உடற்பயிற்சிக்கு பின்னர் செய்ய கூடியதும் செய்ய‍க் கூடாததும் !

Fakrudeen Ali Ahamed
0
பயனுள்ள‍ குறிப்புக்கள் தினமும் உடற் பயிற்சியை தவறாமல் செய்து வருவது என்பது சிறப்பான ஒன்று. 
உடற்பயிற்சிக்கு பின்னர் செய்ய கூடியதும் செய்ய‍க் கூடாததும் !
ஆனால் அப்படி அன்றாடம் செய்யும் உடற்பயிற்சிக்கு பின்னர் செய்ய வேண்டியவைகளை சரியாக செய்யாமல் போனால், உடற்பயிற்சி செய்வதே வீணாகி விடும். 
 
உடற்பயிற்சிக்கு பின், மறுநாள் மீண்டும் உடற்பயிற்சி செய்வதற்கு உடலுக்கு போதிய ஓய்வு தேவைப்படும்.

அத்தகைய ஓய்வு கிடைக்காமல் தொடர்ந்து கடினமான உடற்பயிற்சிகளை மேற் கொண்டு வந்தால், உடலில் பிரச்சனைகளை சந்திக்கக் கூடும். 
 
எனவே உடற்பயிற்சி செய்த பின் என்ன வெல்லாம் செய்ய வேண்டுமென்று கேட்டுத் தெரிந்து கொண்டு, அவற்றைப் பின்பற்ற ஆரம்பியுங்கள். 

இங்கு உடற்பயிற்சிக்கு பின் னர் மேற்கொள்ள வேண்டியவை களை பார்க்கலாம்..

உடற்பயிற்சி செய்து முடித்த பின், உடலை ரிலாக்ஸ் அடையச் செய்யும் உடற்பயிற் சிகளை மேற்கொள்ள வேண்டு ம். 

சைவப் பிரியர்களுக்கு காக்டெயில் பிரியாணி செய்வது எப்படி?

இப்படி செய்வதால், கடுமையான உடற்பயிற்சியின் போது அதிகமாக இருந்த இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு சாதாரண நிலைக்கு வந்து, இதனால் தீவிரமான பிரச்சனை ஏதும் நேராமல் தடுக்கும்.

ஏனெனில் உடற்பயிற்சியின் போது அதிகமாக வியர்த்ததால், உடையில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் குடிப்புகுந்திருக்கும். 
 
அத்தகைய உடையை நீண்ட நேரம் உடுத்தினால், சருமத்தில் நோய்த் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
உடற்பயிற்சிக்கு பின்னர் செய்ய கூடியதும் செய்ய‍க் கூடாததும் !
எனவே தவறாமல் உடற் பயிற்சிக்கு பின், உடைகளை மாற்றுவதோடு, அதனை துவைத்து விடவும் வேண்டும். உடையை மாற்றி துவைத்த பின், குளித்து விட வேண்டு ம்.

வெறும் உடையை மட்டும் மாற்றினால், சருமத்தில் வியர்வை படலம் ஏற்பட்டு, பாக்டீரியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஆகவே உடற் பயிற்சிக்கு பின்னர் குளித்து விடுவது நல்லது.

புலியோடு போராடி உயிர் பிழைத்த வீரர்... அதிர வைத்த சம்பவம் !

உடற் பயிற்சிக்கு பின் போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், உடற் பயிற்சியின் போது கடுமையான காயங்களைக் கண்ட உடல் தசைகள் ரிலாக்ஸ் ஆகாது. 
 
ஆகவே உடற் பயிற்சிக்கு பின்னர் எவ்வளவு தண்ணீர் குடிக்க முடியுமோ அவ்வளவு தண்ணீர் குடியுங்கள். இதனால் உடல் பழைய நிலைக்கு வரும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)