ஒரு தக்காளியை எடுத்துக் கொண்டு சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளூங்கள். அதனை முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள்.
நன்றாகக் காய்ந்ததும் தண்ணீரால் கழுவுங்கள். வெளியில் சென்று வீடு திரும்பிய வுடன் குளிர்ந்த நீர் கொண்டு, முகத்தை நன்கு கழுவி வாருங்கள்.
இது முகத்தில் படிந்துள்ள அழுக்கு களை நீக்குவதுடன், படிந்துள்ள பாக்டீரியாக் களையும் நீக்கும்.
ஊட்டச் சத்துக் களும், புரதமும் நிறைந்துள்ள காய்கறி களை ஜூஸாக்கி அருந்துங்கள்.
வாரத்திற்கு 3 அல்லது 4 முறையாவது காய்கறி ஜூஸ் அருந்தி வாருங்கள். இதனால் சருமம் பொலிவுடன் பளபளப் பதைக் காண்பீர்கள்.
ஆலிவ் எண்ணெய் கொண்டு பருக்களால் ஏற்பட்ட தழும்பு உள்ள பகுதிகளின் மீது தடவி மசாஜ் செய்யுங்கள்.
இதனால் நல்ல பலன் கிடைக்கும். கற்றாழை இலையைக் கீறி உள்ளே உள்ள ஜெல்லை தனியே எடுத்துக் கொள்ளுங்கள்.
சற்று நேரத்தில் அது சாறு போலாகி விடும். இதனை முகத்தில் நாள் தோறும் தடவி வாருங்கள். இவற்றால் முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் மறைந்து விடும்.
புதிய ரோஜா இதழ்களை சிறிது எடுத்துக் கொண்டு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, குளிர வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பன்னீரை முகத்தில் தடவிக் கொள்ளுங்கள். ஒரு உருளைக் கிழங்கை எடுத்து சன்னமாகத் துருவிக் கொள்ளுங்கள்.
அதனை மிக்ஸியில் போட்டு மைப்போல அரைத்துக் கொள்ளுங்கள். பின் இதனை முகத்தில் பாதிக்கப் பட்ட பகுதியின் மீது தடவுங்கள்.
நன்றாகக் காயும் வரை வைத்திருந்து பிறகு கழுவி விடுங்கள். எலுமிச்சைச் சாறு சிறிது எடுத்து முகத்தில் தடவுங்கள்.
அதிக நேரம் வைத்தி ருக்காமல், நல்ல தண்ணீரைக் கொண்டு கழுவி விடுங்கள். பளபளப்பான முகம் உங்களுடை யதாகும்.