ஆயில்
புல்லிங் என்பது ஒரு ஆயுர்வேத சிகிச்சை முறை. இந்த சிகிச்சை முறையின்
மூலம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் காணலாம்.
ஆயில்
புல்லிங் என்பது வேறொன்றும் இல்லை, காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில்
வாயில் எண்ணெயை ஊற்றி 10-15 நிமிடம் கொப்பளிக்க வேண்டும்,
அவ்வளவு தான்.
மேலும் ஆயில் புல்லிங் செய்த பின்னர் தான் பிரஷ் செய்ய வேண்டும். அதிலும்
ஆயில் புல்லிங் செய்வதற்கு நல்லெண்ணெயைப் பயன் படுத்தினால், இன்னும் நல்ல
பலனைப் பெறலாம்.
மேலும் ஆய்வு ஒன்றில், ஆயில் புல்லிங் செய்து வந்தால்,
வாய் ஆரோக்கியம் மேம்படும் என்று சொல்கிறது.
ஆனால் ஆயில்
புல்லிங்கினால் வாய் ஆரோக்கியம் மட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு
சக்தியானது அதிகரித்து, உடலில் ஏற்படும் ஒருசில பிரச்சனை களையும்
குணப்படுத்தி, ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த லாம்.
இது போன்று
சுவாரஸ்யமான வேறொன்று: கூச்சப்படாம வீட்டுக்குள்ள ‘சும்மா’ சுத்துங்க..
உடம்புக்கு ரொம்ப நல்லதாம்!
அதுவும் தற்போதுள்ள ஆரோக்கியமற்ற வாழ்க்கை
முறையில், இந்த ஆயில் புல்லிங் சிகிச்சையை ஒருவர் தினமும் தவறாமல் செய்து
வந்தால், உடல் நலத்தை ஆரோக்கிய மாக வைத்துக் கொள்ளலாம்.
சரி,
இப்போது அந்த ஆயில் புல்லிங்கை தினமும் செய்து வந்தால் கிடைக்கக் கூடிய
ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி பார்ப்போமா!
தினமும் ஆயில் புல்லிங் செய்து
வந்தால், பற்களில் உள்ள கறைகள் நீங்கி, பற்கள் வெள்ளையாகவும்,
ஆரோக்கிய மானதாகவும் காணப்படும்.
தினமும் காலையில் ஆயில்
புல்லிங் செய்து வந்தால், வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறி, வாய்
துர்நாற்றம் அடிக்காமல் இருக்கும்.
ஆயில் புல்லிங்கை தினமும் செய்தால்,
உடலின் ஆற்றலானது அதிகரித்து, நாள் முழுவதும் நன்கு சுறு சுறுப்புடன்
இருக்கலாம்.
தூக்க மின்மையால் அவஸ்தைப் படுபவர்கள் ஆயில்
புல்லிங் செய்தால், இரவு நேரத்தில் நிம்மதி யான தூக்கத்தைப் பெறலாம்.
ஆயில்
புல்லிங் செய்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, சருமம் பொலிவோடு
இருக்க உதவும்.
முறையற்ற மாத விடாய் சுழற்சி உள்ளவர்கள்,
தினமும் ஆயில் புல்லிங் செய்தால், ஹார்மோன் சமநிலை யின்மை குணமாகி, சரியான
மாதவிடாய் சுழற்சி ஏற்படும்.
தினமும் ஆயில் புல்லிங் செய்தால், சிறுநீரக
கோளாறு ஏற்படாமல், சிறு நீரகமானது சீராக செயல்படும்.