பிஎம்ஐ என்னும் உடல் குறியீட்டு எண், உடல் எடை மற்றும் உயரம் ஆகியவற்றைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
இதன் மூலம் உடலின் உயரத்திற்கும் எடைக்கும் தொடர்பு உள்ளதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. உடல் உயரத்தை வைத்து கணக்கிடப்படும் உடல் குறியீட்டு எண் நமது எடை சரியான அளவில் உள்ளதா என்பதை உறுதி செய்கிறது.
உடல் எடை அதிகமான அளவு இருந்தால் அதிகமான கலோரிகளை எரிப்பதால் உடல் எடை குறைகிறது. இந்த முறையை பின்பற்றும் சிலருக்கு உடல் எடை விரைவாக குறையும்.
ஆனால் ஒருசிலருக்கு எத்தனை முறை முயற்சித்தாலும் உடல் எடையில் இழப்பு ஏற்படுவதில்லை. பெரும்பாலும் இந்த தோல்வியை சந்திப்பவர்கள் குறைவான உயரத்தைக் கொண்டிருக்கக்கூடும்.
ஜிம்மில் பல மணிநேரம் உடற்பயிற்சி செய்தாலும், ஒரு சரியான சமச்சீர் உணவை எடுத்துக் கொண்டாலும் இவர்களால் உடல் எடையை குறைக்கவே முடியாது. இது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?
குள்ளமாக இருப்பவர்கள் ஏன் எடை இழப்பை கடினமாக உணர்கின்றனர் ?
* உயரமாக இருக்கும் நபர்களுக்கு தசை வலிமை அதிகமாக இருக்கும் காரணத்தினால் வளர்சிதை மாற்றம் நன்றாக இருக்கும்.
நீங்கள் உயரமாக இருந்தால் உங்கள் தசைகளின் நெகிழ்வுத்திறன் அதிகமாக இருக்கும். அதனால் உறங்கும் போதும் ஓய்வெடுக்கும் போதும் உங்கள் உடல் அதிகமான கலோரிகளை எரிக்க முடிகிறது.
* அதாவது ஒல்லியான தசைகள் காரணமாக சிறப்பான வளர்சிதை மாற்றம் ஏற்பட்டு அதிக கலோரிகள் எளிதாக எரிக்கப்படுகின்றன. இருப்பினும் உடல் செயல்பாடுகள் இங்கு முக்கிய இடம் பிடிக்கின்றன.
* அதாவது குறைவான உடற்பயிற்சி அதிக உடல் எடையை பெற்றுத் தருகிறது. அதே நேரம் உணவு அட்டவணையை சரியாக பின்பற்றுவதும் அவசியம்.
எப்போதும் உங்கள் பசிக்கு சமமான உணவை உண்பதற்கு பதிலாக, சற்று குறைவான அளவு உணவை உண்ணுவதால் அதிக கலோரிகள் உண்டாகாமல் தடுக்கப்படும்.
குள்ளமாக இருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய எடை இழப்பு குறிப்புகள்:
பிஎம்ஐ பரிசோதனை
குறைவான உயரம் கொண்டவர்கள் ஒவ்வொரு மாதமும் உடல் குறியீட்டு எண்ணுக்கான பரிசோதனை மேற்கொண்டு அதற்கேற்ற விதத்தில் டயட் பின்பற்றுவது நல்ல பலனைத் தரும்.
இதனால் உங்கள் உடலின் வளர்சிதை மாற்றம் குறித்த ஒரு தெளிவு உங்களுக்குக் கிடைக்கும். இதன் மூலம் அடுத்தது என்ன செய்யலாம் என்பது குறித்து உங்களால் விரைவாக கண்டுகொள்ள முடியும்.
பளு தூக்குதல்
உயரம் குறைவாக இருக்கும் நபர்களுக்கு தசைகளில் குறிப்பாக உடலின் கீழ் பகுதியில் கொழுப்பு படியும். இதனால் அவர்களுக்கு யோகா அல்லது மற்ற உடற்பயிற்சி செய்வது கடினமாக இருக்கும்.
இந்த நிலையில் அவர்கள் எடை இழப்பிற்காக பளு தூக்கும் பயிற்சியை பின்பற்றலாம். தினமும் 30 நிமிடங்கள் இந்த பயிற்சியை பின்பற்றுவதால் உங்கள் எடை குறையும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
இந்த பயிற்சியால் தசைகளில் படிந்துள்ள கொழுப்புகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறையத் தொடங்கும்.
உயர் புரத உணவை எடுத்துக் கொள்ளுங்கள்
உயரம் குறைவாக இருப்பவர்கள் விரும்பியதெல்லாம் உட்கொள்ள முடியாது. விரும்பிய உனவை அளவு கட்டுப்பாடு இல்லாமல் உண்ணுவதால் எடை குறைப்பு சாத்தியமில்லாமல் போய் விடும்.
நீங்கள் குள்ளமாக இருந்து உங்கள் எடை அதிகமாக இருந்தால் அதனை குறைக்க எளிய வழி, உங்கள் எடை அதிகரிக்காமல் பார்த்து கொள்வது மட்டுமே.
மேலும் உங்கள் உணவில் புரதத்தின் அளவை அதிகரித்துக் கொள்வது நல்லது. மேலும் பசியுணர்வு மற்றும் உணவு குறித்த ஆர்வம் ஆகிய இரண்டையும் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கொள்வது நல்லது.
ஒட்டப்பயிற்சி மற்றும் யோகா
குள்ளமாக இருப்பவர்கள் யோகா பயிற்சி செய்யலாம். ஹாலாசனா, அர்த்த சந்திராசனா, பாதஹஸ்தாசனா, புஜங்காசனா, சக்ராசனா போன்ற எடை இழப்பிற்கான யோகா நிலைகளை பயிற்சி செய்யலாம்.
அதே போல் ஒட்டப்பயிற்சி செய்வதால் தசைகளுக்கு திடீர் அழுத்தம் ஏற்படாமல் மெதுவாக எடை இழப்பு ஏற்படலாம்.
கலோரி கால்குலேட்டர் பயன்படுத்துங்கள்
எப்போதும் உங்களுடன் ஒரு கலோரி கால்குலேட்டர் வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் தினசரி உங்கள் கலோரி அளவை கணக்கிட முடியும்.
மேலும் தினசரி நீங்கள் எடுத்து கொள்ளும் கலோரி அளவு சரியான முறையில் நாள் முழுவதும் பிரிக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
இந்த அளவு சரியான நிலையில் இல்லை என்றால் அதற்கேற்ற விதத்தில் உங்கள் உணவையும், நீர் அளவையும் அந்த நாளில் பிரித்துக் கொள்ளுங்கள்.
உங்கள் உயரத்திற்கு ஏற்ற உணவை நீங்கள் எடுத்துக் கொள்வதை இந்த முறை உங்களுக்கு தெளிவு படுத்தும்.