தாய்மையும் வாட்ஸ் அப் அட்வைசும் !

Fakrudeen Ali Ahamed
பெண்களு க்கு இயற்கை கொடுத்த இனிய வரம் என தாய்மையை சொல்ல லாம். அரும்பு மொட்டாகி பூவாகி கனியாவது போல் பெண் தாயாகும் தருணம் அற்புத மானது.

வார்த்தை யால் விவரிக்க முடியாத அற்புத தருணம் அது. ஆனால், இங்கு தாய்மை குறித்து தான் எத்தனை எத்தனை தவறான நம்பிக் கைகள், புரளிகள்!

அதிலும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்கள் வந்த பிறகு மருத்துவ செய்திகள் எல்லாம் றெக்கை கட்டிப் பறக்கின்றன.

குழந்தை பெற ஏற்றது சிசேரியனா? சுகப்பிரசவமா? தாய்ப்பாலா அல்லது புட்டிப் பாலா... எது பெஸ்ட்? பிரசவத்து க்கு ஏற்ற இடம் வீடா? மருத்துவ மனையா?

என வித விதமான அட்வைஸ்கள், விதவிதமான கருத்துகள். தாயாகும் தருணத் தில் இருக்கும் பெண்ணு க்கு இதில் எதை நம்புவது, எதைப் புறக் கணிப்பது என்ற குழப்பம் தான் மிச்சமா கிறது.

ஹேப்பி ப்ரக்னன்ஸி!

அமெரிக்கா வின் நியூயார்க்கைச் சேர்ந்த மார்க்கரேட் நிகோலஸ், 40 வயதில் தான் கருவுற்றார். அதிலிருந்து குழந்தை ப்பேறு வரை டஜன் கணக்கிலான பிளான் களைத் தீட்டினார்.

ஃபேஸ்புக் குரூப்பில் டயட் கவுன்சிலிங், உணவு, வீட்டிலேயே குழந்தைப் பிரசவம் என நீண்ட கனவை பிரசவ வாழ்க்கை, ஒரே நாளில் கலைத்துப் போட்டது.

சிறப்பு உதவி யாளருடன் பிரசவத்தை வீட்டிலேயே முயற்சித்த நிகோலஸ், வலி தாங்க முடியாமல் அலற, வேறு வழியின்றி அவரை மருத்துவ மனையில் சேர்த்தனர்.

தன் ஆசைக் குழந்தையை அழகாகப் பெற்றெடுத்தார் நிக்கோலஸ். ஆறு மாதங்கள் வரை குழந்தைக்குப் பால் கொடுக்கும் பிளானில்

இருந்த நிகோலஸு க்கு தைராய்டு பிரச்னை வந்து தடா போட, தாய்ப்பால் வங்கியை யும், புட்டிப் பாலையும் நாட வேண்டிய சூழல்.

இது நிகோலஸ் என்ற ஒரு பெண்ணின் பிரச்னை மட்டுமல்ல. உலகத்தில் உள்ள இளம் தாய் மார்கள் பலருக்கும் பொதுவான சிக்கல்.

70 சதவிகித தாய்மார்கள் மன அழுத்தத்தைச் சந்திப்ப தாகவும், 43 சதவிகிதம் பேர் பிரசவ வலி நிவாரணிகள் பயன் படுத்து வதாகவும்,

22 சதவிகிதம் பேர் எந்த பிளானும் இன்றி, சிசேரியனு க்கு ஓகே சொல்வ தாகவும், தாய்ப்பால் கொடுக்க முடிவெடுத்த

20 சதவிகிதம் பேரில் பாதி அளவினரே அதனைச் செயல் படுத்தி யுள்ளனர் என்றும் ‘டைம்’ இதழின் ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வுக் கருத்துகளில் மருத்து வர்கள், அரசு மற்றும் இணைய த்தின் பங்கு அதிகம்.

பால் கசிவு, தூக்க மின்மை, அலுவலக வேலை ஆகிய சுய நலங்களுக் காகக் குழந்தை க்கு ஆறு மாதங்களுக் குள்ளாகவே புட்டிப்பால் தரும் பழக்கம் இளம் தாய்மார் களிடையே அதிகமாகி யுள்ளது.

புரளியும் நிஜமும்!

முன்னணி குழந்தைப் பொருட்கள் தயாரிப்பு நிறுவன த்தின் Babycenter.com இணைய தளத்தில் இளம் தாய்கள் பங்கு பெறுவதற் கான பகுதியில் தான் ஏராள மான டூப் மேட்டர்கள்.

Mama Natural யூடியூப் தளமும் இதே போலத் தான் இயங்கு கிறது. ‘‘1900ம் வருடத்தில் தாய்ப்பால் தொடர்பான பிரசாரங்கள் பற்றிய குற்ற வுணர்ச்சிகள் ஏதும் இருக்க வில்லை.

ஏனெனில், அன்று பெண்களின் வாழ்நாள் சராசரி 48 வயதுதான்...’’ என்கிறார் யேல் யுனிவர்சிட்டி யின் மகப்பேறு மருத்துவர் மேரிஜேன் மின்கின்.

2015ம் ஆண்டு அமெரிக்க வீடுகளில் பிரசவமாகும் குழந்தை களின் எண்ணி க்கை 38 ஆயிரம்.

டென்னிசியைச் சேர்ந்த குழந்தை உதவி யாளரான இனாமே கஸ்கின் எழுதிய ‘Spiritual Midwifery’ (1975) என்ற நூல் இந்த புதிய ட்ரெண்டிங் குக்கு மூல காரணம்.

அமெரிக்கா வில் 1.5 சதவிகித சிசேரியன்கள் நடை பெற்றாலும், கடந்த மூன்றாண்டு களில் இந்த எண்ணிக்கை 26 சதவிகிதம் குறைந்தி ருக்கிறது.

நன்னம்பிக்கை முயற்சி!

குடல் தொற்று, அலர்ஜி, ஆஸ்துமா ஆகிய நோய்களை நீக்கும் வலிமையைக் குழந்தை களுக்குத் தருவது தாய்ப்பாலே தவிர புட்டிப்பால் அல்ல.

‘தாய்ப்பால் நோய்களைத் தடுப்பதோடு, மூளையின் இயக்க த்துக்கும் உதவுகிறது.

மேலும், குறைப் பிரசவக் குழந்தை களின் ஆரோக்கிய த்துக்கும் அதுவே அவசிய ஆதாரம்...’’ என்கிறார் அமெரிக்க குழந்தைகள் மருத்து வரான லோரி ஃபெல்ட்மன்.
1991ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெஃப்பினால் உருவாகி செயல்படும் திட்டமே, BHFI (The Baby-friendly Hospital Initiative).

இந்த இரு அமைப்பு களின் அங்கீகாரம் பெற்ற 420 மருத்துவ மனைகளில் தான் 3.9 மில்லியன் குழந்தைகள் பிறந்துள்ளன என்பது இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு சாட்சி.

இந்த குழந்தை நட்புறவு மருத்துவ மனைகளின் நோக்கமே, ஆறு மாதங்க ளுக்குத் தாய்ப்பாலை குழந்தை களுக்கு வழங்குவதை கட்டாய மாக்குவது தான்.

‘‘தாய்மை பற்றி உலகம் பல விஷயங்களை உங்களிடம் கொட்டி னாலும், குழந்தை பிறப்பு, வளர்ப்பு விஷயங்கள் நம் திட்டங் களை மீறியவை...’’ என எதார்த்த மாகப் பேசுகிறார் ஓர் இளம்தாய். உண்மையும் அது தான்.

வாட்ஸ் அப், ஃபேஸ்புக் ஆகிய தளங் களில் கொட்டப் படும், ஷேர் செய்யப் படும் மருத்துவக் குறிப்பு களை அப்படியே நம்பாதீர்கள்.

உங்கள் குடும்ப மருத்துவரை கன்சல்ட் செய்து மருந்து களை எடுத்துக் கொள் ளுங்கள். தாய்மை அழகு. பெண்களுக்கு மட்டு மல்ல; சமுதாயத் துக்கும்.

குழந்தை இறப்புகள்! (Unicef Child Mortality Report 2017படி)

இறப்பு எண்ணி க்கை - 56 லட்சம் (2016), 1.26 கோடி (1990).

தினசரி இறப்பு விகிதம் - 15,000 (2016), 35,000 (1990).

இறப்பு வீழ்ச்சி விகிதம் - 41 (1000 குழந்தை களுக்கு, 2016).

5 வயது குழந்தைகள் இறப்பு முதலிடம் - சஹாரா ஆப்பிரிக்கா பகுதி நாடுகள் (ஆயிரத் துக்கு 79 இறப்புகள், 2016).

5 - 14 வயது குழந்தை கள் இறப்பு விகிதம் ( இந்தியா) - 6% (2016) இறப்பு 160(1000 குழந்தை களுக்கு, 2016).
Tags: