கருத்தடை மாத்திரை சாப்பிடுவதால் மாதவிலக்கு சமயத்தில் வலி வருவதில்லை என்பது உண்மையா?
உண்மை தான். ரத்த சோகையிலிருந்தும் அது மீட்கிறது. இம்மாத்திரைகள் அதிக உதிரப் போக்கை குறைக்கும் மருந்தாகவும் உபயோகமாகிறது.
மாதவிலக்கு சரியாக வந்த போதிலும், இடைப்பட்ட ஒரு நாளில் வலியுடன் கூடிய சிறு துளி ரத்தப்போக்கு ஏற்பட்டு மறைந்து விடுகிறது.
பின்னர் எப்போதும் போல் வரவேண்டிய நாளில் வந்து விடுகிறது. இது ஏன்? உடம்புக்கு கெடுதலா?
பணம் கட்டினால் ஆபரேஷன்... குழந்தையை வெளியே எடுக்கட்டுமா? வேண்டாமா?
சில பெண்களுக்கு மாதவிலக்கு தோன்றிய 14 அல்லது 16-வது நாளில் இவ்வாறு ஏற்படும்.
இது சினைப்பையில் இருந்து சினைமுட்டை விடும் நாளில் ஏற்படுகிறது. இதனால் எவ்வித பிரச்னையும் இல்லை. உடம்புக்கு கெடுதல் கிடையாது.
30 வயதுக்கு மேல் ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால், ஆபரேஷன் செய்து கர்ப்பப்பையை அகற்றுவது தான் சரியான வழியா?
சாதாரண கர்ப்பப்பை கட்டிகளாக இருந்து தொந்தரவு இருந்தால், ஆபரேஷன் செய்வது நல்லது. கட்டிகள் இல்லை யென்றால் D&C செய்து பார்க்க வேண்டும். இந்த வயதில் தான் புற்றுநோய் தோன்றும். பரிசோதனை அவசியம்.
எல்லாப் பெண்களுக்கும் கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய் (Cervical Cancer), கர்பப்பை கழுத்து உள்வரி ஜவ்வு புற்றுநோய் (Endometrial Carcinoma) ஆகியவை வரக்கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு.
எனவே இந்த வயதில் அதிக உதிரப்போக்கு இருந்தால், அனைத்துப் பரிசோதனைகளையும் கண்டிப்பாக செய்ய வேண்டும். வருமுன் காப்பது நல்லது.
வெள்ளைப்படுதலும் அதனுடன் ரத்தப்போக்கும் ஏற்பட காரணம் என்ன? இது நோயின் வெளிப்பாடா? என்ன சிகிச்சை பெற வேண்டும்?
பருவ மாற்ற காலத்தில் மாத விலக்குக்கு முன்னும் பின்னும் சினை முட்டை விடுபடும் போதும், கர்ப்ப காலத்திலும் ஹார்மோன்களின் சுரப்பான வெள்ளைப் படுதல் இருக்கலாம். இது தவறில்லை.
கொரோனாவை எதிர்க்கும் ஆண்டிபாடி.. சூப்பர் ஹியூமன் இம்யூனிட்டி !
ஆனால், வெள்ளைப்படுதல் அதிகரித்தோ, நாற்றமுடனோ, உதிரம் கலந்தோ இருந்தால் ஆபத்தான விஷயம். உடனடியாக பரிசோதித்து சிகிச்சை பெறவேண்டும்.
கர்ப்பப்பை கட்டியினால் உதிரப்போக்கு அதிகமாகுமா? கர்ப்பப்பையை எடுக்க நேரிடுமா? அதற்கு மாற்றாக வேறு சிகிச்சை உள்ளதா?
பொதுவாக 50 முதல் 60 சதவிகிதத்தினருக்கு மிகச் சிறிய அளவிலிருந்து (0.5-1 cm) பெரிய அளவு வரை பல்வேறு கட்டிகளாக தோன்றுவது நார்க்கழலை கட்டி (Fibroid) எனப்படும்.
இதனால் அதீத உதிரப்போக்கு (Menorrhagia), சூதக வலி (Dysmenorrhoea) ஆகிய தொல்லைகள் இருந்தால், முதலில் D&C செய்து உள்வரி ஜவ்வின் தன்மையை கண்டறிய வேண்டும்.
பின்பு மாத்திரைகளால் உதிரப்போக்கையும் வலியையும் குறைக்கலாம். அதையும் மீறி போகும் உதிரப்போக்குக்கு, அவரவர் வயதுக்கேற்றவாறு சிகிச்சை அளிக்க வேண்டி வரும்.
நட்சத்திரங்கள் எவ்வளவு தூரத்தில் உள்ளது?
1. Myomectomy – கட்டி அகற்றும் அறுவை (இது குழந்தை வேண்டுபவருக்கு பொருந்தும்).
2. Hysterctomy – கர்ப்பப்பை அகற்றுபவை (40 வயது தாண்டியவருக்கு).
சமீபகால சிகிச்சை முறைகளான
1. Hysteroscopic Myomectomy
2. Uterine Artery Embolisation ஆகியவை சிலருக்கு பொருந்தும்.
மாதவிலக்கு முடிவடையும் காலத்தில் (மெனோ பாஸ்) உதிரப்போக்கு அதிகமாக இருப்பது சகஜமா?
இல்லை. அது தவறான கருத்து. மாதவிலக்கு முற்றுப் பருவத்தில் உதிரப்போக்கு அதிகம் இருந்தாலோ, அதிக நாட்கள் நீடித்தாலோ,
குறுகிய காலத்துக்கு ஒரு முறை வந்தாலோ, கர்ப்பப்பை கட்டிகள், கர்ப்பப்பையில் புற்றுநோய் ஆகியவையாக இருக்கக் கூடும்.
காணாமல் போகும் கடல்நீர்... குழப்பத்தில் ஆராய்ச்சியாளர்கள் !
45 வயதுக்கு மேல் 52 வயதுக்குள்ளாக பெரும்பாலும் மாதவிலக்கு நின்று விடுகிறது. சிலருக்கு திடீரென நின்று விடும்.
பலருக்கு அளவில் குறைந்தோ சில மாதங்கள் தள்ளி வந்தோ நிற்கிறது. இதற்கெல்லாம் மாறாக எந்தவித உதிரப்போக்கு பிரச்னையாக இருந்தாலும் சோதனை செய்வது அவசியம்.