச்சி அடைந்த ஓர் நபரின் சிறுநீர்ப்பை 300 – 500 மி.லி அளவிலான சிறுநீரை அடக்கி வைத்துக் கொள்ளும் அளவிற்கும்.
உண்மை #4

ரோமர்கள் அவர்களது சிறுநீரை கொப்பளிக்கும் பழக்கம் கொண்டிருந்தனர். சிறுநீரில் இருக்கும் அமோனியா பற்களை வெள்ளையாக வைத்துக் கொள்ள உதவும் என அவர்கள் எண்ணினார்.

குழந்தைகளுக்கு சாக்லேட் சிப் பிரெட்சல் குக்கீஸ் செய்வது எப்படி?

உண்மை #5

உங்கள் சிறுநீரின் நிறத்தை வைத்தே உங்கள் உடல் நிலையை பற்றி அறிந்துக் கொள்ள முடியும்.,
வெள்ளை (சுத்தமாக) – நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறது.

வெளிறிய மஞ்சள் – போதுமான அளவு நீர்ச்சத்து

மஞ்சள் – உடலில் நீரச்சத்து குறைந்து வருகிறது.

பிரவுன் – கல்லீரல் தொற்று / பழைய இரத்தம்.

சிவப்பு / பின்க் – தூய இரத்தம் சிறுநீரில் கலந்து வருகிறது / சிறுநீரக கோளாறு / புற்றுநோய். நீளம், பச்சை – தவறான மருந்துகள் உட்கொள்ளுதல் / உணவில் அதிகப் படியான சாயம் கலப்பு.

உண்மை #6

சிறுநீர் கழிக்கும் போது இனிப்பு வாசனை வருகிறது எனில், உங்களுக்கு நீரிழிவு / சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளது என்பதன் அறிகுறி.

உண்மை #7

சிறுநீர் மிகவும் துர்நாற்றம் வீசுகிறது எனில், சிறுநீரகத்தின் வழியாக க்ளூகோஸ் மற்றும் புரதம் அதிகப்படியாக வெளியேறுகிறது என்று அர்த்தம்.

சைவப் பிரியர்களுக்கு காக்டெயில் பிரியாணி செய்வது எப்படி

உண்மை #8

மருத்துவர்கள் ஒளிகுர்யா (oliguria) எனும் ஓர் நிலை இருக்கிறது. இது, நீங்கள் போதுமான அளவு சிறுநீர் கழிப்பது இல்லை என்பதை வெளிக்காட்டுகிறது என்கின்றனர்.

உண்மை #9

நாம் கழிக்கும் சிறுநீரில் சோடியம், பொட்டாசியம் மற்றும் க்ளோரைட் போன்ற 3000 வகையிலான கூறுகள் இருக்கின்றன.

உண்மை #10

டூனா, காரமான உணவுகள், காபி போன்ற உணவுகளை அதிகமாக உட்கொள்வ தால் உங்கள் சிறுநீரின் நாற்றத்தில் மாற்றம் உண்டாக்கும்.
உண்மை #11

காட்டில் அல்லது ஆட்கள் இல்லாத இடத்தில் தொலைந்து போனாலோ, கையில் நீர் இல்லாத சமையத்தில் சிறுநீரை அருந்தலாம் என சிலர் கூறுவதுண்டு.
 
ஆனால், இது தவறு. சிறுநீரில் இருக்கும் அதிகப் படியான உப்பு, உடலில் நீர் வறட்சி உண்டாக காரணி யாக அமையும்.

புலியோடு போராடி உயிர் பிழைத்த வீரர்... அதிர வைத்த சம்பவம் !

உண்மை #12


Parauresis எனப்படுவது சிறுநீர் கழிக்க வெட்கப்படும் நிலை ஆகும். அருகில் யாரேனும் இருந்தால் சிலர் சிறுநீர் கழிக்க சங்கோஜப்படுவார்கள்.

உண்மை #13
நீச்சல் குளத்தில் குளிக்கும் போது கண்கள் சிவப்பது குளோரின் காரணத் தால் அல்ல. நீச்சல் குளத்தில் அதிகமாக சிறுநீர் கலப்பு ஏற்பட்டிருப்ப தால்.

உண்மை #14

குழந்தைகள் கருப்பையில் இருக்கும் போதே சிறுநீர் கழிக்க துவங்கி விடுவார்கள்.
 
உண்மை #15

காலையில் முதன் முறை கழிக்கும் சிறுநீரில் அமிலத் தன்மை அதிகமாக இருக்கும். இதை ஆங்கிலத்தில் மார்னிங் பீ என்று கூறுகின்றனர்.
Tags: