பெண்கள் ஆபரணம் அணிவதன் சிறப்பு !

Fakrudeen Ali Ahamed
3 minute read
0
கோயிலில் உள்ள அம்மனுக்கு என்ன தான் பட்டுப்புடவை கட்டி மலர் மாலை யெல்லாம் சூட்டினாலும், தாலி, தோடு, மூக்குத்தி, வளையல், ஒட்டியானம், மோதிரம்
பெண்கள் ஆபரணம் அணிவது
ஆகிய அணிகலன்கள் அணிவித்தால் தான் அலங்காரம் முழுமை யடையும். பெண்களை அம்மனின் அம்சமாக கூறுகின்றனர்.  
 
எனவே தான் பெண்கள் அணியும் கீழ்கண்ட அணிகலன் களுக்கும் சில காரணங்கள் கூறப்படுகிறது. 

1. தாலி - தாயாகி, தாலாட்டுப்பாட கணவன் தரும் பரிசு சின்னம். 

2. தோடு - எதையும் காதோடு போட்டுக் கொள். வெளியில் சொல்லாதே ! 

3. மூக்குத்தி - மூக்கு தான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்துகிறது. 

4. வளையல் - கணவன் உன்னை வளைய, வளைய வர வேண்டும், என்பதற்காக, 

5. ஒட்டியாணம் - கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக!

6. மோதிரம் எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க. இவை தவிர.. நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை, 
 
அதிகமாக ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம் இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் இந்த வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் ஏற்றது. 
 
அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக் கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. இவ்வாறு அணிவதன் சிறப்பு.. 
கொலுசு:
கொலுசு அணிவது
பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். 
 
இதற்கு காரணம் தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை. அத்துடன் வெள்ளி நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கிய மாக்கும். 
 
வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டு கொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்சிகளைக் குறைத்து கட்டுப் படுத்துகிறது. 

மெட்டி: 
மெட்டி அணிவது
மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டும் அணியும் ஆபரணம். பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது. 
 
வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது. மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும். 
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 7, April 2025