கர்ப்பமான பெண்கள் கவனிக்க வேண்டியவை !

Fakrudeen Ali Ahamed
4 minute read
மலட்டுத் தன்மை என்றால் அடிப்படை யில் கர்ப்பம் தரித்தலில் இயலாமை ஆகும். ஒரு பெண்ணால் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு குழந்தையை வயிற்றில் நிரந்தர மாக சுமக்க முடிய வில்லை என்பதையும் மலட்டுத் தன்மை என்று கூறலாம்.
ஒரு வருடம் முழுவதும் முயன்றும் கர்ப்பம் ஆக வில்லை என்றால் அதனை மலட்டுத் தன்மை என்று சொல்லலாம்.

அதே போல் 35 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் 6 மாதங்கள் முயன்றும் கர்ப்பமாக வில்லை என்றால், அதையும் கூட மலட்டுத் தன்மை என சொல் லலாம்.

ஒரு பெண் கரு தரித்தாலும் கூட, அவளால் கருவை சுமக்க முடிய வில்லை என்றாலும் அதனை மலட்டுத் தன்மை என கூறலாம்.

மலட்டுத் தன்மை என்றால் பிரச்சனை யானது பெண்களிடம் தான் இருக்க வேண்டும் என்ற அவசிய மில்லை. ஆண் பெண் என இருவ ருக்கும் இந்த பிரச்சனை ஏற்படலாம்.
இப்பி ரச்சனை மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஏற்படுகிறது. மற்றொரு பங்கு ஆண்களுக்கு ஏற்படுகிறது. கடைசி பங்கு ஆண் பெண் என இரண்டு பேருக்கும் தெரியாத காரணங் களால் ஏற்படுகிறது.

இப்பொழு தெல்லாம் மலட்டுத் தன்மை பிரச்சனை பல பெண் களையும், ஆண் களையும் தாக்குகிறது. அதற்கு காரணம் நாம் வாழும் ஆரோக்கி யமற்ற சூழலும், உணவும் என்று கூட சொல்லலாம்.

மலட்டுத் தன்மையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சில உள்ளது. அதைப் பார்ப்போம்.

* மன அழுத்தத்தை கட்டுப்படு த்துவது என்பது மிகவும் அவசியம். அது கர்ப்பம் தரிக்க சந்தர்ப் பங்களை ஏற்படுத்தி கொடுக்கும்.

குழந்தை பெற்றெடுக்க திட்டம் போட்டி ருந்தால், இது முக்கியமாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயமாகும். மன அழுத்தத்தை கட்டுப் படுத்தி நிதானமாக இருங்கள்.

குடும்பம் மற்றும் நண்பர் களுடன் நேரத்தை செலவி டுங்கள். மேலும் நல்ல புத்தகங் களை படியுங்கள்.

* மலட்டுத் தன்மை பெண்களிடம் இருந்தால், அதனை கண்டுபிடித்து குணப்படுத்துவது சுலபம். அதற்கு காரணம் பெண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்பட அனைத்து காரணிகளும் பெரும்பாலும் அறியப்பட்டவை தான்.

* எதை சாப்பிடுவ தில்லை மற்றும் எதனை அதிகம் சாப்பிடு கிறோம் என்பதை கவனிக்க தொடங் குங்கள். கர்ப்பமாக உதவும் அனைத்து உணவு களையும் உண் ணுங்கள்.
மேலும் சாப்பிடக் கூடாத உணவுகளை பற்றி மருத்து வரிடம் கேட்டு தெரிந்து கொள்ளு ங்கள். அதே போல் கருவளம் மேம்பட உணவுகளை எப்படி உட் கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
* மலட்டுத் தன்மை ஏற்படு வதற்கு தோராயமாக 15%-18% காரணமாக இருப்பது குழாயில் நோய்கள் இருப்ப தால் தான்.

ஃபாலோபியன் குழலில் ஏற்படும் அடைப்பு தான் இந்த பிரச்னைக்கு முக்கிய காரணம். அதற்கு சில சோதனைகள் செய்து உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* வயதுக்கும் மலட்டுத் தன்மை க்கும் நேரடி தொடர்பு உள்ளது. உடல் வலிமை, எதிர்ப்பு சக்தி, தடுப்பாற்றல் மற்றும் ஹார்மோன் அளவுகள் எல்லாம் வாலிப வயதில் உச்சத்தில் இருக்கும்.

அதனால் இதனை முக்கியமாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் உடலின் வலிமையானது வயது ஏற ஏற குறையத் தொடங்கும்.

அதனால் மலட்டுத் தன்மை சம்பந்தமான சிகிச்சையை சீக்கிரம் ஆரம்பி ப்பது அவசியம்.

* நல்ல தூக்கம் இல்லாமல் போவதற்கும், மலட்டுத் தன்மைக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று பல ஆய்வுகள் கூறுகிறது. அடிக்கடி பார்ட்டிக்கு சென்று தூக்கத்தை இழப்பவரா? கவனமாக இருங்கள்.

இரவு வேளை நீண்ட நேரம் கண் விழித்தி ருந்தால், ஹார்மோன் அளவுகளில் பல அடிப்படை மாற்றங்கள் ஏற்படும். அதனால் அது மலட்டுத் தன்மையை ஊக்கு விக்கும்.

போதிய தூக்கம் இல்லாமல் இருப்பவர்கள் பல உடல்நல கோளாறு களை சந்திக்கி ன்றனர் என்று ஆராய்ச்சி யாளர்கள் கூறு கின்றனர்

அவையில் முக்கியமான ஒன்று தான் மலட்டுத் தன்மை. இது மலட்டுத் தன்மைக்கு உறுதுணை யாக, உடலில் உள்ள ஹார்மோன் சமநிலையை பாதிக்கும்.

* மலட்டுத் தன்மையை நீக்க அதன் காரணத்தை முதலில் கண்டறிந்து, பின் அதற்கான சிகிச்சைகளை முடிவு செய்ய வேண்டும். அதற்காக பல வல்லுனர் களின் அறிவுரை யையும் பெற்றுக் கொள்ளலாம்.
* பெரும்பாலும் நீக்குதல் வழி முறையையே வல்லுனர்கள் பின் பற்றுவார்கள். கருமுட்டை வெளிப்படுதல் இயல்பாக உள்ளதா அல்லது நடப்பதே இல்லையா என்பதை கண்டறிவது தான் முதல் நடவடிக்கை.

அதனை சோதிக்க கருமுட்டை வெளிப்படுதல் கருவியை கொண்டு உடல் வெப்ப நிலை மற்றும் சினையியக் குநீரின் அளவை பதிவு செய்து, இந்த பிரச்சனை யை சோதித்து பார்ப்பார்கள். இது போக பல நிலை அல்ட்ரா ஒலி சோதனையும் நடத்தப்படும்.

* ஆண்களு க்கு ஏற்படும் மலட்டுத் தன்மையை கண்டறிந்து, அதனை குணப்படு த்துவது என்பது கஷ்டமான ஒன்றாகும்.
விந்தணு எண்ணிக்கை, அதன் வீரியம் மற்றும் இதர கூறுகளை கண்டறிய விந்து மாதிரி ஆய்வக கூடத்தில் சோதனை செய்யப்படும்.

டெஸ்டோஸ்டிரோன் அளவை கண்டறிய ஹார்மோன் அளவுகளும் சோதனை செய்யப் படும்.

பிறப் புறுப்புகளில் கோளாறு, உடலுறவால் பரவும் வியாதிகள் (எஸ்.டீ.டி), பால்வினை நோய் (வீ.டி),  பின்போக்கு விந்துதள்ளல் போன்ற வினையியல் பிரச்சனை களும் சோதனை செய்யப்படும்.

இந்த முயற்சிகள் அனைத்தை யும் எடுத்து, உங்கள் மனைவியை வெற்றிகர மாக கர்ப்ப மாக்கி, உங்கள் குட்டி தேவதைக்கு இந்த உலகத்தை அறிமுகப் படுத்துங்கள்.

* கணவன் மனைவி உறவுக்கு இடையே இறுக்கம் ஏற்பட்டாலும் கூட, மலட்டுத் தன்மைக்கு முக்கிய காரண மாக அது அமையும்.

அதனால் கணவன் மனைவி இரண்டு பேரும் பரஸ்பர அன்புடன் ஒற்றுமை யாக இருக்க வேண்டும்.

அவர்களுக்குள் சண்டையோ எந்த வித உரசலோ இருக்கக் கூடாது. இந்த நேரத்தில் தான் ஒருவருக்கு ஒருவர் உடல், மனம் மற்றும் உணர்ச்சி ரீதியாக ஆதரவாக இருக்க வேண்டும்.

பொதுவாக பல உடல் வலிகளை அனுபவிக்க போவது மனைவி என்பதால், ஆண்களின் பொறுப்பு தான் கூடுகிறது.

மலட்டுத் தன்மைக்காக ஐ.வி.எப். ப்ரெக்நென்சி சிகிச்சை எடுக்கும் போது பல சுற்றுக்கள் நடத்தப் படும். இதனால் பெண்கள் மீது அழுத்தம் போடப் படும்.
* மலட்டுத் தன்மைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றால் ஒரு வித எரிச்சல் ஏற்படும். சில நேரம் அது ஏன் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியாது. 

இதனால் இது மலட்டுத் தன்மையை பெரும்பாலும் தடுத்து பாதிப்பை ஏற்படுத்தும். மலட்டுத் தன்மை சிகிச்சைக் காக செல்லும் தம்பதிகளில் 10% பேர்களுக்கு மலட்டுத் தன்மைக் கான காரணம் என்னவென்று தெரிவ தில்லை. 

இருப்பினும் மற்ற வியாதிகளை போல் இதையும் குணப் படுத்த முடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Tags:
Today | 3, April 2025