வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக் தயார் செய்வது எப்படி?

Fakrudeen Ali Ahamed
வெள்ளரிக்காய் சத்துக்கள் மிகுந்த காயாகும். இது பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கும். புற்று நோயிலிருந்து கூட நம்மைக் காப்பாற்றும். 
வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக் தயார் செய்வது எப்படி?
நச்சுக்களை வெளியேற்றி, போதுமான நீர்ச்சத்துக்களை தக்க வைக்கும் அவசியமான வேலையை ஒரு வெள்ளரிக்காய் அன்றாடம் செய்கிறது. 
ரேஷன் அரிசியின் நன்மையும் தனித்துவமும்... அறிந்து கொள்ள !
உடலில் தங்கும் தீய நச்சிகளை எல்லாம் இழுத்து சிறு நீரகத்திற்கு அனுப்புகிறது. இதனால் உங்கள் சருமம் மெருகேறும். அன்றாடம் சாப்பிடும் உணவுகளின் கலோரியை எரிக்க வெள்ளரிக்காய் உதவுகிறது. 
 
வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது. எனவே கலோரி அதிகரிக்காமல் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
 
தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் - 1/2

சர்க்கரை - 1 ஸ்பூன்

செய்முறை: 
 வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக் தயார் செய்வது எப்படி?
வெள்ளரிக் காயை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அதை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். இறுதி யில் முகத்தை நீரால் தேய்த்துக் கழுவ வேண்டும்.
இந்த மாஸ்க்கை தினமும் ஒரு முறை பயன் படுத்த, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பளிச்சென்று அழகாக காட்சி யளிக்கும்.
Tags: