பெண்கள் பாதுகாப்பாக வண்டி ஓட்டுவது !

Fakrudeen Ali Ahamed
நம் உருவ த்துக்கும் உயரத்து க்கும் ஏற்ற மாதிரியான வண்டி வாங்கு வதில்தா ன் பாதுகாப்பு ஆரம்பிக்கிறது.


ஒருவரின் உயரத்து க்கு சம்பந்தம் இல்லாத உயரமான வண்டியைத் தேர்ந்தெடு த்தால்,
சட்டென பிரேக் பிடிக்கு ம்போது, கால்களைக் கீழே ஊன்றி வண்டியை பேலன்ஸ் செய்து நிறுத்த முடியாது.
கைலாசாவுக்கு இல்லை 144  - பெண் சீடர்களின் கலக்கல் டிக்-டாக் !
ஆகையால், உயர த்துக்கு ஏற்ற வண்டி களையே தேர்ந்தெடுக்க வேண்டும். வண்டி ஓட்டு ம்போது கவனம் செலுத்த வேண்டிய இரண்டா வது விஷயம்...

உடை மற்றும் காலணிகள். பெண்களைப் பொறுத்த அளவில், ஜீன்ஸ், ஓவர்கோட் தான் வண்டி ஓட்ட சௌக ர்யமான உடை. சுடிதார் சௌகர்யமாக இருந்தாலும் துப்பட்டா பெரும் பிரச்சனை.

அதுவும் கழுத்தைச் சுற்றி க்கொண்டு, காற்றில் பறக்க விட்டபடி வண்டி ஓட்டுவது ரொம்பவே ஆபத்தானது.

துப்பட்டா வைப் பின் பக்கமாக நன்றாகக் கட்டி நல்ல பாதுகா ப்புடன் வண்டியை ஓட்டலாம்.
கல்லூரிப் பெண்கள் ஆர்வ த்துடன் புடவை அணிந்து ஓட்டு ம்போது, முந்தா னையை இழுத்துச் செருகிக்கொ ண்டு ஓட்ட வேண்டும்.

சக்கரங்களில் சேலையோ, துப்பட்டா வோ சிக்கிக்கொ ள்ளும் வாய்ப்பு இருப்ப தால், கவனம் அவசியம். பின்னால் ஒருவரை ஏற்றிச் செல்லும்போது,

பேசிக்கொண்டே ஓட்டக் கூடாது. காலணி களைப் பொறுத்த அளவில்,

ஷூ போடா விட்டாலும் குறைந்த பட்சம் கால்களை இழுத்துப் பிடிக்கக் கூடிய பட்டைச் செருப்பு களை அணிந்து ஓட்டுவது நல்லது.

அடுத்து, வண்டியை எடுக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள். ஸ்டாண்ட் முழுமை யாக எடுத்து விடப்பட்டு இரு க்கிறதா, பிரேக், லைட் சரியாக இருக்கிறதா என்பதைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.
டயாபர் அணிவதால் ஏற்படும் தீமைகள் என்ன?
ஓட்டும்போ து கவனம் முழு மையாக சாலை யில் இருக்க வேண்டும். வீட்டிலோ, அலுவல கத்திலோ கவனம் இருந்தால் ஆபத்து.

செல்பேசியைப் பேசிக்கொ ண்டே வண்டி ஓட்டுவது இன்னும் ஆபத்து. பெரும்பா லான விபத்துகள் சாலை வளைவு களிலேயே ஏற்படு கின்றன.

எனவே, வளைவுகளில் செல்லும்போது நிதானம் தேவை. வேகம் 40 கி.மீ-ஐ தாண்டக் கூடாது என்பதைத்

தாரக மந்திர மாகவே வைத்துக்கொ ள்ளலாம். அவசரக் கால கட்டங்களில் எல்லோரும் செய்யும் பெரிய தவறு...
ஆக்ஸி லேட்டரை அதிகப்ப டுத்திக் கொண்டே பிரேக்கை அழுத்து வது. வண்டி யைக் கீழே சாய்த்து இழுத்து விபத்தை உருவா க்குவது இது தான். இதைத் தவிர்க்க வேண்டும்.
வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண்ணுக்கு காம்பீர் இறுதிச்சடங்கு !
இரவு நேரங்களில் எதிர்த் திசை வாகன ங்களில் இருந்து வெளியாகும் முகப்பு வெளிச்சங்கள் கண்களைச் கூசச் செய்யும்.

அப்போது எதிரில் வரும் வாகனத்தின் ஹெட்லைட்டு களைப் பார்க்கா மல் சாலையில் விழும் நமது வாகன த்தின் வெளிச்ச த்தைப் பார்த்து மிகவும் நிதானமாக ஓட்ட வேண்டும்.

அவசரத் தேவைக்கு ஒரு முதல் உதவிப் பெட்டியை வண்டியில் வைத்தி ருப்பது நல்லது. தங்களுடைய முகவரி, இரத்த வகை இவற்றைப் பற்றிய விவரங்க ளைக் கழுத்தில் தொங்கும்

அடையாள அட்டை யிலோ அல்லது வண்டி யிலோ வைத்தி ருப்பது அவசர நேரங்களில் உதவும். சுருக்கமாக ஒரு வரியில் சொன்னால் நிதானமே விவேகம்!
Tags: