உஷாரய்யா உஷாரு.. அவனது வக்ர புத்தியால் திருமணத்தை நிறுத்தினேன் !

Fakrudeen Ali Ahamed
''எனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை, வீட்டில் பார்த்த மாப்பிள்ளை யால் ஏற்பட்டது. அவன் ஓர் ஆசிரியர். ஆசிரியர் என்றால் பொதுவாக நன்னெறி மற்றும் ஒழுக்கம் மிகுந்த ஒருவராகத் தான் இந்தச் சமூகம் பார்க்கும். 
உஷாரய்யா உஷாரு.. அவனது வக்ர புத்தியால் திருமணத்தை நிறுத்தினேன்
மேற்கொண்டு, காளியின் தீவிர பக்தன் என்று வேறு தன்னைச் சொல்லிக் கொண்டார் .பூவைத்து, இருவரும் மொபைல் எண்கள் பரிமாறிக் கொண்ட பின், பேச ஆரம்பித்தோம்.

ஆனால், பேச்சில் காதலைவிட காமமே இருக்கும். அன்பு, மருந்துக்கும் இருக்காது... தன் அநாகரிக எண்ணங் களையே எப்போதும் வெளிப் படுத்துவான். எல்லா பெண்களையும் கொச்சை யாக வர்ணிப்பான்.

கள்ளத் தொடர்பு பற்றிப் பேசுவது அவனுக்கு அவ்வளவு பிடிக்கும். பெண் பார்த்து விட்டுப் போன சில நாள்களி லேயே என்னைத் தொட முயன்றான். கை, தோள் என அவன் கைகள் நீண்ட போது, முதலில் பாசம், காதல் என்று நினைத்தேன்.

ஆனால் அடுத்த சில வாரங்களில், அவன் எல்லை மீற முயன்று நான் தடுத்த போது, கீழ்த்தரமான தகாத வார்த்தை களால் திட்டினான்.

ஏதோ ஒரு படத்தில், 'பொம்பளைன்னா படுக்கையில வேசியா இருக்கணும்' என்று ஒரு டயலாக் வருமே, அதைச் சொல்லிக் காட்டினான். அவன் எல்லை மீறுவது மட்டுமே அவனிடமுள்ள குறையென்று எனக்குப் படவில்லை.

அவன் குணத்தில் பிழையென்று நான் உணர்ந்தேன். அவனிடம் வெளிப்பட்ட கட்டுக் கடங்காத ஆக்ரோஷத்தில் நான் விழித்துக் கொண்டேன். அவன் செய்கை களை தராசில் வைத்துப் பார்க்க ஆரம் பித்தேன்.

நான் சொந்த ஊருக்குச் சென்றாலோ அல்லது வேலை முடிந்து தாமதமாக வீடு திரும்பி னாலோ மிகவும் கொச்சை யாகப் பேசினான்.

(தமிழில் உள்ள தரங்கெட்ட வார்த்தைகள் பெரும்பாலும் பெண்களையும் தாய்மை யையும் சிறுமைப் படுத்தும் வார்த்தை களாகவே உள்ளது ஏன்?).

அவற்றுக் கெல்லாம் நான் அமைதி யாக இருந்து, இன்னும் அவன் என்ன வெல்லாம் செய்கிறான் என்று பார்த்தேன். நான் எதிர் பார்த்தது போலவே என் அமைதி அவனுக்குத் தைரிய த்தைக் கொடுத் திருக்க வேண்டும்.

நாளுக்கு நாள் என்னை பொம்மைபோல ஆட்டிவைக்க முயன்றான். அவனை நான் தொட அனு மதிக்காதது, அவனுடைய முழு அசுர குணத்தை யும் வெளிக் கொண்டு வந்தது.
குடும்ப வன்முறை, பாலியல் அத்துமீறல் பற்றிய பல செய்திகளைத் தொடர்ந்து படித்து வந்ததால், அவனின் செய்கைகள் தவறு என்பது எனக்குப் புரிந்தது.

அதே போல, தான் ஒரு சைக்கோ என்பதை அவனே தன் செய்கை களால் என்னை உணரவைத் தான்.

இப்படி ஒரு வக்ர, ஆக்ரோஷ புத்திக்கார னுடன் வாழ்ந்தால், என் மண வாழ்க்கை நிச்சயம் சிதையும் என்பதை உணர்ந்து, என் பெற்றோரிடம் அனைத்தை யும் கூறினேன்.

அவர்கள், உடனடியாக நடக்க விருந்த நிச்சய தார்த்தத்தை நிறுத் தினார்கள். இத்தனை சம்பவங்கள் நடந்த போதும் நான் ஒரு முறை கூட அழவில்லை.

பின்னர், தான் திருந்தி விட்டதாக என் அலுவலக த்தில் வந்து என்னை இரண்டொரு மாதங்கள் தொந்தரவு செய்தான். ஆனாலும், அவனுக்குள் ஏதோ ஒரு வெறி தகித்துக் கொண்டிருந் ததை என்னால் உணர முடிந்தது.

இறுதி வரை நான் அவனுடைய மன்னிப்பை ஏற்றுக் கொள்ளாமல் போக, மீண்டும் அதே கொச்சையான வார்த்தை களை உமிழ்ந்தான்.

'போலீஸுக்குப் போவேன்' என்று நான் சொல்ல, குடும்ப மானத்து க்குப் பயந்து ஒதுங்கினான். அவன் பெற்றோரிடம் அவன் செய்ததை யெல்லாம் சொன்ன போது அதிர்ந் தார்கள்.

இல்லை, அதிர்ந்தது போல் காட்டிக் கொண்டார்கள். அவனது சித்தப்பா மட்டும் எங்கள் மீது கொண்ட மதிப்பால் அந்த உண்மையை உளறி விட்டார்.
'ஆமா, அவன் கொஞ்சம் அப்படித்தான். கல்யாண மானா சரியாகிடும் னு நினைச்சோம்' என்றார்.

உடனே என் அம்மா, 'இப்படிப் பட்டவனுக்கு என் பொண்ணைக் கட்டிக் கொடுத்து சாகடிக் கிறதுக்கு, அவ கல்யாண ஆகாம எங்ககூடயே இருந்தாலும் மகிழ்ச்சி தான்' என்றார்.

ஆரம்பத் திலேயே ஏதோ தவறு என்று சுதாரித்து, கண்ணோட்ட மிடத் தொடங்கிய தால், என் வாழ்க்கை தப்பித்தது.

இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இரண்டொரு முறை அவனை தெருவில் எங்கோ பார்க்க நேர்ந்தது. அவனது வக்ரத்துக்கு அன்று நான் அனுமதிக் காததால், என்னால் தலை நிமிர்ந்து அவனைக் கடக்க முடிந்தது.

அவன் தான் முகத்தை மறைத்துக் கொண்டு தலைமறை வானான். என் அனுபவத்தில் சொல்கிறேன், வக்ரம் நிறைந்த இன்றைய உலகில், பெண்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்.

திருமணம் செய்து கொள்ள விருக்கும் மாப்பிள்ளை யாக இருந்தாலும் சரி, காதலனாக இருந்தாலும் சரி, திருமணம் செய்து கொண்ட கணவனாக இருந்தாலும் சரி, தன்னை பாலியல் வன்கொடுமை செய்பவனை தைரியமாக எதிர்க்க வேண்டும்.

தேவைப் பட்டால், காவல் நிலைய த்தில் புகார்செய்ய வேண்டும். பெற்றோர் களும் உறவினர் களும்,
தங்கள் பெண்களின் பாலியல் கொடுமை பிரச்னை களை மூடி மறைக்கப் பார்க்காமல், அவர்களு க்குத் துணையாக, ஆதரவாக நின்று குற்ற வாளியை எதிர்க்க வேண்டும்.

பெண்கள் மட்டுமல்ல, மொத்தச் சமூகமும் கைவிட வேண்டிய மௌனம் இது. இது வரை தன் மனதில் அழுத்திக் கொண்டிருந்த கனம் ஒன்றை முதன் முறையாக இங்கு இறக்கி வைத்திருக் கிறார்,

இந்தச் சகோதரி. இனியும் சகிக்க வேண்டாம் என்ற துணிவுடனும் இனியொரு வருக்கு இது நேராக் கூடாது என்ற அக்கறை யுடனும், இவர் யாரோ அல்ல,

அம்மா, மனைவி, சகோதரி, மகள், தோழி என நாம் தினம் காணும் பெண்களின் பிரதி. அவர்மீது அநாகரிக வார்த்தைகள் உமிழ்ந்து, ‘இந்த உலகம் இப்படித் தான்' என்ற பிம்பம் தர வேண்டாம் ப்ளீஸ். இனி, இதுபோல நேராத உலகம் படைப்போம்!
Tags: