பெண்களே தயங்காமல் பேசுங்கள்... மாதவிடாய் பிரச்சினைகள் !

Fakrudeen Ali Ahamed
0
தீட்டு, வீட்டுக்கு தூரம், வீட்டு விலக்கு, மாதவிலக்கு, மாதவிடாய்… பெண் உடலின் இயற்கையான நிகழ்வான உதிரப் போக்குக்குத் தான் எத்தனை பெயர்கள்.
பெண்களே தயங்காமல் பேசுங்கள்... மாதவிடாய் பிரச்சினைகள் !
அதை வைத்துத் தான் எத்தனை (மூட )நம்பிக்கைகள், பயங்கள்.. மாதவிலக்கு சமயத்தில் பெண்கள் வெளியில் சென்றால் விபத்து நடக்கும், குளித்தால் சளி பிடிக்கும், காயம்படும், 
 
கனமான பொருட்களை தூக்கக்கூடாது, பூக்களைத் தொட்டால் வாடிவிடும், வயல்வெளியில் சென்றால் பயிர் கருகிவிடும், தனி தட்டில்தான் சாப்பிட வேண்டும்.
 
தலைக்கு குளிக்காமல் வீட்டுக்குள் நடமாடக் கூடாது, சாப்பிட்ட மிச்சத்தை நாய்க்கு போட்டால் வயிறு வலிக்கும்… இப்படி பல கூடாதுகள். 
 
கிராமப்புறங்களில் சடங்கான பெண்ணை தனிக் குடிசையில் ஒதுக்கி வைப்பதோடு, குளிக்க வெளியே வருவதானால் கூட ஒரு இரும்புக் கம்பியை பாதுகாப்புக்கு கொடுத்தனுப்புவார்கள். 
 
பேய் அடித்து விடுமாம்! இந்த மாதிரியான நடவடிக்கைகள் மாதவிலக்கு பற்றி கசப்பான உணர்வை பெண்கள் மனதில் பதிய விடுகிறது. 
இதோடு வலி, எரிச்சல், சோர்வு, கசகசப்பு எல்லாம் சேர, ஏன் தான் பெண்ணாக பிறந்தோமோ என்ற சலிப்பு தட்டுகிறது. 
 
கடைக்குப் போய் சானிட்டரி நாப்கின் கேட்டு வாங்கக் கூட அத்தனை தயங்கும் நாம் எப்படி குழந்தைகளுக்கு மாதவிலக்கு பற்றி புரியவைக்கப் போகிறோம்? 
 
நம் உடல் பற்றி, அதன் மாற்றங்கள், இயல்பு, பிரச்னைகள் பற்றி நாம்தான் தயங்காமல் பேசியாக வேண்டும். 
 
பூப்பூக்கும் நேரம் பூப்பெய்துதல் என்கிற பருவமடையும் கட்டம் எப்படிப்பட்டது? அது எவ்வாறு நிகழ்கிறது? 
பெண்களே தயங்காமல் பேசுங்கள்... மாதவிடாய் பிரச்சினைகள் !
பூப்பெய்துதல் என்பது குழந்தைப் பருவத்திலிருந்து கன்னிப் பருவத்துக்கு மாறுவதற்கான இடைக்கால நிகழ்ச்சி. முதல் மாற்றமாக மார்பகங்கள் வளர்ச்சியடைய ஆரம்பிக்கின்றன. 
 
10-11 வயதில் (இப்போது 9 முதல் 13) இது துவங்கும். ஒரு வருடத்துக்குள் பிறப்புறுப்பு மீது முடிகள் முளைக்க ஆரம்பிக்கும். 
 
பின்பு உடல் வளர்ச்சியில் வேகம் தென்படும். அந்த வயது பெண் அதே வயது ஆணைக் காட்டிலும் வளர்ச்சி அடைந்தவளாக தெரிவாள். 
 
இடுப்பு எலும்பு வளர்ச்சி அதிக மாகும். பூசினாற்போல் சதைப் பற்று ஏற்படும். அக்குளில் முடி வளர்வது தான் இந்த மாற்றங்களில் கடைசியாக நிகழ்வது. 
 
அதன்பின் இந்த மாற்றங்களின் வெளிப்பாடாக மாத விலக்கு நேர்கிறது. உள்ளே என்ன நடக்கிறது இவையெல்லாம் வெளியில் தெரியும் மாற்றங்கள்.
மிக்சி வாங்குவதற்கான வழிகாட்டி !
உடலின் உள்ளே என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன? பலரும் நினைப்பதது போல் மாற்றங்கள் கர்ப்பப்பை மற்றும் சினைப்பையில் மட்டும் ஏற்படுவதில்லை. 
 
மூளையில் இருந்து GNRH என்ற ஹார்மோன் சுரந்து அது பிட்யூட்டரி என்ற சுரப்பியை தூண்டி பின்பு அந்த சுரப்பியிலிருந்து வரும் சில ஹார்மோன்கள் கர்ப்பப்பை மீதும், சினைப்பையிலும் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. 
 
அதாவது மூளையில் ஒரு பகுதியிலிருந்து வரும் அந்த ஜி.என்.ஆர்.ஹெச் ஹார்மோன் தான் அத்தனை நிகழ்வுகளுக்கும் மூலகாரணம். 
பெண்களே தயங்காமல் பேசுங்கள்... மாதவிடாய் பிரச்சினைகள் !
இது குழந்தையாக இருக்கும்போதே சுரக்க ஆரம்பிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிறது. 
 
முதலில் அவ்வப்போது குறிப்பாக இரவு மட்டுமே சுரக்கும். பின்பு இடைவெளி குறைந்து அளவு அதிகமாகி 90 நிமிடத்துக்கு ஒரு முறை ரத்தத்தில் கலக்கும் அளவுக்கு சுரக்க ஆரம்பிக்கும். 
 
அப்போது சினைப்பை வேலை செய்ய ஆரம்பிக்கிறது. அதனால் முதல் மாத விலக்கு நிகழ்கிறது. ஆரம்பத்தில் ஹார்மோன்கள் கலப்பதில் தாமதங்கள், இடையூறுகள் ஏற்படலாம். 
 
அதனால் தான் பூப்படைந்த பின்பும் சில மாதவிலக்கு சரியாக வராது. இந்த கால அளவு ஒரு வருடம் முதல் ஐந்து வருடமாகக்கூட இருக்கலாம். 
 
போகப் போக சரியாகி விடும். இன்ன வயதுக்குள் பூப்படைய வேண்டும் என்று இருக்கிறதா? 18 வயதில் கூட ஏற்படா விட்டால் டாக்டரை பார்க்க வேண்டும். 
 
நான்கு வயதில் பூப்படைந்து ஐந்து வயதில் கருத்தரித்த குழந்தைகள் கூட உண்டு. 
 
அதெல்லாம் அபூர்வம். 7 முதல் 9 வயதுக்குள் பூப்படைதலை விரைவு படுத்தப்பட்ட பூப்பெய்தல் என்கிறோம். அதிக உடல் வளர்ச்சியால் அல்லது பரம்பரை காரணமாக இது நிகழலாம். 
 
மிகச்சிறிய வயதில் பூப்படைந்தாலும் அதிகப்படியான ஹார்மோன் சுரந்தால் மட்டுமே மாதா மாதம் விலக்காக முடியும். சிறு வயதில் பூப்படைந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
 
 சரியான சைக்கிள் எது? பாதுகாப்பானது எது? 
பெண்களே தயங்காமல் பேசுங்கள்... மாதவிடாய் பிரச்சினைகள் !
எத்தனை நாட்களுக்கு ஒரு முறை விலக்காவதை ஒழுங்கான மாதவிலக்கு என்று சொல்லலாம்? அதை சுழற்சி என்போம். 
 
சைக்கிள். சாதாரணமாக 28 நாட்கள் ஒரு சுழற்சி. சிலருக்கு இரண்டு, மூன்று நாட்கள் குறைவாக அல்லது கூடுதலாக வரலாம். அது தப்பில்லை.
இந்திய கேப்டனுக்கு அமெரிக்கா பல மில்லியன் தர முன் வந்ததா?
இந்த சுழற்சிக்குள் என்னென்ன நடக்கிறது? 
 
அந்த 28 நாட்களில் கருத்தரிக்கக் கூடிய, உறவுக்கு பாதுகாப்பான நாட்கள் எவை என்று எப்படி வகைப்படுத்துவது? அந்த 28 நாட்களை பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம். 
 
1 முதல் 5 மாதவிலக்கு நாட்கள். 5 முதல் 10 ஆரம்ப நாட்கள். அப்போது ஈஸ்ட்ரோஜன் அதிகம் சுரக்கும். கருமுட்டை வளர ஆரம்பிக்கும். 
 
கர்ப்பப்பையில் உள்ள நடு ஜவ்வும் வளர ஆரம்பிக்கும். 10 முதல் 14 நாட்கள் அதே வளர்ச்சி வேகமாகி 14-ம் நாள் குமிழ் உடைந்து கரு வெளிப்படும். 
 
எனவே அதுதான் கருத்தரிக்க உகந்த காலகட்டம். 14 முதல் 28-வது நாள் வரை பின்பகுதி நாட்கள். ப்ரொஜெஸ்ட்ரோன் என்ற ஹார்மோன் அதிகமாக சுரக்கும். கர்ப்பப்பையின் உள்ளே ஜவ்வு அதிக தடிமனாக தென்படும். 
 
(ஒரு வேளை கருத்தரித்தால் அதைத் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தில் மெத்தை போல!) கரு உருவாகவில்லை என்றால் நடு ஜவ்வுக்கு ரத்த ஓட்டம் குறையும். ஹார்மோன் அளவும் குறைந்து விடும். 
 
தண்ணீரும் உரமும் போட்ட போது வளரும் பயிர் அந்த இரண்டும் இல்லை யென்றால் கருகுவது போல கர்ப்பப்பை யில் வளர்ந்திருக்கும் நடுசதை (Endometrium) சுருங்கி, 
 
அந்த சதையும் ரத்தமும் சில மாற்றங்கள் ஏற்பட்டு உதிரப் போக்காக வெளிவரும். மறுபடியும் ஐந்து நாள் கழித்து இதே சுழற்சி தொடங்கும்,. 
 
லிமிட் என்று உண்டா? மாதவிலக்கு எத்தனை நாட்கள் நீடிக்கலாம்? 
பெண்களே தயங்காமல் பேசுங்கள்... மாதவிடாய் பிரச்சினைகள் !
3 முதல் 6 நாட்கள் இருக்கலாம். 3க்கு குறைவாக அல்லது 6க்கு மேல் இருக்குமானால் அது அசாதாரணம். 
 
எவ்வளவு ரத்தம் வெளியேறுவதை நார்மல் எனலாம்? 
 
சுமார் 50 மில்லி லிட்டர். குறைந்தது 20 அதிகபட்சம் 80 என இந்த அளவும் வேறுபடலாம். அப்போது தினமும் அரை மில்லி கிராம் முதல் ஒரு மி.கி. வரை இரும்புச் சத்தும் வெளியேறுகிறது. 
 
உதிரப்போக்கு 80 மில்லிக்கு மேல் இருந்தால் இரும்புச்சத்து மாத்திரை சாப்பிடுவது நல்லது. 
 
ரத்தம் கட்டியாக வெளியேறுவது ஏன்? 
 
அது அதிகப்படியான உதிரம் அல்லது திரவநிலை அடைவதற்கு முன்பே வெளிப்பட்ட உதிரம் என்றும் கூறலாம். 
 
இந்த காலகட்டத்தில் உள்ளே வேறென்ன நடக்கிறது?.
 
ஒவ்வொரு சுழற்சியிலும் சினைப்பையில் சுமார் 30 குமிழ்கள் உருவாக ஆரம்பித்து, பின்பு ஹார்மோன்கள் உந்துதலால் ஒரு குமிழ் பெரிதாகி, 
 
அதனுள் கருமுட்டை உற்பத்தியாகி 14-ம் நாள் ஹார்மோன்கள் உதவியால் அந்த குமிழ் வெடித்து கரு வெளிவந்து விந்துவை எதிர் கொள்ள தயாராகிறது.
கடலூரில் வீட்டிற்குள் புகுந்த வெள்ளை நாகம் !
மாதவிலக்கு வருமுன் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன? 
பெண்களே தயங்காமல் பேசுங்கள்... மாதவிடாய் பிரச்சினைகள் !
மார்பகம் பாரமாக தோன்றும், பெரிதாவது போல் தெரியும், வலி ஏற்படும். இவை மாதவிலக்கு ஏற்பட 2 அல்லது 4 நாள் முன் ஏற்படும். இது சகஜம். 
 
சிலருக்கு இந்த அறிகுறிகள் சற்று அதிக மாக இருக்கலாம். வயிறு 14-ம் நாள் கருமுட்டை வெளிவரும் நாளில் வலி இருக்கலாம். 
 
வருமுன் வயிறு உப்பியிருப்பது போல கனமாக உணரலாம். எடை உடல், நீர் கோர்த்தது போல, எடை அதிகமானது போல தோன்றும். 
 
கர்ப்பப்பை வாயில் 14-ம் நாளிலிருந்து வளவள என்ற திரவம் சுரப்பது அதிகமாக இருக்கும். இந்த மாற்றங்களை Pre Menstural Syndrome என்பார்கள். 
 
தலைவலி, கால் வலி மற்றும் வீக்கம், அடிவயிற்றில் வலி, அதிக பசி, அலர்ஜி/சளி ஏற்படுவது, பருக்கள், குடல் உபாதை, முதுகு வலி, படபடப்பு, அரிப்பு, அதிக வியர்வை போன்ற மாற்றங்களும் நேரலாம். 
 
உடல் தவிர மன நிலையிலும் மாற்றங்கள் ஏற்படும் தானே? நிச்சயமாக! கவலை, பதற்றம், ஆர்வமின்மை, ஈடுபாடின்மை, அசதி, கோபம், டென்ஷன், எரிச்சல், 
 
தூக்கமின்மை, குடும்ப வாழ்க்கை பாதுகாப்பற்றதாக உணர்தல், தற்கொலை எண்ணம், தனிமை விரும்புதல், தாழ்வு மனப்பான்மை போன்ற உணர்வுகள். இந்த பிரச்னைகளுக்கு காரணம் இது தான் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. 
இவை ஒரு சுழற்சியின் கடைசி நாட்கள் அல்லது மாதவிலக்கு வருவதற்கு முந்தைய நாட்களில் ஏற்படுவதால் ஹார்மோன் பாதிப்பாக இருக்கலாம். பி-6 என்ற வைட்டமின் பற்றாக் குறையாக இருக்கலாம். 
 
தைராய்டு போன்ற நாளமில்லா சுரப்பிகளின் தாக்கம், போன்ற ஹார்மோன்களின் குறைபாடு காரணமாகலாம். அதிகப்படி நீர் சுரப்பதும், சர்க்கரை அளவு குறைவதும் கூட காரணங்களாக இருக்கலாம். 
 
இதற்கு என்ன சிகிச்சை எடுத்துக் கொள்வது? 
 
தனிப்பட்ட சிகிச்சை கிடையாது.. வைட்டமின்கள், மனநல ஆலோசனை, உடற்பயிற்சிகள் மூலம் இந்த நிலையை கட்டுப்படுத்தலாம். 
 
பொதுவாக என்ன மாதிரியான மாத விலக்கு பிரச்னைகள் உள்ளன? 
பெண்களே தயங்காமல் பேசுங்கள்... மாதவிடாய் பிரச்சினைகள் !
1. குறைந்த அளவு உதிரப்போக்கு 
 
2. உதிரப்போக்கே இல்லாமை. 
 
3. அதிகப்படியான உதிரப் போக்கு 
 
4. சுழற்சி முறையில் மாறுதல் 
 
5.வலியுடன் கூடிய உதிரப்போக்கு.. 
 
இப்படி பல. குறைந்த அளவு உதிரப்போக்கு இது மாதவிலக்கு சுழற்சியில் எந்த நிலையில் குறை இருந்தாலும் ஏற்படலாம். 
 
மிக முக்கியமான காரணங்களில் ஒன்று அதிக மன அழுத்தத்தின் காரணமாக மூளையில் ஒரு பகுதியான ஹைபோதலாமஸ் பாதிக்கப்படுவது. 
 
உதாரணத்துக்கு வீட்டிலோ, பள்ளியிலோ அல்லது அலுவலகத்திலோ ஏதாவது அதிக மன அழுத்தத்துக்கு ஆட்பட்டிருக்கும் போது, உடல் எடை தடாலென்று குறையும் போது, உடல் கொழுப்பு பெரிதும் குறையும் போது 
 
(உ-ம்: அதிக உடற்பயிற்சி, பயிற்சியாளர்கள் மற்றும் வீராங்கனைகள் தீவிர பயிற்சி செய்வது) எண்டார்பின் என்ற ஹார்மோன் சுரந்து அது சென்று ஹைபோதலாமஸின் செயல்பாட்டை தடுக்கலாம்.
3 மாதம் ஸ்கெட்ச் 26 இடங்களில் வெட்டு - கிக் பாக்ஸர் வீழ்ந்த கதை !
தைராய்டு சுரப்பிகளின் செயல்பாட்டில் ஏதாவது கோளாறு இருந்தாலும், ரத்த சோகை, வேறு நோய் இருந்தாலும் (உ-ம்: சிறுநீரக வியாதி, இதய வியாதி போன்றவற்றினாலும் உதிரப்போக்கு குறையலாம். 
 
சினைப்பையில் PCOD (Poly Cystic Ovarian Disease) என்ற நிலை இருந்தாலும் மாதவிலக்கு வராமல் அல்லது மிகக்குறைந்த அளவில் இருக்கலாம். 
 
சில நேரங்களில் மிகச்சிறிய வயதிலேயே சினைப்பை செயலிழந்து விடுவதாலும் மாதவிலக்கு நின்று விடலாம். 
 
இப்படி இருப்பவர்கள் என்னென்ன பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்? 
பெண்களே தயங்காமல் பேசுங்கள்... மாதவிடாய் பிரச்சினைகள் !
முதலில் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஈஸ்ட் ரோஜன், ப்ரொஜெஸ்ட்ரோன் FSH & LH போன்ற ஹார்மோன்கள் அளவை கணக்கிட வேண்டும். 
 
ஸ்கேன் செய்து கர்ப்பப்பை, சினைப்பை சரியான அளவில் சரியான வளர்ச்சி அடைந்துள்ளதா என்று பார்க்க வேண்டும். 
 
தேவைப்பட்டால் மருத்துவர் D & C செய்து கர்ப்பப்பையின் உள்சதையை எடுத்தும் பரிசோதனை செய்வார். சில குழந்தைகள் 16 அல்லது 18 வயதில் தான் பருவம் அடைகிறார்கள். 
 
இதனால் பிள்ளைப்பேறு பாதிக்குமா? சிறு வயதிலேயே பூப்பெய்திய பெண்களுக்கு 50 வயதை தாண்டி தான் விலக்கு நிற்குமா?
HIV, AIDS தாக்காமலிருக்க முன்யோசனைகள் !
உடல்வாகு, உணவு, வளர்கிற சூழ்நிலை, குடும்ப பின்னணி ஆகியவற்றை பொறுத்து பூப்பெய்தும் வயது மாறுபடலாம். 
 
சிலர் 9 அல்லது 10 வயதில் பூப்பெய்த உடல்வாகுதான் காரணம் என்றாலும், சில சமயம் ஹார்மோன்கள் மாறுபாட்டாலும் இருக்கலாம். 
 
தாமதமாக பூப்பெய்துவதால் பிள்ளைப் பேறுக்கு எந்த பாதகமும் ஏற்படுவதில்லை. பூப் பெய்தும் வயதுக்கும் மாதவிலக்கு நிற்கும் வயதுக்கும் சம்பந்தம் இல்லை. 
 
சிலருக்கு உதிரப்போக்கு 10நாள் வரை இருந்து தொல்லை கொடுக்கிறதே… ஏன்? 
 பெண்களே தயங்காமல் பேசுங்கள்... மாதவிடாய் பிரச்சினைகள் !
பெரிய மனுசியான முதலிரண்டு ஆண்டுகளில் மாதவிலக்கின் போக்கில் மாறுதல் இருப்பது இயற்கை. பொதுவாக 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு வருவதும், 
 
உதிரப்போக்கு சராசரி 5 நாள் இருப்பதும் இயற்கை தான். உடல் வளர்ச்சியின் போது சுரக்கும் ஹார்மோன்களும் பாலின உறுப்புகளின் வளர்ச்சியும் இணைந்து செயலாற்றுகிற வரை மாதவிலக்கின் போக்கில் மாற்றங்கள் இருக்கலாம். 
 
சில பெண்களுக்கு பூப்புக்கு அடுத்த மாதவிலக்கு பல மாதங்கள் கழித்தோ அல்லது ஓராண்டு கழித்தோகூட ஏற்படலாம். 
 
இது இரண்டு ஆண்டுகளில் சரியாகி விடும். ரத்தப் போக்கு 8 அல்லது 10 நாளுக்கு அதிகமாக இருந்தால் ரத்தசோகை ஏற்படும். 
 
மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். பூப்புக்குப் பின் ஒரு மாதத்துக்குள் பலமுறை வந்தாலும், பல மாதங்களுக்கு ஒரு முறை வந்தாலும் பூப்பெய்திய இரண்டு ஆண்டுகளுக்குள் ஒழுங்கான சுழற்சிக்குள் வந்து விடும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)