உஷாரய்யா உஷாரு.. மாமாக்கள் தான் அச்சம் தருகிறார்கள் !

Fakrudeen Ali Ahamed
நான் பாலியல் தொல்லை களை அதிகமாக எதிர் கொள்வது பயணங்களில் தான். வார்த்தை களால் சொல்ல முடியாத அளவுக்கு அவை கொடூர மானவையாக இருக்கும். 
உஷாரய்யா உஷாரு.. மாமாக்கள் தான் அச்சம் தருகிறார்கள்
அந்த நேரங்களி லெல்லாம், அவர்களின் உறுப்பை வெட்டி அவர்களைக் கொலை செய்ய வேண்டும் எனுமளவு க்கு எனக்குள் ஆத்திரம் பொங்கும். 20 வயது பெண் நான்.

என் வயது பையன்களிடம் நான் உணரும் பாதுகாப்பு உணர்வை, 35 - 50 வயது 'அங்கிள்' களிடம் உணர்வ தில்லை. அவர்களிடம் பேசுவதோ பழகுவதோ ஆபத்தான தாகவே படுகிறது. 

குறிப்பாக நெரிசலான பேருந்துப் பயணங்களில், அவர்கள் அருகில் நிற்க நேர்வது. பேருந்துகளில் இடம் கிடைத்து அமர்ந்தாலும் கூட, பெண்களுக்கு அது பாதுகாப் பற்றதாகவே இருக்கிறது.

என் பின் சீட்டில் அமர்ந்திருந்த 'அங்கிள்', சீட்களுக்கு இடை யிலிருந்த இடை வெளிக்குள் கைகளை விட்டான். சீட்டுக்கு அடியிலிருந்த இடை வெளிக்குள் ளும் அவன் கைகள் நுழைந்து என்னைத் தீண்டின. இது ஒருநாள் அனுபவமல்ல.

எப்போதெல் லாம் என் பேருந்துப் பயணத்தின் பின் இருக்கை யில் ஓர் 'அங்கிள்' அமர நேர்கிறதோ அப்போ தெல்லாம் 80% இது நடக்கத் தான் செய்கிறது. என் தோழிக்கும் இது நடந்திருக் கிறது.

அவள் பேருந்தில் பயணித்தபோது, ஜன்னல் பக்க இடைவெளிக்குள் கையை விட்டு அவளையே சில நொடிகள் அவள் உடலை வெறுக்க வைத்திருக் கிறான். ஓர் 'அங்கிள்'.
அவள் துணிச்ச லுடன் அதைக் கண்டக்டரிடம் சொல்லி, அவன்மீது நடவடிக்கை எடுக்க வைத்திருக் கிறாள். சில வாரங் களுக்கு முன் நடந்தது இது. பேருந்தில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை.

அந்த இரவுப் பயணத்தில் நகரத்தை விட்டு பேருந்து நகர்ந்ததும் விளக்குகள் அணைக்கப் பட்டு, இரண்டு விளக்குகள் மட்டுமே வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தன.

திடீரென, என் இருக்கைக்கு எதிர் இருக்கை யில் அமர்ந்தி ருந்தவன், masturbate செய்ய ஆரம்பித்து விட்டான். எவ்வளவு வக்கிரம், வன்மம் இது? இது போன்ற பாலியல் தொல்லைகள் எல்லாம் அந்நியர் களால் மட்டும் நடப்ப தில்லை.

பெண் இனத்தின் பலவீனமான சகிப்புத் தன்மையை, மௌனத்தை உறவினர்களும் கூட பயன் படுத்திக் கொள்ளத் தவறுவ தில்லை.

நான் என் சிறுவயதில், என் மாமாவால் பாலியல் தொந்தரவு க்கு உள்ளானேன், கோடை விடுமுறைக் காக அவர் வீட்டுக்குச் சென்றிருந்த போது.
இதுவரை இதைப் பற்றி நான் யாரிடமும், என் பெற்றோரிடம்கூட சொல்லாதது ஏன் என்று தெரிய வில்லை. அதனால் தான் அவரால், இன்று வரை என் வீட்டுக்கு எந்த அச்சமும் இன்றி வந்து போக முடிகிறது, விருந்து சாப்பிட முடிகிறது.

உச்ச கட்டமாக, தன் மகனுக்கு என்னைத் திருமணம் செய்ய வேண்டி என் பெற்றோரிடம் எந்தக் குற்ற உணர்ச்சியும் இன்றி பேச முடிகிறது.

இது போன்ற தொல்லை களை இங்கு ஒவ்வொரு பெண்ணும் கடந்து வந்து கொண்டு தான் இருக்கிறாள். நான் ஆண்கள் என்றாலே இப்படித் தான் என்று சொல்ல வரவில்லை.

ஆனால், ஒவ்வொரு பெண்ணு க்கும் இப்படி ஒரு கசப்பான அனுபவத்தைக் கொடுக்கும் எண்ணிக்கை யிலான ஆண்கள் நிரம்பியதே இந்த உலகம். இனி இவற்றை யெல்லாம் அனுபவமாகப் பகிராமல், சம்பவ மாக்குவோம்.
அந்த இடத்தில், அந்த நொடியிலேயே ரியாக்ட் செய்வோம். இது வரை தன் மனதில் அழுத்திக் கொண்டிருந்த கனம் ஒன்றை முதன் முறையாக இங்கு இறக்கி வைத்திருக் கிறார்,

இந்தச் சகோதரி... இனியும் சகிக்க வேண்டாம் என்ற துணிவுடனும் இனியொரு வருக்கு இது நேராக் கூடாது என்ற அக்கறை யுடனும்.

இவர் யாரோ அல்ல, அம்மா, மனைவி, சகோதரி, மகள், தோழி என நாம் தினம் காணும் பெண்களின் பிரதி.

அவர்மீது அநாகரிக வார்த்தைகள் உமிழ்ந்து, ‘இந்த உலகம் இப்படித் தான்' என்ற பிம்பம் தர வேண்டாம் ப்ளீஸ். இனி, இதுபோல நேராத உலகம் படைப்போம்!
Tags: