உங்கள் புருவங்கள் அடர்த்தியாக?

Fakrudeen Ali Ahamed
0
* விளக்கெண்ணெயை சிறிது வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனைக் கொண்டு புருவங்களை மசாஜ் செய்து வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், புருவங்கள் அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரும்.
* தேங்காய் எண்ணெய் முடிக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் இரவில் புருவங்களை தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் காட்டன் கொண்டு துடைக்க வேண்டும்.
கர்ப்பப்பையில் கட்டிகள் பரிசோதித்துக் கொள்வதே சிறந்தது !
* பாதாம் எண்ணெய் பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ளது. இலை முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

எனவே பாதாம் எண்ணெய் கொண்டு வாரம் இரண்டு முறை மசாஜ் செய்தால் புருவங்களின் வளர்ச்சியைக் காணலாம்.
கொழுகொழுவென குண்டாகும் குழந்தைகளே ஜாக்கிரதை !
* ஆலிவ் ஆயில் கூட முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். அதற்கு ஆலிவ் ஆயிலை சிறிது தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் போது தினமும் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

* கற்றாழை ஜெல்லை புருவங்களில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தாலும், புருவங்கள் அடர்த்தியாகவும், கருமையாகவும் வளரும்.

* வெங்காய சாற்றினை காட்டனில் நனைத்து புருவங்களில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
* தேங்காய் பாலும் புருவங்களின் வளர்ச்சியையும், அதன் அடர்த்தியையும் அதிகரிக்கும். அதற்கு தேங்காய் பாலை புருவங்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

* முட்டையின் மஞ்சள் கருவைக் கொண்டு புருவங்களை மசாஜ் செய்து வந்தாலும், அதுவும் புருவங்களின் அடர்த்தி மற்றும் கருமையை அதிகரிக்கும்.
குள்ளமாக இருந்தால் உடல் எடையைக் குறைக்க முடியாது ஏன் தெரியுமா?
* வெந்தயத்தை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, புருவங்களில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனாலும் நல்ல பலன் கிடைக்கும்.

* தினமும் இரண்டு முறை பாலைக் கொண்டு புருவங்களை மசாஜ் செய்து வந்தாலும், புருவங்களின் வளர்ச்சி அதிகரிக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)