தலைமுடி உதிர்வு என்பது தற்போது பலருக்கும் இருக்கும் ஒரு பெறும் பிரச்சினை ஆகும். முடி கொட்டுவதற்கான காரணத்தை அறிந்து கொண்ட பிறகு பராமரித்தால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.
அதே போல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான முடி இருக்கும். அது என்ன என்று தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஒரு சிலருக்கு சாதாரண கூந்தல் இருக்கும்.
இடுப்பு மடிப்பு நல்லதா?
இன்னும் சிலருக்கு வறண்ட கூந்தல், எண்ணெய் பசையுள்ள கூந்தல் மற்றும் பலவீனமான கூந்தலை பெற்றிருப்பார்கள்.
இந்த நான்கு வகை கூந்தலில் உங்கள் கூந்தல் எந்த வகை என்று அறிந்த பிறகு அதற்கு ஏற்ப பராமரித்து வந்தால் முடியின் வளர்ச்சி அமோகமாக இருக்கும்.
தலைமுடி கொட்டுவதற்கு இரண்டே இரண்டு காரணங்கள் தான் உள்ளன:
1. மரபணு சார்ந்த பரம்பரை வழுக்கைத் தலை.
2. தலைமுடி அமைந்த தோலின் (Scalp) மீது ஏற்படும் அசுத்தம் மற்றும் அதன் காரணமாய் ஏற்படும் பூஞ்சை (Fungus) மற்றும் ஒட்டுண்ணித் தொற்று. முதல் காரணியைத் தடுக்க இயலாது.
இரண்டாவது காரணியைத் தடுக்க முடியும். தலைமுடியின் ஆதாரமான மண்டையோட்டுத் தோலை (Scalp) சுத்தமாக சுகாதாரமாக வைத்திருப்பதின் மூலம் இரண்டாவது காரணியைத் தடுக்க முடியும்.
ரோட்டில் காயங்களுடன் பிணமாக கிடந்த திருநங்கை... உறைய வைக்கும் சம்பவம் !
முடிக்கு பளபளப்பையும் எண்ணெய் பிசுக்குத் தன்மையையும் இயற்கையாகவே வழங்கக்கூடியது தோலுக்கு அடியிலுள்ள செபேஷியஸ் சுரப்பி (Sebaceous Gland).
அடுத்து வியர்வைச் சுரப்பி மூலம் உப்பு நீர். அத்துடன் நாமும்வேறு எண்ணெய்யைத் தடவுகிறோம். எண்ணெய்யும் உப்பும் தோலில் படியும் அழுக்கும் பூஞ்சைகளுக்கு அருமையான உணவு.
தலையில் எண்ணெய் தடவுவது என்பது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போன்றதாகும்; பூஞ்சைகளும் ஒட்டுண்ணிகளும் செழித்து வளர நாமே வழிவகுத்து விடுகிறோம்.
வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண்கள் மறக்கக் கூடாத விஷயம் !
தலைமுடியின் ஆதாரமான மண்டையோட்டுத் தோலை (Scalp) சுத்தமாக சுகாதாரமாக வைத்திருப்பதின் மூலமே இரண்டாவது காரணியைத் தடுக்க முடியும்.