மென்ஸ்ட்ரூவல் கப் பயன்படுத்துவது, சுத்தம் செய்வது எப்படி?

Fakrudeen Ali Ahamed
0
மாதவிடாய் கப்கள் பயன்படுத்துவது எளிது. அதிக உதிரப் போக்கையும் எளிதாக கையாளலாம். அதை சுத்தமாக வைத்துக் கொள்வது மிக அவசியம். அதைச் செய்வது எப்படி?
மென்ஸ்ட்ரூவல் கப் பயன்படுத்துவது, சுத்தம் செய்வது எப்படி?
இன்றைய காலத்தில் அனைத்து பெண்களுமே வீடு, வேலை என மேனேஜ் செய்ய வேண்டிய நிலையே உள்ளது. இதனால், மாதவிடாய் நாட்களில் ஆரோக்கியம் பேணுவது குறித்த டிப்ஸ்கள் இங்கு கொடுக்கப் பட்டுள்ளன.
 
மென்ஸ்ட்ரூவல் கப்கள் சுற்று சூழலுக்கு உகந்ததாகவும், எளிதாக பயன்படுத்தக் கூடியதாகவும், நீண்ட நாட்கள் உழைக்கக் கூடியதாகவும் உள்ளது. அவற்றை எளிதாக அப்புறப் படுத்தவும் முடியும். 
 
இவை டாம்பான்ஸ் மற்றும் பேட்களைவிட சிறந்ததாகவும் பார்க்கப் படுகிறது. இது போன்ற நன்மைகள் இருந்தாலும், அதை சுத்தம் செய்வது என்பது உங்களுக்கு பீதியை ஏற்படுத்தும் ஒன்றாகும். 
அவற்றை எளிதா சுத்தம் செய்து விடலாம். நீங்கள் அதை மீண்டும் உபயோகப்படுத்த விரும்பினால், அதன் ஷேப்பிலே அதை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.மென்ஸ்ட்ருவல் கப்கள் இன்று எளிதாக கிடைக்கிறது. 
 
அதை நீங்கள் 12 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும். இதை ஒரு முறை நீங்கள் வாங்கி விட்டால், 10 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். எனவே அவற்றை சுத்தமாக பராமரிப்பது நல்லது. 
 
இந்த கப்கள் மிருதுவான, சிலிக்கானால் வளைந்து கொடுக்கும்படி செய்யப்பட்ட ஒரு கப் போன்ற அமைப்புடையது மற்றும் பெண்ணுறுப்புக்கு உள்ளே பொருத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட பொருள் ஆகும். 
 
இதை மீண்டும், மீண்டும் உபயோகிக்க வேண்டும் என்பதால், அதை நீங்கள் சுத்தமாக வைத்திருப்பது, நோய் தொற்றுகளை ஏற்படுத்தாது.
மென்ஸ்ட்ரூவல் கப் பயன்படுத்துவது, சுத்தம் செய்வது எப்படி?
ஒவ்வொரு முறை கப் நிரம்பிய பின்னரும், அதை காலி செய்து விட்டு, நன்றாக நீரில் அலசி விட்டு மீண்டும் பொருத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கு பீரியட்ஸ் முடிந்தவுடன் அவற்றை நன்றாக சுத்தம் செய்வது அவசியம். 

புதிய கப்களை பயன்படுத்தும் முன் 5 நிமிடங்கள் நன்றாக தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். கப் மிதக்க வேண்டும். பாத்திரத்தின் அடிக்கு சென்றால் எரிந்து விடும் எனவே கவனமாக செய்ய வேண்டும்.
 
அதற்காக உள்ள மாத்திரைகளைப் பயன்படுத்தியும் சாதாரண நீரில் கூட அதை நீங்கள் சுந்நம் செய்யலாம். ஆனால், ஒரு பாத்திரத்தில் போட்டு சுட வைத்துக் கொள்வது சிறந்தது.
பழைய சோறா? அப்படீன்னா என்ன?
அந்தப் பாத்திரத்தை இதற்கு மட்டுமே நீங்கள் உபயோகிக்க வேண்டும். மிதவிடாய் காலங்களில், கப்களை அகற்றி, அதில் சேகரிக்கப் பட்டிருக்கும் ரத்தத்தை அப்புறப் படுத்தி விட்டு, கழுவி விட்டு மீண்டும் பொருத்திக் கொள்ள வேண்டும்.
 
ஒவ்வொரு முறை கப்களை பொருத்தும் போதும், அகற்றும் போதும் கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமான தண்ணீரால் கப்களை கழுவ வேண்டும். 
 
மிருதுவான சோப்புகள் அல்லது அதற்கான பிரத்யேகமாக கப்களுடனே வரும் திரவங்களை பயன்படுத்தியும் அலசிக் கொள்ளலாம். ஆனால் துணி துவைக்கப் பயன்படுத்தும் சோப்களை பயன்படுத்தக் கூடாது. 
 
அது அந்த கப்பை சேதமடையச் செய்யும். அதில் உள்ள துவரங்களை நன்றாக கழுவ வேண்டும். இல்லா விட்டால் துர்நாற்றம் வீசும். 
 
எனவே நன்றாக கழுவிய பின்னர் தான் அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும். உங்கள் பீரியட்ஸ் முடிந்தவுடன் அதை நீங்கள் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
 மென்ஸ்ட்ரூவல் கப் பயன்படுத்துவது, சுத்தம் செய்வது எப்படி?
அதை நன்றாக காய வைத்து அடுத்த மாதவிடாய் நாட்களுக்கு பயன்படுத்த வேண்டும். 10 ஆண்டுகள் அவற்றை பயன்படுத்தலாம். 
 
ஆனால் அவற்றை நீங்கள் முறையாக பயன்படுத்தினால் மட்டுமே அத்தனை காலம் உபயோகிக்க முடியும். ஆனால் 2 முதல் 4 ஆண்டுகளில் மாற்றி விடுவது நல்லது. ஏதேனும் சேதம் ஏற்பட்டாலும் உடனே மாற்ற வேண்டும்.
பழைய சாதம் தான் ஊட்டச்சத்து மிக்க காலை உணவு !
அல்லது ஏதேனும் கறைகள் இருந்தாலும் மாற்றுவது நல்லது. ஏனெனில் தொற்றுகளை தவிர்க்க இவை உதவும்.அதன் நிறம் மாறினாலோ அல்லது துர்நாற்றம் அடித்தாலோ உடனே மாற்றி விடுவது சிறந்தது. 
 
கப்களில் துளைகள் ஏற்பட்டு, அவை ஒழுகத்து வங்கினாலும் அவற்றை உடனடியாக மாற்றிவிட வேண்டும். 
 
மென்ஸ்ட்ருவல் கப்களை பயன்படுத்துவதும், சுத்தம் செய்வதும் எளிது, தேவைப்படும் போது மாற்றிக் கொள்ளுங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)