குழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறு !

Fakrudeen Ali Ahamed
கருவுற்ற காலத்தில் வெளித் தோற்றத்தில் மட்டுமே நமக்கு மாற்றங்கள் ஏற்படுவ தில்லை.

உள்ளுக்குள், ஹார்மோ ன்களின் செயல் பாட்டினால் நம்முடைய உடலின் அனைத்து இயக்கங் களுமே மாறுபட்டுப் போகிறது.

இப்படி சுமார் பத்து மாதகாலம் இந்த மாற்ற ங்களுக்கே பழகிப்போன நம் உடல், திடீரென்று ஒரே நாளில் பழைய நிலைமை க்குத் திரும்பி விடாது.

அந்த மாற் றங்கள் முற்றி லுமாக இல்லா விட்டாலும் ஓரளவு க்காவது பழைய நிலைக்கு வர குறைந்த பட்சம் ஆறு வார காலம் ஆகும்.

சிசேரியன் ஆனவர்க ளுக்கும் இது பொருந்தும் என்றாலும், காயங்கள் இருப்பதால் அவர்களு க்குக் கூடுதல் நேரம் பிடிக்கும்.

குழந்தை பிறந்ததும், ‘‘சூடா காஃபி சாப்பிடக் கூடாது..! பச்சைத் தண்ணில கை வைக்காதே..!

 குழந்தைக்குப் பால் கொடுக்கும் போது மல்லி கைப்பூ ஆகாது! மாம்பழமா. கூடவே கூடாது!’’

என்று நம் வீட்டுப் பெரியவர்கள் ஒரு பெரிய பட்டியலே போடு வார்கள். உண்மை யில் இதெல்லாம் தேவை யில்லாத பயங்கள் தான்!

இன்னும் சில வீடுகளில் குழந்தை பெற்றுக் கொண்ட பெண்ணு க்குத் தொடர்ந்து மூன்று நாட்க ளுக்கு வெறும் பிரெட் மட்டும் தான் சாப்பிடக் கொடுப்பா ர்கள். 

இதெல்லாம் ரொம்பத் தவறான விஷயம். பிரசவமான பெண்ணுக்கு சாதாரண  மாக, நாம் வீட்டில் சாப்பிடும் உணவு வகைகளைக் கொடுப்பது தான் சிறந்தது. 
அப்படிக் கொடுத்தால் தான் அம்மாவுக்கு இயல்பாக தாய்ப்பா லும் சுரக்கத் தொடங்கும்.

நார்மலான டெலிவரிக்கே சில சமயங் களில், வஜைனா வின் வாய்ப் பகுதியில் தையல் போட வேண்டி வரலாம். சிசேரியனு க்கோ சொல்லவே வேண்டாம்.

இப்படிக் காயப்பட்ட பெண்களு க்குத் தண்ணீரே கொடுக்கக் கூடாது.

அப்படியே கொடுத் தாலும் தொண்டையை நனைக்கு மளவுக்குக் கொடுத்தால் போதும் என்று பல வீடுகளில் சொல் வார்கள்.

தண்ணீர் அதிகம் குடித்தால் காயத்தில் சீழ் பிடித்து விடும் என்பது அவர்களின் விளக்கம்.

இந்தத் தண்ணீர்க் கட்டுப்பாடு சில நாட்கள் தான் என்றில்லை... சில மாதங்கள் வரைகூட தொடரும்! இதுவும் மிகவும் தவறான விஷயம்.

உண்மையில் இந்தச் சமயத்தில்தான் தாய் நிறைய, தண்ணீர் குடிக்க வேண்டும்.

அப்படி நிறைய தண்ணீர் குடித்தால் தான் தாய்க்கு நீர்க்கடுப்பு (யூரினரி இன்ஃபெக்ஷன்) போன்ற பிரச்னைகள் ஏற்படாது.

குழந்தை பிறந்தவு டனேயே அத்தனை நாளும் பெரிதாகி, குழந்தையைத் தாங்கி ஏந்திய தாயின் கர்ப்பப்பை மெது மெதுவாக பழைய நிலைக்கு வந்து விடும்.

அந்தச் சமயத்தில் ரத்தப் போக்கு வருவது இயற்கை. 4_5 வாரங்கள் வரைக்கும் இந்த ரத்தப் போக்கு நீடிக்கும். அதற்குமேல் போனால் தவறு.

இப்படி அதிகப் படியாக ரத்தப் போக்கு ஏற்படக் காரணம் என்ன..?

தாயின் கர்ப்பப்பை யில் நோய்த் தொற்று ஏதேனும் ஏற்பட்டிரு ந்தால் இப்படி ஆகலாம்.

சில சமயம் தாயின் கர்ப்பப் பையில் நஞ்சின் பாகங்கள் அல்லது சில திசுக்கள் வெளி வராமல் விட்டுப் போயிருந் தாலும் அதிகப்படியான ரத்தப் போக்கு ஏற்படலாம்.

இப்படி ஆகும் போது மருத்து வரை அணுகுவது தான் சரி. மருந்து மாத்திரைகள் மூலம் அவரால் தான் இதற்கு நிரந்தரத் தீர்வு கொடுக்க முடியும்

பிரசவமான பெண்களு க்கு மிகவும் அரிதாக ஙிணீதீஹ் ஙிறீuமீs என்கிற நிலை ஏற்படு வதுண்டு. (இது எதனால் ஏற்படுகிறது என்றெல்லாம் சொல்ல முடியாது)

இதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்:

சில பெண்கள் டெலிவரி ஆனதும் தங்களை யறியாமல் ஒருவித மன அழுத்தத் தால் அவதிப்படு வதுண்டு.

இந்த நிலைக்கு ஆளாகும் பெண்கள் தங்களுக் குள் தாங்களா கவே காரணமின்றி அழுவார்கள்.
குழந்தையை கவனிக்கக் கூட ஆர்வம் காட்டாமல் ஒரு மாதிரி விட்டேத்தி யாக இருப்பா ர்கள்.

இது போன்ற சில அறிகுறி களால் இவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

இந்த நிலைக்குத் தான் Baby Blues என்று பெயர். டெலிவரி ஆன கொஞ்ச நாட்களில் இது தானாகவே சரியாகத் தொடங்கும்.

சிலருக்கு இது போல எல்லாம் சாதாரண மாக இல்லாமல் தீவிரமான பிரச்னையாக இது உருவெடு க்கலாம். அப்படி அது மோசமான நிலையை அடையும் போது அதை Puerperal Psychosis என்று பெயரிட்டு அழை க்கிறோம்.

இது ஏற்கெனவே மன நோயால் பாதிக்கப் பட்ட வர்களுக்கு வரலாம். சாதாரணப் பெண்க ளுக்கும் இது போல நிலைமை தீவிரமடை வதுண்டு.

இந்த நிலை ஏற்படும் போது சம்பந்த ப்பட்ட பெண்ணைத் தனியாக விடுவது நல்ல தல்ல.

 காரணம், அவர்களு க்குத் தற்கொலை செய்து கொள்ளும் எண் ணம் இந்தச் சமயத்தில் அதிகப்ப டியாக ஏற்படும்.

அதனால் அவர் களை மருத்து வரின் கண்காணி ப்பில் வைத்திருப்பது தான் நல்லது.

சிலசமயம் ஆவேசத்தின் உச்சியில் இந்தப் பெண்கள் தங்க ளையும் அறியாமல் குழந்தை யைக் கொன்று விடும் அளவுக்கே கூடச் செல்வார்கள்!

தேர்ந்த மனநல மருத்து வரிடம் இவர்களை அழைத்துச் சென்று சிகிச்சை கொடுத்து வர, மெதுவாகக் குணம் தெரியும்.

சிகிச்சை யின் போது இவர்களுக்கு மருந்துகள் கொடுக்க வேண்டி வரும்போது, சில சமயம் குழந்தை க்குத் தாய்ப்பால் கொடுப்பதை க்கூட நிறுத்த வேண்டி வரலாம்..

குழந்தை பிறந்ததும் பெண்க ளுக்கு இது போன்ற மன ரீதியான மாறுத ல்கள் ஏற்படுவ தோடு, வெளித் தோற்ற த்திலும் பல மாற்றங்கள் ஏற்படலாம்.

நிறையப் பேருக்கு ஏற்படுவது தலைமுடி கொட்டும் பிரச்னை.. இது சாதாரண விஷயம் தான்.

கர்ப்பமாக இருந்த காலத்தில் நம்முடைய உடலில் ஹார்மோ ன்களின் செயல் பாடுகள் சற்றே அதிகப் படியாக இருக்கும்.

அந்தச் சமயத்தில் கூடுதல் ஊட்டம் பெற்று முடி நன்றாக வளரத் தொடங்கும்.

குழந்தை பிறந்ததும் ஹார் மோன்களின் செயல் பாடுகள் வழக்கம் போல ஒரு கட்டுக்குள் வந்து விடும்.

அந்தச் சமயத்தில் தான் கூந்தல் உதிரும் பிரச்னை தலை தூக்கும். இதைத் தடுக்க வழியில்லை என்றாலும்

ஊட்டச் சத்து மிக்க உணவு வகை களைத் தேர்ந் தெடுத்துச் சாப்பிட்டு வர, மீண்டும் முடி இயல்பாக வளர வாய்ப் புள்ளது.

கர்ப்பமடைந்த ஒருசில மாதங்களில் தாயின் மார்பகம் தாய்ப்பால் சுரப்பதற்கு ஏதுவாக, அளவில் பெரிதாகத் தொடங்கும்.

குழந்தை பிறக்கும்போது முழு வளர்ச்சி யடைந்து விடும் தாயின் மார்பகம், பால் சுரப்பதால் சற்றே கனமாகி லேசாகத் தொங்கினா ற்போல காட்சி தரும்.

இது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இதை இப்படியே விட்டு விட்டால் தாயின் மார்பகம் நிரந்த ரமாகவே தொங்கிப் போய்விடும் வாய்ப்புள்ளது.

கனமான மார்பகத் துக்கு சப்போர்ட் தரும் வகையில் தாய் எப்போதும் பிரா அணிவது நல்லது.

அதுவும் தனக்கு சரியான அளவிலான பிரா அணிய வேண்டும். பிரா அணிந்தால் குழந்தைக்கு ஒவ்வொரு முறை பாலூட்டும் போதும் கஷ்டமாக இருக்குமே என்று நிறையப் பேர் கேட்கி றார்கள்.

இவர்கள் சாதாரண பிரா அணியாமல் கடையில் ஸ்பெ ஷலாக விற்கக்கூடிய ‘மெட்டர்னிட்டி பிரா’ வாங்கி அணியலாம்.

இப்படி அணிந்தால் ஒவ்வொரு முறை பால் கொடுக்கும் போதும் பிராவை அவிழ்த்து மாற்ற வேண்டிய அவசிய மில்லை.

கர்ப்ப காலத்தில் நம் வயிற்றின் தசைப் பகுதிகள் கர்ப்பப்பை விரிவடை வதற்கு ஈடு கொடுத்து விரிவடையும்.

குழந்தை பிறந்ததும் கர்ப்பப்பை தானாகவே சுருங்கி விடும். ஆனால் விரிவடைந்த வயிற்றின் தசைப் பகுதிகளோ பழைய நிலைக்கு வர நாளாகும்.
இது தெரியாமல் என்னிடம் வரும் பலபெண்கள் ‘டாக்டர்! என் வயிற்றைப் பார்த்தால் இன்னொரு பாப்பா உள்ளே இருக்கும் போலிருக்கே...’ என்று கேலியாக, சில சமயம் சந்தேக மாகக் கூடக் கேட்பதுண்டு.

இப்படிப் பெருத்து ப்போன வயிற்றை இயல்பான நிலைக்குக் கொண்டு வர, குழந்தை பிறந்ததுமே பெல்ட் போட வேண்டும் என்று பல வீடுகளில் இன்னும் கூட சொல் கிறார்கள்.

பெல்ட் போட்டால் இந்நிலை உடனே சரியாகிவிடும் என்று நினைக் கிறார்கள்.

இது ரொம்பத் தவறு. ஏன் தெரியுமா?

குழந்தை பிறந்தவுடன் அதுவரை விரிந்திருந்த வயிற்றுப் பகுதியின் தசைப் பகுதிகள் தளர்ந்து போயிருக்கும்.

பெல்ட் போடு வதால் ஏற்படும் இறுக்க த்தால் இந்தத் தசைகள் வலுவிழந்து தான் போகுமே ஒழிய அளவில் மாறுதல் ஏற்படாது.

தளர்ந்து போன வயிற்றுத் தசைகள் மேலும் தளர்ந்து போகாமல் இருக்க, சரியான அளவிலான பேண்டீஸ் (Panties) அணிந்தாலே போதும்.

அதனால், வயிற்றை அதன் இயல்புப் படியே சுருங்கச் செய்வது தான் சிறந்தது. இதற் கென்று PostNatal போன்ற சில எளிய பயிற் சிகள் உள்ளன.
Tags: