பெண்களை பயமுறு த்தும் ஆட்கொல்லி நோய்களில் சமீப காலமாக கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கே முதலிடம். வயதான பெண்களை அதிகம் பாதித்த இந்த நோய், இப்போது, இளம் பெண் களையும் விட்டு வைப்ப தில்லை.
பெண்களை மிரட்டும் ஆட்கொல்லி நோய் !
கர்ப்பப்பை புற்று நோயையும் கர்ப்பப்பை வாய் புற்று நோயையும் பல பெண்கள் ஒன்றென நினைத்துக் குழப்பிக் கொள்கிறார்கள்.

இரண்டும் வேறு வேறு. கர்ப்பப்பை புற்றுநோய் என்பது மாதவிடாய் நின்று போன பெண்களையே அதிகம் தாக்குவது.

இது மேலை நாடுகளில் தான் அதிகம். கர்ப்பப்பை வாய் புற்று நோய் எல்லா வயதுப் பெண் களையும் தாக்கும். இது இந்தியா வில் அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது.
ஒரு கெட்ட செய்தி… ஒரு நல்ல செய்தி! கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றிப் பேசும் போது ஒரு கெட்ட செய்தியையும் 

ஒரு நல்ல செய்தி யையும் நிச்சயம் சொல்லித் தானாக வேண்டும். பெண்ணாகப் பிறந்த யாருக்கும் இந்நோய் வரலாம் என்பது கெட்ட சேதி.

இளம் வயதிலேயே போடப்படுகிற தடுப்பூசி வந்து விட்டதால், இனி வரப் போகிற தலைமுறைப் பெண்களை நோயின் பிடியிலிருந்து காப்பாற்ற லாம் என்பது நல்ல சேதி.
 
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏன் வருகிறது? அதன் அறிகுறிகள் என்ன? சிகிச்சைகள்? இவை எல்லா வற்றையும் பற்றி விளக்க மாகப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்.

எப்படி வருகிறது? 
பெண்களை மிரட்டும் ஆட்கொல்லி நோய் !
ஹியூமன் பாப்பிலோமா (சுருக்கமாக ஹெச்.பி.வி.) என்கிற வைரஸின் தாக்குதலே நோய்க்கான காரணம்.

இந்த வைரஸால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வர, 100 சதவிகிதமும், வல்வர் எனப்படுகிற பிறப்புறுப்பின் வெளியி லுள்ள பகுதியில் புற்று நோய் வர 40 சதவிகிதமும், 

பிறப்புறுப்பில் புற்று நோய் தாக்க 60 முதல் 90 சதவிகிதமும், ஆசனவாய் புற்று நோய் வர 80 சதவிகிதமும், 

அந்தரங்க உறுப்பில் மரு தோன்ற 100 சதவிகிதமும், தலை மற்றும் கழுத்தில் புற்றுநோய் வர 12 முதல் 70 சதவிகிதமும் அபாய வாய்ப்புகள் உள்ளன.
எப்படிப் பார்த்தாலும் கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கே முதலிடம். உடலின் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால், இந்த வைரஸ் தாக்கும் போது, அது அழிக்கப் பட்டு விடும்.

எதிர்ப்பு சக்தி குறை வானவர்க ளுக்கு, வைரஸ், செல்களை தாக்கி, அதன் விளைவாக புற்றுநோய் உருவெடுக் கிறது. யாருக்கு அபாயம் அதிகம்? திருமணத் துக்கு முன்பே உடலுறவில் ஈடுபடு வோருக்கு.

ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் செக்ஸ் உறவு கொள்வோருக்கு. பல பெண்க ளுடனும் உறவு வைத்தி ருக்கும் கணவர்க ளால், மனைவி களுக்கு. 

அறிகுறிகள்? அசாதாரண மான நாற்றத்துடன் வெள்ளைப் படுதல்.
பெண்களை மிரட்டும் ஆட்கொல்லி நோய் !
அது பச்சை நிறம் கலந்தும், அரிப்புடனும் வெளிப்படுதல். அப்படி இருந்தால் அந்தத் தொற்றுக்கு உடனடியாக மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்.

அலட்சியப் படுத்தினால், அது பெரிதாகி, நாளடைவில் செல்களை பாதித்து, புற்று நோய்க்குக் காரண மாகலாம். 

உறவின் போது ரத்தப் போக்கு உண்டாவது. இரண்டு மாத விடாய்க்கு இடையில் திடீரென ரத்தப் போக்கு தென்படுதல். அசாதாரண மான வயிற்று வலி. 

என்ன சோதனை? செலவு? 
பெண்களை மிரட்டும் ஆட்கொல்லி நோய் !
திருமணமான எல்லா பெண்களும் கர்ப்பப்பை வாய் புற்று நோயின் பாதிப்பைக் கண்டறிய ‘பாப் ஸ்மியர்’ சோதனையைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

மாத விலக்கு முடிந்து 3 நாள்கள் கழித்து இந்தச் சோதனையை மேற் கொள்ளலாம். தட்டையான சிறிய கருவியின் மூலம், கர்ப்பப்பை வாயில் உள்ள செல்களைச் சுரண்டி எடுத்து, 

பரிசோதனை க்கு அனுப்பி, மைக்ரோஸ்கோப் கருவி மூலம் பார்த்து, புற்று நோய்க்கான அறிகுறிகள் உள்ளனவா 

எனக் கண்டு பிடிக்கிற சோதனை இது. வலியில்லா சோதனை. 300 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை கட்டணம்.
கர்ப்பப்பை யின் உடல் பகுதிக்கும், அதன் வாய்க்கும் இடையில் உள்ள பகுதியில் தான் புற்று நோய்க்குக் காரணமான செல்களில் மாற்றங்கள் தெரியும்.

அதை ‘லிக்யுட் பேஸ்ட் சைட்டாலஜி’ என்கிற அட்வான்ஸ்டு சோதனையின் மூலம் பாப் ஸ்மியரை விட துல்லிய மாகக் கண்டறிய லாம். இதுவும் வலியில்லாதது.

இதற்கான செலவு 1,000 முதல் 1,200 ரூபாய் வரை. இந்த இரு சோதனை களுமே மருத்துவ மனையில் தங்க வேண்டிய தேவையின்றி, 

உடனே வீட்டுக்குத் திரும்பும் அளவுக்கு எளிமை யானவை. வருடம் தவறாமல் செய்ய வேண்டியது அவசியம்.

மெனோபாஸை நெருங்கும் பெண் களுக்கு இந்த நோய்க்கான அபாயம் அதிகம் என்பதால், அவர்கள் வருடாந்திர உடல் பரிசோதனை யின் போது இதையும் தவறாமல் செய்ய வேண்டும். 
 
தடுக்க முடியுமா? 
பெண்களை மிரட்டும் ஆட்கொல்லி நோய் !
கர்ப்பப்பை வாய் புற்று நோயை வராமலே காக்கக் கூடிய தடுப்பூசி இருக்கிறது. உலக சுகாதார நிறுவன த்தின் பரிந்துரை யின்படி, 10 வயது சிறுமி களுக்கே இந்த ஊசியை போடலாம். 

அந்தச் சிறுமி பூப்பெய்தி யிருக்க வேண்டும் என்கிற அவசிய மில்லை. திருமண மாகாத பெண் களுக்கு, அதாவது, உடலுறவில் ஈடுபடாத பெண்களுக்கு இந்த ஊசியைப் போட்டால், 

கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் தாக்கத் திலிருந்து 100 சதவிகித பாதுகாப்பு கிடைக்கும்.
ஒரு வேளை அந்த வயதில் போட வில்லை என்றாலும் பிரச்னை யில்லை. திருமண மாகி, உறவில் ஈடுபட்ட பெண்களுக்கும், 45 வயது வரை இந்த ஊசியைப் போடலாம்.

ஆனால், அது 100 சதவிகித பாதுகாப்பைத் தரும் எனச் சொல்வதற்கில்லை. இந்த ஊசியை 3 டோஸ்களாக போட வேண்டும். 

முதல் டோஸ் போட்டு, 2 மாதங்கள் கழித்து 2வது டோஸ், 4 மாதங்கள் கழித்து 3வது டோஸ் போட வேண்டும்.
பெண்களை மிரட்டும் ஆட்கொல்லி நோய் !
சில பெண்களுக்குப் பிரசவமான உடனேயே, தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே கூட, முதல் டோஸ் ஊசியைப் போட்டு வீட்டுக்கு அனுப்பு கிறோம். 
 
2 மாத, 4 மாத இடை வெளிகளில் அவர்கள் அடுத்தடுத்த டோஸ்களை போட்டுக் கொள்ள லாம். இந்தத் தடுப்பூசியில் 2 விதங்கள் உள்ளன. 
 
புற்று நோய்க்குக் காரணமான 16, 18, 6 மற்றும் 11 என நான்கு வகை வைரஸ் தாக்கத்தி லிருந்தும் காப்பாற்றும் ஊசிக்கு ‘குவாட்ரி வேலன்ட் வேக்சின்’ என்று பெயர்.

இதற்கான செலவு ஒரு டோஸுக்கு 2,800 ரூபாய். நோயை உண்டாக் குவதில் பிரதான இடம் வகிக்கிற 16 மற்றும் 18 வைரஸ் தாக்கத்தைத் தடுக்கும் ‘பை வேலன்ட் வேக்சின்’, ஒரு டோஸ் போட 2,500 ரூபாய்.