நீங்கள் பிரசவமாக இருக்க இரண்டு விதமான கேள்விகள் உங்கள் மனதில் எழக்கூடும். அவை என்ன வென்றால்... 'பிறக்க போவது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா?',
'சுகப்பிரசவமா? சிசேரியனா?'... இன்றும் வெளிநாட்டில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை பெற்றுக் கொள்வதைக் காட்டிலும்... சுகப்பிரசவத்தின் மீது ஆர்வம் காட்டுபவர்கள் தான் அதிகமாம்.
ஒரு பெண் கர்ப்பமாக இருந்தால், அவளுக்கு என்ன பயிற்சி தேவை? நீச்சல் பயிற்சி அளிக்கலாமா?
இப்படி பலவித திட்டங்களை முன்கூட்டியே செய்திட, இதனால் சுகப்பிரசவம் என்பதும் மிகவும் எளிதாக ஒரு பெண்ணுக்கு அமைகிறதாம்.
அறுவை சிகிச்சை என்பதை விட சுகப்பிரசவம் நடந்த பெண்ணுக்கு தான் பணிவிடைகள் என்பது மிகவும் அவசியமாகிறது.
அவள் என்ன செய்ய வேண்டும்? செய்யக்கூடாது? போன்றவை முக்கியமான விஷயங்களாக அவர்கள் வாழ்வில் அமைவது வழக்கம் தான். அதைப்பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்வோமா?
சுகப்பிரசவத்தினால் உண்டாகக்கூடிய பிரச்சனைகள் எவை?
சுகப்பிரசவம் கழித்து முதல் 6லிருந்து 8 வாரங்கள் வரை உங்கள் உடல்நிலை மோசமாக இருக்கக்கூடும். அவை...
1. குழந்தையை பெற்றதால் பிறப்புறுப்பு சுருக்கத்துடன் இருக்கும். சுகப்பிரசவம் கழித்து மெல்ல அது இயல்பு நிலைக்கு திரும்ப, வலியானது காணக்கூடும்.
உங்கள் பிறப்புறுப்பு இயல்பு நிலையை அடைய 6 முதல் 8 வாரங்கள் ஆகலாம்.
2. உங்களுடைய கழுத்து, தாடை, கை தசைகள் வேதனை அடையக்கூடும். காரணம், சுகப்பிரசவத்தின் போது வலியால் துடிக்கும் நீங்கள் கழுத்து, கை மற்றும் தாடைக்கு அதிக வேலைத்தந்து அசைப்பதாலே ஆகும்.
3. முதல் 2 லிருந்து 4 வாரங்களுக்கு, பிறப்புறுப்பி லிருந்து இரத்தம் வழியக்கூடும்.
4. உங்கள் பிறப்புறுப்பில் அசவுகரிய நிலையை நீங்கள் உணர்வீர்கள்.
5. உங்கள் கால் மற்றும் பாதங்கள் வீங்கி காணப்படலாம்.
6. முதல் சில வாரங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்திடலாம்.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்த உங்கள் குழந்தைக்கு பணிவிடைகளை செய்ய ஆயத்தம் ஆகும் முன் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருந்திடுங்கள்.
அதற்கு இதோ உங்களுக்காக சில வழிமுறைகளை நாங்கள் தருகிறோம்.
1. உங்கள் பிறப்புறுப்பை பாதுகாக்க அட்டை பயன்படுத்தும்போது ஐஸ் பேக் இடையே பயன்படுத்தலாம்.
2. நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது, கொஞ்சம் வெதுவெதுப்பான நீரை பிறப்புறுப்பு பகுதியில் தடவி வலியை குறைக்கலாம்.
3. பிறப்புறுப்பு மற்றும் ஆசன வாயுவை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டியது அவசியம்.
4. நீங்கள் உட்காரும் போது தலையணை வைத்து அமர்வது வலியை குறைக்கும்.